என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கெஜ்ரிவால்"
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.
இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார். இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.
இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர் கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார்.
இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. எதிர்க்கட்சிகள் நடத்திய 3-வது பிரமாண்ட பேரணி இதுவாகும்.
இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் “பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசிய கடைசி நாள். இத்துடன் அவரது அரசின் ஆயுட்காலம் முடிந்து விட்டது” என்று தெரிவித்தனர்.
இந்த கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் வீட்டில் ஆலோசனை செய்தனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை பலப்படுத்துவது, 15 நாட்களுக்கு ஒருமுறை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வியூகம் அமைப்பது, மாநிலங்கள் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.
இந்த கூட்டத்துக்கு பின்பு ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, “இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.
குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளோம். இனிவரும் நாட்களில் நாங்கள் ஒன்று பட்டு செயல்படுவோம்.
மாநிலத்தில் பிரச்சினை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம். நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்து விட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மாநிலத்தில் அந்த கட்சியை எதிர்த்துதான் ஆட்சி செய்கிறது. தேசிய அளவில் மோடிக்கு எதிராக ஒன்று சேர்வது தொடர்பாக அவர்கள் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணியில் 15 கட்சிகள் இணைந்து செயல்பட இருக்கின்றன. #modi #rahulgandhi #mamata #parliamentelection
லக்னோ:
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.
இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-
கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.
பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தவண்ணம் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில், தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்”. #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மற்றும் இந்தியா கேட் அருகில் உள்ள போட் கிளப் பகுதிகளில் பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழக்கம். அன்னா ஹசாரே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பல ஆண்டுகளாக இந்த இடங்களில்தான் தங்களது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த புகாரை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள், ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்தவும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. அதை ஒட்டுமொத்தமாக தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே, ஜந்தர் மந்தர், போட் கிளப், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு, டெல்லி காவல்துறை ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள்ளாக போராட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலமாக மாற்றும் முயற்சி ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இதை சுப்ரீம் கோர்ட் உரிய முறையில் தகர்த்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #KejriwalwelcomesSCorder #JantarMantar #JantarMantarprotests
டெல்லி முதல் மந்திரி - ஆளுநர் இடையிலான அதிகாரப் போட்டிக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்வளித்து இருந்தாலும், உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு விவகாரத்தில் முதல் மந்திரி - ஆளுநர் இடையே பணிப்போர் நீடித்து வருகின்றது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் இன்று சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
குறிப்பாக, டெல்லி ஆளுநரின் போக்கை கண்டித்து அவர் முறையிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இன்னும் மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக ராஜ்நாத் சிங் தன்னிடம் உறுதியளித்ததாக இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் தெரிவித்தார். #servicesissue #KejriwalmeetRajnath
டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.
இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews
டெல்லியில் மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம்? என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பிரிவு கடந்த வாரம் தீர்ப்பு கூறியது.
அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கே அதிக அதிகாரம் உள்ளது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று கவர்னர் செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் டெல்லி மாநில அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கொண்ட சேவை துறை அதிகாரங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அதற்கு பதில் அளித்து கவர்னர் அனில்பைஜால் முதல்-மந்திரி கெஜ்ரி வாலுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதைத்தொடர்ந்து இப்போது கெஜ்ரிவால் மீண்டும் கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் முழு அம்சங்களையும் கவர்னர் அமல்படுத்த வேண்டும். ஆனால், தீர்ப்பில் ஒரு சில அம்சங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு விட்டு சில பகுதிகளை ஏற்க மறுப்பது சரியல்ல.
ஒரே தீர்ப்பில் ஒரு பத்தியில் உள்ள அம்சங்களை மட்டும் ஏற்று கொள்கிறீர்கள். அதே பத்தியில் உள்ள மற்றொரு அம்சத்தை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?
அதிகாரிகள் மாற்றம் தொடர்பான சேவைதுறை அதிகாரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் தீர்ப்பின் முக்கிய அம்சமாகும். அதை எப்படி ஏற்க மறுக்கலாம்?
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி இருந்தார்.
இந்த கடிதம் தொடர்பாக கவர்னர் அனில்பைஜால் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், சேவை அதிகாரம் தொடர்பான அப்பீல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில், தீர்வு வருவதற்கு முன்பாக முதல்-மந்திரி தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார்.
மேலும் நான் எழுதிய கடிதத்தில் சில பகுதிகளை மட்டுமே குறிப்பிட்டு தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு குறை கூறுகிறார் என்று கூறினார்.
டெல்லியில் ஒவ்வொரு தொகுதியிலும் 1100 பேரை அரசே புனித ஸ்தலங்களுக்கு அழைத்து செல்லும் திட் டத்தை கெஜ்ரிவால் கொண்டு வந்தார். ஆனால், கவர்னர் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததால் கிடப்பில் கிடந்தது.
இப்போது சுப்ரீம் கோர்ட்டு அமைச்சரவைக்குதான் அதிகாரம் என்று தீர்ப்பு கூறியதால் நேற்று இந்த திட்டத்தை முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ArvindKejriwal
புதுடெல்லி:
டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். சுமார் 3 ஆண்டுகள் சட்ட போராட்டத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை ஆளுனருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்று தெளிவுப் படுத்தி கூறியுள்ளது. அதில் காவல்துறை, சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகள் துணைநிலை ஆளுனரின் கீழும், மீதமுள்ள துறைகளின் அதிகாரங்கள் மாநில அரசின் கீழும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்- மந்திரி கெஜ்ரிவாலும், அவரது அமைச்சர்களும் நேற்று துறை ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார்கள். துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பணியாளர் சேவைத் துறைக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
துணைநிலை ஆளுனர் சில அதிகாரிகளை மாற்றி பிறப்பித்திருந்த உத்தரவுகளை ரத்து செய்யும்படி உத்தரவிட்டார். அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்.
ஆனால் அவரது உத்தரவை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து துணை முதல்- மந்திரி மணீஷ் சிசோடியா அந்த அதிகாரிகளுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி பேசினார்.
ஆனால் அதன் பிறகும் அவரது உத்தரவை டெல்லி அதிகாரிகள் அமல்படுத்த முன்வரவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அமைச்சர்களின் உத்தரவுகளை ஏற்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்ட பிறகும், மற்றொரு வழக்கை காரணம் காட்டி அதிகாரிகள் தங்களுக்கு பணிய மறுப்பது ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் டெல்லி மந்திரிகளுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்து அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், “அமைச்சர்களின் உத்தரவுகளை அதிகாரிகள் ஏற்க மறுப்பது கோர்ட்டு அவமதிப்பு குற்றமாகும். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். எனவே அமைச்சர்களின் உத்தரவை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே துணை நிலைஆளுனர் அனில் பய்ஜாலுக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப உரிய முறையில் செயல்பட ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் துணை நிலை ஆளுனரை சந்தித்து பேச நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து துணைநிலை கவர்னர் அனில் பய்ஜாலை இன்று (வெள்ளிக்கிழமை) கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுனரிடமே இருப்பதால் அதற்கு ஏற்ப கவர்னர் செயல்படுவார் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. #Kejriwal
மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பு, டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி' எனமாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் சிறப்பாக வாதாடி சாதகமான தீர்ப்பை பெற்று தந்ததற்காக அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்க முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்தார். அதன்படி, அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற கெஜ்ரிவால், அவருக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல் கோபால் சுப்பிரமணியம், இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான் உள்ளிட்ட வழக்கறிஞர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். #KejriwalThankChidambaram
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்