என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெரம்பூர்"
பெரம்பூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
குடிநீர் வாரியம் லாரிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.
பெரம்பூர் தீட்டிதோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க இயலாத நிலையில் இருப்பதால் அதனை வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்தும் நிலை உள்ளது.
குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பேப்பர் மில் சாலைக்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்கள் வழியில் நிறுத்தப்பட்டன. கார், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத படி நின்றன.
தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
ஆனாலும் 2 மணி நேரம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாற்று பாதை வழியாக சென்றனர்.
இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தங்கவேலு மனைவி மற்றும் மகளுடன் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை மர்மநபர்கள் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். அந்த லாக்கரில் சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் இருந்து தங்கவேலு வந்த பிறகு தான் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பூர்:
பெரம்பூர் பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் பிரைன் கிளார்க் (45). ஆங்கிலோ இந்தியர்.
இவருடைய தம்பி கேரி கிளார்க் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தில் வாழ்ந்து வந்தார்.
இன்று காலை பாக்சன் தெருவில் பிரைன் கிளார்க் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். யாரோ அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்ததும், செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்தது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
கொலைக்கான காரணம் என்ன? அவருக்கு யாருடன் பழக்கம்? என்பது குறித்து பிரைன் கிளார்க் குடியிருந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவருடைய தம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை திரும்புகிறார்.
பெரம்பூர்:
புளியந்தோப்பு பட்டாளம் ராமானுஜம் காலனியை சேர்ந்தவர்வேல் முருகன். குவைத்தில் இருக்கிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி.
நேற்று மதியம், ராஜலட்சுமி பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.4 லட்சம் எடுத்தார். அதை தனது மொபட் சீட்டின் அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.
அங்கிருந்து போங்கல்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். மொபட்டை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை பார்த்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜலட்சுமி மொபட்டில் வீடு திரும்பினார்.
பணத்தை எடுப்பதற்காக சீட்டை திறந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி ஓட்டேரி போலீசில்புகார் செய்தார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
பெரம்பூர்:
பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்தவர் அமர்நாத் (19). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ரமணாநகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்த 3 பேர் அமர்நாத் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார்கள்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் அவரிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை கத்தியை காட்டி பறித்தனர். பின்னர் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார்கள்.
திருடன் திருடன் என்று அமர்நாத் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். அப்போது அருகில் உள்ள சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிகளை மடக்கி பிடித்தார்.
அவர்கள் பறித்துச் சென்ற பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தார்.
அப்போது அவர்கள் புழலை சேர்ந்த பாட்சா (19), எருக்கஞ்சேரியை சேர்ந்த தீபக் (21), ஜெயசந்திரன் (21) என்பது தெரியவந்தது. பல இடங்களில் இது போல் கத்தியை காட்டி பணம், செல்போன்களை பறித்தது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிளும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பெரம்பூர்:
பெரம்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் மலைவேல் மற்றும் போலீசார் பெரம்பூர் பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பெயர் பரத் (19), காமேஸ்வரன் (21) என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். விசாரணையில் அவர்கள் கொண்டு வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி மற்றொரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோட்டார்சைக்கிள்கள் பெரம்பூர் நியூ சின்னையா காலனியைச் சேர்ந்த மோகனசுந்தரம், வியாசர்பாடி ரேணுகா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரிடம் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அவற்றை எப்படி திருடினார்கள் என்பதையும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான பரத் ஓட்டேரி சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர். மிண்ட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் கைதான காமேஸ்வரன் ஜமாலியா ஈ.எஸ்.ஐ. கார்டனைச் சேர்ந்தவர். 2 பேரும் கூட்டு சேர்ந்து மோட்டார்சைக்கிள்களை திருடி உள்ளனர்.
வேறு இடங்களிலும் மோட்டார் சைக்கிள் திருடினார்களா? வேறு யாருடனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்