என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 105184
நீங்கள் தேடியது "டிக்டாக்"
ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
வீடியோ பகிர்ந்து கொள்ளும் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2019 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஆப் ஸ்டோரில் உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் இருக்கிறது.
சென்சார்டவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2019 முதல் காலாண்டில் மட்டும் ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3.3 கோடி பேர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர ஆப் ஸ்டோரில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு காலாண்டில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் 88.6 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். இவற்றில் 99 சதவிகித டவுன்லோடுகள் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின் மீண்டும் களமிறங்கிய இருக்கும் டிக்டாக் செயலி முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறது. #TikTok
இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் டிக்டாக் ஆப் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
பின் சென்னை உயர்நீதிமன்றம் செயலிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட்டு செயலிக்கு விதித்த தடையை நீக்கியது. இதன் தொடர்ச்சியாக பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்த டிக்டாக் தற்சயம் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்சமயம் ஐ.ஓ.எஸ். மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இலவச செயலிகளுக்கான சோஷியல் பிரிவில் டிக்டாக் செயலி முதலிடத்தில் இருக்கிறது.
பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் #ReturnOfTikTok என்ற தலைப்பில் புதிய திட்டத்தை துவங்கி அதன் மூலம் செயலியை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. #ReturnOfTikTok திட்டத்திற்கு டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி பயனர்கள் சிறு வீடியோக்களை உருவாக்கி #shareandwin ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை டிக்டாக்கின் #ReturnOfTikTok திட்டத்தை சுமார் 504 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தினந்தோரும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.3,49,63,000 வரை நட்டத்தை சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தடை காரணமாக சுமார் 250 பேருக்கு வேலை பறிபோகும் நிலை உருவானதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை என நம்புவதாக அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க சுமார் 150 சந்தைகளில் சுமார் 75 மொழிகளில் டிக்டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கான தடை எந்த வகையிலும் பலன் தராது என்ற வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
டிக்டாக் மீதான தடை இடைக்கால நடவடிக்கை என நினைக்கிறேன். அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என டிக்டாக் இந்தியாவின் மூத்த அதிகாரி சுமேதாஸ் ராஜ்கோபால் தெரிவித்தார். இத்துடன் செயலி தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. டிக்டாக் சமூகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை டிக்டாக் செயலிக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது குறி்ப்பிடத்தக்கது.
செயலியில் பரவும் தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினரின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ராஜ்கோபால் தெரிவித்தார். தங்களது குழுவினர் தரவுகளை நீ்க்கி வருவதாகவும், கடந்த வாரம் மட்டும் விதிகளை மீறியதாக சுமார் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் செயலி குழந்தைகளிடம் ஆபாசத்தை கொண்டு சேர்க்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், செயலியை பல்வேறு கலைஞர்கள் பயன்படுத்த துவங்கியிருப்பதாக ராஜ்கோபால் தெரிவித்தார்.
பல்வேறு பிரபலங்கள் டிக்டாக் பயன்படுத்துவோரின் திறமையை பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார். டிக்டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது உண்மையில் பலன் தருமா என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலியை ஏற்கனவே பல கோடி பேர் பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது.
எனினும், செயலி நீக்கப்பட்டுவிட்டதால் மட்டும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் பிரபல வீடியோ தளமாக அறியப்படும் டிக்டாக் செயலியில் ஆபாசம் பரவுவதாக பலதரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.
இதன் காரணமாகவே அரசு கோரிக்கையை ஏற்று செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. செயலி தடை செய்யப்பட்டு விட்டதால் அது பலனளிக்கும் என கூறிவிட முடியாது.
ஏற்கனவே டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் அதனை ஷேர் இட் போன்ற செயலியை கொண்டு மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனை தரவிறக்கம் செய்து மற்றவரும் புதிய பயனராக பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் பிரச்சனையை எதிர்கொள்ள தெளிவான அணுகுமுறை அவசியமாகும், இதனை தொழில்நுட்பத்தாலோ அல்லது மற்ற சட்டங்களை கொண்டு சரி செய்து விட முடியாது என டெக் ஆர்க் எனும் சைபர் நிறுவன நிறுவனர் ஃபைசல் கவூசா தெரிவித்தார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடம் டிக்டாக் செயலியை நீக்க உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 3 ஆம் தேதி பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்திருக்கும் நிலையில் இதனை நான்கு மாதங்களில் ஒன்பது கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இதனை டவுன்லோடு செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.
சீனாவை சேர்ந்த வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 8.86 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். மொபைல் ஆப் சார்ந்த ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட்-டேன்ஸ் டிக்டாக் செயலியை நிர்வகிக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்ததாக டிக்டாக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் டிக்டாக் செயலியில் ஆபாச காட்சிகள் ஊக்குவிக்கப்படுவதால், குழந்தைகளை மனதளவில் பாதித்து அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என்பதால் செயலியை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
டிக்டாக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 188 கோடியாக இருக்கிறது என சென்சார் டவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 70 சதவிகிதம் அதிகம் ஆகும்.
டிக்டாக் செயலியின் மொத்த டவுன்லோடுகளில் சுமார் 99 சதவிகிதம் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகள் இருக்கின்றன.
டிக்டாக் செயலியை பயன்படுத்தும் இந்திய பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #TikTok
டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் மூலம் இந்திய பயனர்களுக்கு தங்களது அக்கவுண்ட்டை முன்பை விட அதிக சிறப்பாக கையாள முடியும்.
இந்த அம்சம் கமென்ட்க்ளில் அவர்கள் விரும்பும் வார்த்தைகளை ஃபில்ட்டர் செய்யும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. ஃபில்ட்டர் கமென்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் குறிப்பிட்ட 30 வார்த்தைகளை கமென்ட் பகுதியில் இருந்து நீக்கிவிடும்.
பயனர்கள் ஒருமுறை வைத்த வார்த்தைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என டிக்டாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென டிக்டாக் இந்தியா சைபர் பீஸ் பவுன்டேஷனுடன் இணைந்திருக்கிறது.
தற்போதைய பாதுகாப்பு அம்சங்களின் படி பயனர்கள் தங்களது வீடியோக்களில் யார் கமென்ட் செய்ய வேண்டும் என்றும் யார் ரியாக்ட் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்க முடியும். இதேபோன்று பயனர்கள் தங்களுக்கு மெசேஞ் மற்றும் வீடியோக்களை யார் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.
முன்னதாக இந்திய பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சூழலை செயலியில் உருவாக்க டிக்டாக் குறிக்கோள் கொண்டிருப்பதாக தெரிவித்தது. சீனாவை சேர்ந்த சமூக வலைதளமான டிக்டாக் செயலியை தடை செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
சீனாவை சேர்ந்த பைட் டேன்ஸ் எனும் நிறுவனம் இந்த செயலியை 2016 ஆம் ஆண்டு சீனாவில் டோயுன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது. பின் 2017 ஆம் ஆண்டு இந்த செயலி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
உலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள செயலியான டிக்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.
வீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது. 100 கோடி
டவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.
அந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் ஃபேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.
2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்திருக்கிறது.
பிரபல மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் தற்சமயம் டிக்டாக் சேவைக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #musically #TikTok
இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான்.
சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள், தரரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர்.
பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியது.
மியூசிக்கல்.லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது.
அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். #musically #TikTok
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X