search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடிகள்"

    பெரம்பலூர் மாவட்டத்தில் 78 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் நெருக்கடி மிகுந்தவை என மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலை (2019) முன்னிட்டு பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் பதற்றமானவை, 90 சதவீதத்திற்கு மேல் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் நெருக்கடியானவை என பிரிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 332 வாக்குச்சாவடி மையங்களில் 36 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 4 வாக்குச்சாவடி மையங்கள் நெருக்கடியானவை எனவும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் உள்ள 320 வாக்குச்சாவடி மையங்களில் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும், 1 வாக்குச்சாவடி மையம் நெருக்கடியானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் சுமூகமான முறையில் தேர்தல் நடத்த போலீஸ் துறையினர் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) பாலசுப்ரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. #VotersList
    சென்னை:

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23-ந்தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


    4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுவரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    "நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in  என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    2 மாத பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடந்து முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  #VotersList
    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 73 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #kairanabypoll
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதி எம்.பி ஹுகும் சிங் சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து, கைரானா உள்ளிட்ட காலியாக இருந்த 4 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று மேற்கண்ட அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. கைரானா மற்றும் நூர்ப்பூர் தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து கைரானா தொகுதியில் 73 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்தால் நாளை 73 வாக்குச்சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #kairanabypoll
    ×