search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது.
    • பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும்.

    சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தில் அய்யனார் சுவாமி, ஊர்காவலன்சுவாமி, கொடிப்புலி கருப்புச்சாமி ஆகிய கோவில்களின் குதிரை எடுப்பு திருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. குதிரை எடுப்பு திருவிழா நேற்று மாலை வாணவேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது. முதலில் சாமியாடிகள் அழைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சாமிசிலை மற்றும் குதிரை சிலைகளை நான்கு வீதி வழியாக சாமியாடிகள், பொதுமக்கள் எடுத்து வந்தனர். சாமிசிலை, குதிரைகள் கிராமத்தின் பொது மந்தையில் வைக்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் இன்று அய்யனார் கோவில், ஊர்க்காவலன் சாமி, கொடிப்புலி கருப்புசாமி ஆகிய கோவில்களுக்கு சம்பந்தப்பட்ட சாமி சிலை மற்றும் குதிரைகள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடைபெறும். இவ்விழாவில் பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர் அருகே உள்ளது சாத்தமங்கலம் கண்மாய்க்கரையில் ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதற்காக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 73 புரவிகள் எனப்படும் மண் குதிரைகளை இ.மலம்பட்டியில் தயார் செய்யப்பட்டது. அங்கிருந்து 73 புரவிகளை பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து தனியாமங்கலம் அடுத்துள்ள சாத்தமங்கலம் மந்தை திடலில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து ஹரிஹரபுத்திர சாத்தை அய்யனார் கோவிலுக்கு புரவிகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக திருவிழா. ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் உற்சவர் சன்னதி யில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் புஷ்பஅங்கி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டபத்தை 3 முறை சுற்றி வந்து அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு தீபாராதனை காட்டினர்.

    இதேபோல வருகிற 1-ந் தேதி வரை இந்த வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகம் நடக்கிறது.இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணியள வில் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தங்க குடத்தில் சிறப்பு பாலா பிஷேகம் நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பால்குடங்கள் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்து வருவார்கள். மேலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பாலால் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மின்விசிறிகளும் ஏர்கூலரும் வைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்-மோர் வழங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
    • 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    புதுக்கோட்டை:

    திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 30-ந் தேதி திருமஞ்சனம் நடைபெற்று கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.
    • 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை ஆலங்குளத்தை அடுத்துள்ள உப்புப்பட்டியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, அவரது கணவர் மருதுபாண்டி ஆகியோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அஜய், குமரகுரு, விக்னேஸ்வரன் உள்பட 5 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் மகாலட்சுமி, மருதுபாண்டி உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் விக்னேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மருதுபாண்டி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • 10 ஆண்டுக்கு பின் கடந்த 23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 ஆண்டுக்கு பின் கடந்த

    23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    இதனையடுத்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீரா டலும், சக்தி இறக்கம் மற்றும் காப்பு அவிழ்த்தலும் நடை பெற்றது. நேற்றிரவு, மகா பாரத இதிகாசத்தில் குறிப்பி டப் பட்டுள்ளபடி, திரவுபதி அம்மன் அவிழ்ந்த கூந்தல் முடிதல் மற்றும் தருமராஜா பட்டாபிஷேகமும், யாக பூஜை கணபதி ஹோமத்து டன் நடைபெற்றது.

    இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தர்ம ராஜரும், திரவுபதி அம்ம னும் மலர் மாலை அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து “திருக்க ணம்”சாத்தி வழிபட்டனர்.
    • அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    4-ம் திருவிழாவான நேற்று பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளி காம தேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு வரை வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்க ணம்"சாத்தி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    5-வது நாளான இன்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது.

    • தா.பழூர் அருகே காளி ஆட்டம் திருவிழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அருள்பாலிக்கும் காளியம்மன் கோவிலில் கடந்த 24-ம் தேதி காளி ஆட்டம் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காளியம்மன் சிரசு, காளி நடனம் ஆடுபவர் தலையில் வைக்கப்பட்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. காளியம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு படுகள குழியில் படுத்திருக்கும் தொழிலாளியை எழுப்பிவிட்டு அங்கு பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் காளியம்மன் நடனம் ஆட திருவிழா களைகட்டத் தொடங்கியது. காளியம்மன் மயிலாட்டம், பாம்பாட்டம் ஆகிய நடனங்களை ஆடியது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. காளியம்மன் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று நடனமாடி பக்தர்களுக்கு ஆசி வழங்கி தீபாராதனையை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று காளியம்மன் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி நடனமாடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கினர்
    • மாடுகள் மூட்டியதில் 16 பேர் காயம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன.

    எருது விடும் திருவிழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன, திருவிழா தொடங்குவதற்கு முன்பு கால்நடைகளை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    காளை விடும் திருவிழாவிற்கு ஊர் கவுண்டர்கள் எஸ்.சங்கர், ஏ.வாசு ஏ.முருகேசன், எம்.சுப்பிரமணி, ஆகியோர் தலைமை வகித்தனர் .

    சி.ரவி. பெரியசாமி, அண்ணாமலை, திருப்பதி, முன்னிலைவகித்தனர்.

    எருது விடும் திருவிழாவை ஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார், வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.

    அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினர்.

    அப்போது எதிரே இருந்தவர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

    குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 52, ரொக்கப் பரிசுகள் மேலும் சில்வர் குடம் 10 பேருக்கு வழங்கப்பட்டது. 

    • பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    • அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    3-ம் திருவிழாவான நேற்று மாலை பரத நாட்டிய மும், சிறப்பு நாதஸ்வர கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்துக்கு முன்பு 100-க்கு மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கேரளா புகழ் சிங்காரி மேளம், தம்போல மேளம், ஜெனட் காவடிகள், நாதஸ்வர கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

    கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி கன்னியம்பலம் மண்டபத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு இருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்"சாத்தி வழிபட்டனர்.

    நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், செந்தில் ஆண்டவர் பாத யாத்திரை குழு தலைவர் நாகேஸ்வரி சந்திரன், செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    4-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பக்திபஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • 13 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த மாங்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த முடிவு செய்யபட்டது
    • சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புதல்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும் இக்கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் மண்டகப்படி பெறுவதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதத்தி னையடுத்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து திருவிழா நிறுத்தப்பட்டு 13 ஆண்டுகளாக திருவிழா கிடப்பில் போடப்பட்டது. மேலும் இது தொடர்பாக இரு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கிராம கட்டுப்பாட்டில் இருந்த கோவிலை, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் திருவிழா நடத்துவதென அப்பகுதி பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரை அழைத்து சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு அமைத்து திருவிழா நடத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் திருவிழா நடைபெறும் பொழுது எந்த தரப்பினருக்கும் காவல்த்துறை அனுமதியின்றி கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்த்துறை சார்ந்த அதிகாரிகள் மாங்குடி ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியான இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், அதனைத்தொடர்ந்து கொடிபட்டத்துடன் அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற கோஷத்துடன் தலைமைப்பதியை சுற்றிலும் வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜ வேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடை களை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்தி ருந்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    2-ம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சி யும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

    வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்ன தானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாக னத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 5-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அற நெறி பரிபாலன அறக்கட்ட ளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம் இரவு என 3 வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • நாளை விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழா நடைபெற உள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் பூண்டி தெற்கு செங்குந்தர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியும், சுவாமி வீதி உலாவும் நடந்தது.

    விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தீமிதிக்கும் இடத்தை வந்தடைந்தது.

    பின்னர் அங்கு திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நேற்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தெற்கு செங்குந்தர் தெரு கிராம தலைவர் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

    ×