search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 6-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனைகள், இரவு கரக திருவிழா மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தீ மிதிக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி கொண்டு பூ கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் கோவில் அருகே உள்ள அக்னி குண்டத்தில் பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீமிதி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பாலதண்டாயுதபாணி கோவில் விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 101-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    இதை யொட்டி பாலதண்டாயுத பாணிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப் பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி மயில் முன்பு சிறப்பு பூஜை செய்யப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டினர். அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலா பிஷேகம் வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மவுன குருசாமி மடத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகுகுத்தி, பூக்குழி இறங்கி 3 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக செல்கிறார்கள். பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து முருகன் பட்டுப்பல்லக்கில் எழுந்தருளி வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பல காரர்திருக்கண் வந்து அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் கள்ளர் திருக்கண் வந்து எழுந்தருளி இரவு தங்குகிறார். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சீர்பாதம் தாங்கி களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவில் அருகில் ராமலிங்க சேர்வை தானமாக வழங்கிய இடத்தில் வைத்து மல்லிகை மலர்களால் பூப்பல்லக்கு அலங்காரிக்கப்படுகிறது.

    பின்னர் பாலதண்டாயுத பாணி இரவு 12மணிக்கு மேல் நகரின் முக்கிய வீதிகளில் பல திருக்கண்களில் எழுந்தருளி காட்சி அளித்து விட்டு விடிய விடிய வீதி உலா சென்று மறுநாள் காலை 11 மணிக்கு கோவிலை அடைகிறார்.

    3 நாட்களும் தினந்தோறும் இரவு நேரங்களில் ஆடல்பாடல், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், வாடிப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.

    இரவு 8.30 மணிக்கு நற்பணி சபை பொன்விழா மலர் வெளியீடு நடக்கிறது. நிகழ்ச்சியில் மாதா கெபி, புதிய இல்லம் கட்ட முயற்சி எடுத்த தொழில் அதிபர் த.ஜான்சனை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பாராட்டி கவுரவிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, தொழில் அதிபர் எஸ்.டி. வேலு, வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 28-ந் தேதி அதிகாைல 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் மரிய ஆல்பின் லியோன், பாலன் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    • இன்று இரவு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வண்ணார மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    விழாவையொட்டி நேற்று இரவு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி திருப்பாதிரிப்புலியூர் சோலைவாழியம்மன் கோவில் நிர்வாகம், மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் நடந்தது. இதற்காக தேரடி தெரு, சன்னதி தெரு சந்திப்பில் வண்ணாரமாரியம்மன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிடா வெட்டி பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து ஏராளமான பக்தர்கள் கையில் தீப்பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியபடி லாரன்ஸ்ரோடு, வண்டிப்பாளையம் சாலை, திருவந்திபுரம் சாலை, போடிச்செட்டி தெரு சந்திப்பு ஆகிய 4 திசைகளிலும் குறிப்பிட்ட தூரம் ஓடிச்சென்று மீண்டும் தேரடி தெருவுக்கு வந்தனர்.

    பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா எவ்வித தடையும் இன்றி நடைபெறுவதற்காக 4 திசைகளிலும் துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுத்து சாந்தப்படுத்துவதற்காக இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த எல்லை கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவம் நடக்கிறது. 24-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் திருவிழா, 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றம், தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா, 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. மறுநாள் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, 5-ந்தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
    • பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது.

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் ஸ்ரீ வேட்ைடக்காரசாமி கோவிலில் பெரிய சுவாமி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் பொன்னார், சங்கர், தங்காள், செல்லாண்டியம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பெரிய சுவாமி திருவிழா நடைபெறும்.

    இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பொன்னர் சங்கர் தங்காள் வீர வரலாறு உடுக்கை கதை, பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து பூச்சியூர் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கரகம் அழைத்தல், சாம்புகன் சாமியை மேடைக்கு அழைத்து வருதல், தங்காளுக்கு கிளி பிடிக்க செல்லுதல், கொம்பனை சாம்புகன் சாமி மேடைக்கு அழைத்து வருதல், செம்மறி ஆட்டுகிடாவுடன் மேள தாளம் முழுங்க பறை சாற்றி வருதல், தங்காள் செல்லாண்டியம் மன் தீர்த்தம் எடுத்து வந்து தெளித்து அண்ணன்மார்களை எழுப்புதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதைத்தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக கொம்பனை குறி வைத்தல் நிகழ்ச்சியில் பன்றியை வேல்கம்பு கொண்டு பூசாரி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சாம்புகன் பூஜை செய்து தீர்த்தம் வழங்கி கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான கிடாய்கள் வெட்டப்பட்டன.

    இதையடுத்து சாமியை ஊர்வலமாக எடுத்து வந்து கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    மேலும் அப்பகுதி கிராமமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவோணம் போலீசார் செய்திருந்தனர்.

    • முனியப்ப சுவாமி கோவிலில் குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது
    • வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் முனியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து வேல் எடுத்து வருதல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்.இதையொட்டி பரம்பரை பூசாரி கருப்பசாமி உடையணிந்து தாரை தப்பட்டைகள் முழங்க கோவிலில் இருந்து வேல் ஏந்தி ஆவேசத்துடன் வலம் வந்தார்.

    பின்னர் அங்குள்ள எல்லைச்சாமியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வரிசையாக நின்று 500-க்கும் மேற்பட்ட கிடா குட்டிகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்கள். அப்போது அந்த கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சியவாறு அரிவாள் மேல் ஏறி நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது.
    • சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது.

    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கிரகம் மேல்மலைரனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் நடைபெறாது. அங்காளபரமேஸ்வரி சக்தி கிரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து அந்த பூசாரியின் ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மயைனூர் அக்னி குலக்கரையில் சக்தி கிரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கிரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கிரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருள்ளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கொட்டை தான்யம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஷ்வரி சக்தி என்று பாவிப்பார்கள். ஏன் என்றால் அங்காளம்மன் தன் பித்து பிடித்த கணவரை காப்பாற்ற மூன்று பிடிசாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழா உருவாகின.

    சக்தி கிரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கிரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும் மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்லமாட்டார்.

    • சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே மகாராஜபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் அரவான் களப்பலி, அர்ஜுனன் தபசு, சக்தி கிரகம், பீமன் சபதம், திரவுபதி கூந்தல் முடிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது.

    இதில் அம்மனுக்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாராஜபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமக்கோட்டை போலீசார் செய்திருந்தனர்.

    • தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    குன்னூர்,

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது. தேர்த்திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது.

    குன்னூரில் அனைத்து மதத்தினரும் இணைந்து நடத்தக்கூடிய தேர் திருவிழா இதுவாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர்.
    • பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தரளி வேடபரி வீதிஉலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக சென்று வேடபரி வாகனம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர். மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    முன்னதாக பாரம்பரிய கலைகளான நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம், கரகம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மணப்பாறை நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை போலீசாரும் செய்திருந்தனர்.

    • விழாவையொட்டி கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும் நடைபெற்றது.
    • 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பு கலூரில் அக்னீசுவரசாமி கோவில் உள்ளது. தேவார ஆசிரியர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இந்த கோவிலில் தான் ஐக்கியமானார்.

    ஆதலால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் அப்பர் ஐக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு அப்பர் ஐக்கிய திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை கட்டமது உண்பதும், உழவாரப்பணி விடை செய்வதும், 63 நாயன்மார்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து இரவு நடைபெற்ற திருமுறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் காரைக்கால் முனைவர் ராஜேஸ்வரன், திருவாரூர் புலவர் விவேகா னந்தன், கவிஞர் நாகை நாகராஜன், புலவர் நாகை வேம்புமாலா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    இதை த்தொடர்ந்து நேற்று அதிகாலை அப்பர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், கோவில் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×