search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன்"

    கரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.

    முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி சிறுபான்மையின மக்களுக்கு பொருளாதார கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் இந்த கடன் உதவிகளை பெற்று பயனடையலாம். இதன்மூலம், தனி நபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான கடன், கல்வி கடன், கறவை மாடு, ஆட்டோ, தையல் எந்திரம் வாங்க கடன், மளிகை கடை, ஜவுளி வியாபாரம் உள்பட அனைத்து வகை கடன்களும் வழங்கப்படும். இக்கடன் உதவிகளை பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். கடன் உதவி திட்டங்கள் மத்திய, நகர தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டத்தில் 2017-18 -ம் நிதி ஆண்டில் 228 பேருக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் பரிந்துரை செய்து அதில் முதற்கட்டமாக 113 நபர்களுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் ரூ.3 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஒரு வாரம் இம்முகாம் நடைபெறும். இதனை சிறுபான்மையின மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.
    சொந்த வீடு கட்ட அல்லது அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு வங்கி கடன் பெற முடிவெடுப்பவர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட வங்கியை அவர்களது தேவைகளின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிய வீட்டில் நிம்மதியாக அமர வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ள நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் பற்றிய வருங்கால கணக்கீடுகள் பலருக்கும் இருப்பதில்லை.

    காலப்போக்கில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் தவணை தவறும் சமயங்களில்தான் வட்டி விகிதம் பற்றி பலரும் யோசிப்பதாக நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நிலையில் மாதாந்திர தவணையை சற்று குறைவாக செலுத்த இயலுமா..? என்ற கேள்விக்கு அவர்கள் தரும் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ (Balance Transfer) என்ற வழிமுறை பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம்.

    வங்கி மாற்றம்

    10 வருடங்களுக்கும் மேலான காலகட்டம் கொண்ட நீண்ட கால கடன்களுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படும் இந்த வழிமுறையின் மூலம் மீதமுள்ள வீட்டுக் கடனை குறைவான வட்டி விகிதமுள்ள வங்கிக்கு மாற்றிக்கொண்டு அந்த விகிதத்தின்படி மாதாந்திர தவணையை செலுத்தி வரலாம்.

    அவசியமான ஆவனங்கள்


    வீட்டுக் கடன் பெறுவதற்கு தரப்பட்ட அனைத்து ஆவணங்களும் இதற்கும் அவசியம் என்ற நிலையில், முந்தைய வங்கியிலிருந்து ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் பெற்று புதிய வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    மீதமுள்ள மதிப்புக்கு காசோலை

    ஆவணங்கள் தக்க சோதனைகளுக்கு பின் புதிய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கான மதிப்பு காசோலையாக முந்தைய வங்கிக்கு வழங்கப்படும். மேலும், முந்தைய வங்கி நடைமுறைகள் புதிய வங்கியிலும் பின்பற்றப்படும்.

    ஆவணம் பதிவு

    தவணை செலுத்தப்படும் சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த புதிய வங்கியின் பெயர், மற்றும் கடனுக்கான விபரங்கள் ஆகியவை ஆவணமாக பதிவு செய்யப்படும்.

    நீண்ட கால ஆதாயம்

    மேற்கண்ட முறை எல்லா நேரங்களிலும், அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மீதியுள்ள கடன் தொகை, வங்கிகளில் வசூலிக்கப்படும் ‘போர்குளோசர் கட்டணம்’ என்ற அபராத கட்டணம், மற்றும் ‘பிராசஸிங் கட்டணம்’ போன்றவற்றையும், மாறக்கூடிய வட்டி விகித வேறுபாடுகளையும் கணக்கிட வேண்டும். சில நிலைகளில் வீட்டை மறு மதிப்பீடு செய்யவேண்டியதாக இருக்கலாம். அதன் பின்னர் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்பது மீதி செலுத்த வேண்டிய தவணைகளின் கணக்கீடு அடிப்படையில் ஆதாயம் தரக்கூடியது என்றால் இம்முறையை கடைப்பிடிக்கலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அதன் பல வகைகள் பற்றித் தெரியுமா? நாம் நமது தேவைக்கு ஏற்ற தனிநபர் கடனைப் பெற்று பயனடையலாம். அது பற்றி...

    திருவிழாக் கடன்:

    விழாக்கால செலவுகளைச் சமாளிக்கும் வகையில் குறுகியகாலக் கடனை வங்கிகள் வழங்குகின்றன. ஆனாலும் பெரும்பாலான திருவிழாக்களுக்கு அதிகபட்சத் தொகை தேவைப்படாது என்பதால் இக்கடன் அளவு, ஒப்பீட்டு அளவில் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இதற்கான வட்டிவிகிதமும் குறைவுதான்.

    இதற்கான கால அளவு ஓராண்டு ஆகும். வட்டி விகிதம் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இக்கடனில் குறைந்தபட்சத் தொகை ரூ. 5 ஆயிரமும், அதிகபட்சத் தொகை ரூ. 50 ஆயிரமும் ஆகும். 2 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமும், 3 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

    வீடு புதுப்பிப்பதற்கான கடன்:

    வீட்டைப் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவைச் சமாளிக்க இக்கடன் வழங்கப்படுகிறது. இதிலுள்ள முக்கியமான அனுகூலம், இக்கடனுக்குச் செலுத்தும் வட்டிக்கு ரூ. 30 ஆயிரம் வரை வரிவிலக்கு வழங்கப்படுவதாகும்.

    வீட்டைப் புதுப்பிக்கப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 20 முதல் 30 ஆண்டுகள், இதற்கான வட்டி விகிதம் 10 முதல் 12 சதவீதம் வரை. மொத்த மதிப்பீட்டுத் தொகையில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். முன்தவணைக் கட்டணம் கிடையாது.

    நிரந்தர விகிதக் கடன்:

    பெயருக்கு ஏற்ப, இந்த நிரந்தர விகிதக் கடனுக்கு இதன் முழுக் கால அளவுக்கும் ஒரே அளவிலான வட்டிவிகிதம்தான் விதிக்கப்படும். இதில் உள்ள முக்கிய அனுகூலம், கடன் பெறுபவர் தான் எதிர்காலத்தில் எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதை எளிதில் கணிக்கலாம். இவ்வகைக் கடனில் கால அளவு அதிகரிக்கும்போது வட்டிவிகிதமும் அதிகரிக்கும் அபாயம் இல்லை.

    இக்கடனின் கால அளவு 5 முதல் 10 ஆண்டுகள். வட்டி விகிதம் 9.95 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை. கடன் தொகையில் 1 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். மீதமிருக்கும் அசலில் 2 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.



    நுகர்வோர் நீடிப்பு கடன்:

    வீட்டுக்குத் தேவையான நவீன சாதனங்களை வாங்குவதற்கு உதவுவது தான், நுகர்வோர் நீடிப்பு கடன்.

    இதன் கால அளவு 2 ஆண்டுகள். குறைந்தபட்சமாக ரூ. 8 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 5 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாகப் பெறப்படும்.

    திருமணக் கடன்:

    ஒவ்வொருவர் வாழ்விலும் பெரிய செலவுகளில் ஒன்று, திருமணச் செலவு. திருமணத்தை சிறப்பாக நடத்துவதற்கு திருமணக் கடன் கைகொடுக்கிறது.

    இக்கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு, ஒன்று முதல் 5 ஆண்டுகள். வட்டிவிகிதம் 10.5 சதவீதம் முதல். குறைந்தபட்சமாக ரூ. 5 லட்சமும், அதிகபட்சமாக ரூ. 30 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும். கடன் தொகையில் 2 முதல் 5 சதவீதம் வரை முன்தவணைக் கட்டணமாக இருக்கும்.

    விடுமுறை காலக் கடன்:

    விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறையச் செலவாகும். அதற்கு விடுமுறை காலக் கடன் உதவும். இக்கடன் வட்டி விகிதம் அதிகம் என்றபோதும், சம்பள உயர்வு அல்லது போனஸை பயன்படுத்தி கடனை விரைவில் அடைத்துவிடலாம். இக்கடனின் மொத்த தொகை, நீங்கள் பயணம் செல்லவிருக்கும் இடம் மற்றும் உங்கள் கடன் வரலாற்றைப் பொறுத்து மாறுபடும்.

    விடுமுறை காலக் கடனின் கால அளவு 2 முதல் 3 ஆண்டுகள். வட்டி விகிதம் 12.95 முதல் 14.20 சதவீதம் வரை. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 10 ஆயிரமும், அதிகபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் பெறலாம். பரிசீலனைக்கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதமாக இருக்கும்.

    தொழில் கடன்:

    புதிதாக தொழில் தொடங்கவும், தொழிலை விரிவாக்கவும் தொழில் கடன் உதவும். நமது தகுதி மற்றும் கடன் வரலாற்றைப் பொறுத்து தொழில் கடன் நிர்ணயிக்கப்படும். இக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு 1 முதல் 6 ஆண்டுகள். வட்டி விகிதம் 17 முதல் 22 சதவீதம் வரை. குறைந்தபட்சமாக ரூ. 50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 75 லட்சமும் கடன் பெறலாம். கடன் தொகையில் 2.5 சதவீதம் வரை பரிசீலனைக் கட்டணமாக இருக்கும்.

    இக்கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
    திண்டுக்கல் அருகே வாங்கிய கடனை தராததால் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

    படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    #tamilnews
    தெலுங்கானா மாநிலத்தில் தனது கடனை அடைப்பதற்காக நண்பனை எரித்துக்கொன்று, அவனது செல்போனை எடுத்துச் சென்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். #MobileKillsYoung
    ஐதாராபாத்:

    வயது பாரபட்சம் இன்றி, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் செல்போன் மோகத்தால் சிறுவன் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ராமந்தப்பூர் பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய கட்டாம் பிரேம் சாகர் மற்றும் தாகே பிரேம் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தாகே பிரேமை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்ற கட்டாம் பிரேம் சாகர், நடுவழியில் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.



    தாகே பிரேம் சுயநினைவை இழந்ததை அடுத்து, அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளார். தனது மகன் மாயமானதாக தாகே பிரேமின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை கட்டாம் பிரேம் சாகர் ஒப்புக்கொண்டார்.

    மேலும், தமக்கு கடன் இருந்ததாகவும், அதனை அடைக்க தாகே பிரேமின் செல்போனை எடுக்கவே அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    செல்போன் மோகத்தால் வாழ்வை இழந்த வாலிபர் மீது கொலை, ஆள்கடத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MobileKillsYoung
    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க, ‘பெர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடனை நாடுவது பலரின் வழக்கம். உங்களுக்கும்கூட அந்த எண்ணம் இருக்கலாம். தனிநபர் கடன் பெறத் தயாராகிக்கொண்டிருக்கலாம். ஆனால்... அதற்கு முன் ஒரு நிமிடம்!

    தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களைப் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    * கடன் கேட்டு வங்கிப் படியேறுவதற்கு முன்பாக உங்கள் பொருளாதாரத் தகுதியை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். வங்கி நிபந்தனைகளின்படி நம்மால் முறையாக கடனை திரும்பச் செலுத்தமுடியுமா என்று பாருங்கள். அதற்காக, இலவசமாகக் கிடைக்கும் கடன் அறிக்கையை வாங்கிப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

    * கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இல்லாதவரையோ, சரியான வருமானம் இன்றி இருப்பவரையோ வங்கிகள் வரவேற்பது இல்லை. கடன் பெறுவதற்கான நமது தகுதியான ‘கிரெடிட் ஸ்கோர்’, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். இந்த ஸ்கோர் திருப்திகரமாக இல்லாதபோது, கடன் மறுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * வட்டி விகிதமும், கால அளவும் உத்தரவாதமுள்ள வீட்டுக்கடன் உள்ளிட்டவை போன்று தனிநபர் கடன்களை வங்கிகள் கருதுவது கிடையாது. இதனை ஒரு பாதுகாப்பற்ற கடனாகவே வங்கிகள் வைத்திருக்கின்றன. வங்கிக் கடன் புள்ளி விவரங்கள்படி தனிநபர் கடன்கள்தான் அதிக வாராக்கடன்களாக உயர்ந்துள்ளன. எனவே இக்கடனுக்கு 11 முதல் 16 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

    * நீண்ட கால கடனா, குறுகிய காலக் கடனா என்பது உங்கள் தவணைத் தொகையைத் தீர்மானிக்கும் முக்கியக்காரணியாக உள்ளது. நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டியை பெற்றுத் தரும்.

    * கடன் தொகையைப் பொறுத்து வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஒருமுறையும், அதற்கு மேலும் விதிக்கக்கூடிய கட்டணங்களையும் கடன் வாங்குவதற்கு முன்பு கட்டாயம் நீங்கள் கவனித்தாக வேண்டும். இல்லையென்றால் கடன்தொகையில் ஒரு சிறு தொகையை நீங்கள் இழக்க வேண்டி வரும்.

    * தவணைக்காலம் தவறித் தாமதமாகப் பணம் கட்டுபவர்கள், அபராதம் செலுத்த நேரிடலாம். அது ஏற்கனவே நமக்கு உள்ள பண நெருக்கடியை மேலும் கூடுதலாக்கும். நம் வங்கிக் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை தானாக பிடித்தம் செய்கிற மாதிரி அமைத்துக்கொள்ளலாம். தவணை நாளில் நம் வங்கிக் கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்வதும் முக்கியம்.

    இவையெல்லாம் தாண்டி, அவசரத் தேவைக்காகத் தனிநபர் கடனை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் இருக்கிறீர்களா? வங்கி அதிகாரியை அணுகி முறையாக அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள். கடன் பெற்றபின், தவணை தவறாமல் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் உறுதியாக இருங்கள். தப்பித்துவிடலாம்!
    ×