search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105717"

    தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் நர்சிங் மாணவிகள் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

    தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 42 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு முற்றிலும் குணமடைந்து வருகிறார்கள்.மேலும், சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் தொழுநோய் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பரிதா ஷெரின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, மருத்துவ நலப்பணிகள் தொழுநோய் உதவி இயக்குனர் யமுனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    விருதுநகரில் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்த பிளஸ்-2 மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சஞ்சய், திடீரென வி‌ஷம் (எலிமருந்து) குடித்து மயங்கினார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவர் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சய்க்கு தனி வகுப்பு நடத்தியதாகவும், இதனால் மன வேதனை அடைந்து வி‌ஷம் குடித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #tamilnews
    டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாள் விழா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

    பிறந்தநாள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய அவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பூங்கொத்து மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். விழாவில் பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்த பின்னர் விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- கட்சியில் பொறுப்புக்கு வருவீர்களா?

    பதில்:- கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. விஜயகாந்த் முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை நான் செய்கிறேன். டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் அமெரிக்கா செல்கிறோம்.


    அதன்பிறகு அவர் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுவார். சிங்கத்துக்கு நிகரான தலைவராக மீண்டும் பார்ப்பீர்கள். தேர்தல் பிரசாரத்திலும் பங்கேற்பார்.

    கே: ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் கூட்டணி சேர்வீர்களா?

    ப:- இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது. ஏனெனில் முதலில் அரசியலுக்கு வந்தது விஜயகாந்த் தான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக பணியாற்றி உள்ளோம். எனவே தே.மு.தி.க.வை லேசாக எடை போட வேண்டாம்.

    கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவர்களுடைய வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? எதுவுமே இல்லாதபோது கூட்டணி என்றால் ஒரு நாள் செய்தியுடன் முடிந்துவிடும்.

    எனவே அவர்கள் களத்திற்கு வரட்டும். நாங்கள் தேர்தல் களத்தில் எங்களை நிரூபித்துள்ளோம். ஆனால் இருவரும் தங்களை இன்னும் நிரூபிக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை வெங்கிடாபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவர் தடாகம் சாலையில் மெஸ் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிரிய தர்ஷினி(32). இவர்களுக்கு ஏஞ்சலின், லீனா, ஹனி என்ற 3 மகள்கள் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த ரவிக்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி நேற்று பிரிய தர்ஷினி, ஏஞ்சலின், லீனா ஆகியோர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஹனி வீட்டில் இருந்து கதறியபடி வெளியே ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த மனைவி, குழந்தைகளை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாய்பாபாகாலனி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். இது தொடர்பாக ரவிக்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #SwineFlu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த நோயை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நோய் பாதித்தவர்கள் கண்டிறியப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், வாந்தி இருந்தால் அவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறவும் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை தடுக்க வீடுகளில் சென்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். டெங்கு கொசு புழு உற்பத்தி ஆவதை கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்கள் 2 பேரும், பெண்கள் 9 பேரும், சிறுவர்கள் 6 பேர் உள்பட 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தனியார் ஆஸ்பத்திரியில் பெரியவர்கள், சிறியவர்கள் என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் பன்றி காய்ச்சல் பாதித்தவர்களை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #SwineFlu

    ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் அருகே பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குமுதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சர்குணம் (வயது 38).நேற்று பிற்பகலில் இவர் தனது 9 வயது மகளுடன் வந்து ஓசூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார். 

    மயங்கி விழுந்த அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தபிறகு தான் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியும்.
    மத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ஊத்தங்கரை:

    கர்நாடக மாநிலம்  பெங்களூருவை அடுத்த யஷ்வந்தபூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது31). இவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (31), சரவணன் (28), ராமு (26), பிரதீபா(30), பாண்டியன் (26), அர்ஜுனன் (26), பாஸ்கர் (28), ஸ்டாலின் (26), தீனா (28) ஆகியோருடன் டாடா சுமோ காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். நேற்று திருமணம் முடிந்ததும் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்வதற்காக காரில் புறப்பட்டனர். காரை கோவிந்தராஜ் ஓட்டி வந்தார்.

    அப்போது கார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொடமாண்டபட்டி வந்தபோது ஒரு வளைவில் உள்ள புளிய மரத்தில் மோதியது. பின்னர் அந்த கார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 2 கார்களின் முன்புறமும் நொறுங்கியது. டாடா சுமோ காரில் வந்த கோவிந்தராஜ் உள்பட 8 பேரும் படுகாயம் அடைந்தனர். 2 பேருக்கு மட்டும் எந்த காயம் ஏற்பட வில்லை.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மத்தூர் போலீசார் உடனே அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஸ்டாலின் என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் அவரை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி, டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #dengue #swineflu
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    டாக்டர்கள் காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்கை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் திருப்பூர் தாசப்ப நகரை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி வசந்தா (வயது 63) என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்தமாதிரியை சோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் ஆப்ரேட்டர். இவர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு டாக்டர்கள் கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    கோவை வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அமுதன் (5) என்பவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்தத்தை டாக்டர்கள் சோதனை செய்த போது அமுதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அமுதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை உறவினர்கள் கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #dengue #swineflu
    திருமங்கலம் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்கள் காயமடைந்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த மலை தேனீக்களின் கூடு கலைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் படை எடுத்து வந்து மாணவ, மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்களை கொட்டியது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 20-க்கும் மேற்பட்டேர் காயமடைந்தனர்.

    அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மீனாட்சி (வயது 80) என்பவரை தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தார். அவரை அந்தப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேல்மணி என்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தேனீக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

    அவர்கள் எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டாக்டர்கள் பரிசோதனை செய்கின்றனர். அப்போது 120 பேருக்கு வைரஸ் காய்ச்சலும், 5 பேருக்கு பன்றிக் காய்ச்சலும், 8 பேருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மீனாட்சி (வயது 49), வீரம்மாள் (70) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (58) நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கலெக்டர் நடராஜன் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு செய்தார். உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

    மருத்துவ பணிகள் சுகாதார இயக்குநர் உத்தரவின் பேரில் மருத்துவ ஊழியர்கள் மாவட்ட அளவில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    கோத்தகிரி:

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 21 பேர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

    பின்னர் கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டனர். வேனை டிரைவர் சுரேஷ்குமார் (36) ஓட்டி வந்தார்.

    இந்த வேன் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மேல் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குறுகிய வளைவில் திரும்பும் போது டிரைவர் பிரேக் போட முயன்றார். அப்போது வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் சுரேஷ் குமார், சீனிவாசன், ராமு, பாலா, நாகேந்திரன் ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    காயம் அடைந்தவர்களை அப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சீனிவாசன், ராமு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இந்த ஆண்டில் நாடு முழுவதும் 83 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected #Denguefever
    புதுடெல்லி:

    டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோயான டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை பெற்று பலர் குணமடந்துள்ளனர்.

    எனினும், ஆங்காங்கே சிகிச்சை பலனின்றி சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த 830 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம்வரை டெங்கு காய்ச்சலுக்கு 83 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 3,660 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 35 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,667 பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 18 பேர் இறந்துள்ளனர்.  இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 பேரும் மற்ற மாநிலங்களில் ஓரிருவரும் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Dengueclaimed80lives #Dengueaffected  #Denguefever
    ×