search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105717"

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு முறிவு காரணமா சிகிச்சை பெரும் பெண் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார்.
    சென்னை:

    சாமானியர்களுக்கு உயர் சிகிச்சை என்பது எட்டாக்கனி என்பது தெரிந்ததே.

    சாதாரண மக்களும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெற வேண்டும் என்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் முறை அமுல்படுத்தப்பட்டது. இதற்காக தனி வார்டுகளே அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (60). வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை பெண். கடந்த மாதம் 16-ந்தேதி இரவு பாத்ரூம் சென்றபோது தடுமாறி விழுந்ததில் இடுப்பில் பலத்த அடிபட்டது.

    மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டி பார்க்கும் வார்டில் சேர்ந்தார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியும் இருக்கிறது.

    இடுப்பில் ‘பிளேட்’ பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்காக அரசு காப்பீட்டு திட்டத்தில் இருந்து ரூ.66 ஆயிரம் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பிளேட் வரவில்லை என்று ஒரு மாதமாக சிகிச்சை நடக்கவில்லை. இப்போது தினமும் அறை வாடகையை கட்டிக் கொண்டு ஒரு மாதமாக மீனாட்சி தவித்து வருகிறார்.

    தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சில நாட்களில் கட்டுப்படுத்தி ஆபரேசனையும் செய்து இருப்பார்கள். அங்கு சென்றால் அதிகமாக செலவாகும் என்பதால் தான் மீனாட்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருக்கிறார்.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் காலதாமதம் வெளியே ஆகும் செலவை விட கூடுதலாகி விடும் என்று மீனாட்சி குடும்பத்தினர் ஆதங்கப்படுகிறார்கள். #tamilnews
    கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைது கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 30). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    செல்வம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜெயிலில் இருந்த இவர் கடந்த 6-ந் தேதி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அங்கு இருந்த செல்வம் மீண்டும் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு வைத்து அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வத்துக்கு பாதுகாப்பாக சரவணகுமார் என்ற போலீஸ்காரர் இருந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் போலீஸ்காரரிடம் செல்வம் கழிவறைக்கு செல்வ வேண்டும் என்று கூறினார்.

    இதனையடுத்து போலீஸ்காரர் சரவணகுமார் கழிவறை செல்ல செல்வத்தை அனுமதித்தார். செல்வம் கழிவறைக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் அவர் திரும்பிவரவில்லை.

    இதனால் போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டினார். ஆனால் கதவை செல்வம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் கதவை உடைத்து கழிவறைக்கு சென்று பார்த்தார்.

    அப்போது கழிவறையில் செல்வம் இல்லை. கழிவறைக்கு சென்ற செல்வம் அங்கு இருந்த ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் சரவணகுமார் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிறைக்கைதி செல்வத்தை தேடி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    குழித்துறை அருகே தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி தொழிலாளி பலியானார். மற்றோருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    குழித்துறை:

    மார்த்தாண்டத்தை அடுத்த பல்லன்விளையை சேர்ந்தவர் ஜான் (வயது 40). மார்த்தாண்டம் மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    ஜானின் நண்பர் ஜாபர் (40). இவரும் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் வேலை பார்க்கும் காய்கறி மொத்த வியாபாரி வெளியூரில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து அதனை மார்த்தாண்டம் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

    அந்த காய்கறிகளை வெளியூருக்கு சென்று ஜானும், ஜாபரும் வாங்கி வருவார்கள். அதன்படி நேற்று இவர்கள் இருவரும் மதுரைக்கு செல்ல இருந்தனர்.

    இதற்காக மார்த்தாண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து இருவரும் மதுரைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக நேற்றிரவு ஜானும், ஜாபரும் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றனர்.

    அப்போது ரெயில் நிலையத்திற்கு ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் மார்த்தாண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காது. இதை அறியாத ஜானும், ஜாபரும் அந்த ரெயிலில் ஏறுவதற்காக ரெயில் நிலையம் நோக்கி வேகமாக சென்றனர்.இதற்காக தண்டவாளத்தையும் கடந்தனர்.

    அப்போது வேகமாக வந்த ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜான், ஜாபர் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அங்கு ஜாபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். ஜான் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான ஜாபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    உயிருக்கு போராடிய ஜானை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இறந்து போன ஜாபருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதுபோல ஜானுக்கும் திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.அவர்கள் சம்பவம் பற்றி அறிந்ததும் கதறி அழுதனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 69). கோவில் பூசாரி. இவரது மகள் காயத்ரி கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சீனிவாசன், அவரது மனைவி லட்சுமி (63), மகன் பால மோகன்(36) ஆகியோர் நேற்று இரவு காரில் கோவை புறப்பட் டனர். காரை பால மோகன் ஓட்டினார்.

    நள்ளிரவு 1.15 மணி அளவில் கார் சேலம்- கொச்சின் பைபாஸ் சாலையில் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக கார் பால மோகனின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த சீனிவாசன், லட்சுமி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாலமோகன் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று பாலமோகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வி‌ஷ வண்டுகள் கடித்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விருத்தாசலம்:

    காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.

    இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நம்பியூர் அருகே விடுதியில் தங்கி இருந்த அரசு பள்ளி மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் மாணவியை கோபி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    நம்பியூர்:

    திருப்பூரை சேர்ந்த பனியன் கம்பெனி ஊழியரின் மகள் நம்பியூர் அருகே அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று இரவு விடுதியில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை வார்டனிடம் அந்த மாணவி தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த மாணவி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாணவியின் தாய் கோபிக்கு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவியை அழைத்து சென்றார். மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    கோவையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியதையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சபாபதிவீதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ரித்விகா என்ற மகளும் உள்ளனர்.

    ரித்விகா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று இரவு பெற்றோர் வெளியே செல்ல வேண்டி இருந்ததால் குழந்தைகளை வீட்டில் வைத்து விட்டு கதவை பூட்டிச் சென்றனர்.

    இவர்களது வீட்டில் ‘நீமோ மேத்யூ’ வகை நாய் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்தது. நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்ததால் ரித்விகாவின் அண்ணன் கூண்டை திறந்து விட்டான். வெளியே பாய்ந்து வந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரித்விகாவை கடித்துக்குதறியது. இதனால் ரித்விகா அலறித் துடித்தாள். 2 குழந்தைகளும் கத்தி கூச்சல் போட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். நாயிடம் இருந்து சிறுமியை மீட்ட அவர்கள் பெற்றோருக்கு தகவல் கூறினர். பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து, ரித்விகாவை அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்து குதறியதால் ரத்த வெள்ளத்தில் ரித்விகா மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டாள். இதனால் ரித்விகாவை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #tamilnews
    கோவையில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என அரசு மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.
    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-

    எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை டாக்டர்கள் அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதால், கேரளாவை ஒட்டி உள்ள கோவையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் வரும் பொதுமக்கள், அலட்சியமாக இருக்காமல் , சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் . எலிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து , பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சேலத்தில் உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காசக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 47). இவர், சேலம் மாநகர காவல் துறையில் சூரமங்கலம் பகுதி நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்) ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இன்று காலையில் ஏட்டு நடராஜன் வீட்டில் இருந்தார். அப்போது, 2 பேர் அங்கு வந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த நடராஜன் நேராக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு டாக்டர்கள், அடிப்பட்ட இடத்தில் மருந்துகள் வைத்து சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து நடராஜன் வீட்டிற்கு திரும்பினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் போலீஸ் ஏட்டை தாக்கியவர்கள் அவரது உறவினர்கள் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாக்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உளவுப்பிரிவு ஏட்டு வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    உத்தரபிரதேசம் மாநிலம் கன்னாஜ் என்ற இடத்தில் மனைவியின் பிரசவ செலவுக்காக, பெற்ற குழந்தையை, தந்தை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #pregnantwife #Kannauj
    கன்னாஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா. சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் ரோஷ்னி என்ற மகளும், 1 வயதில் ஜானு என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமானாள். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்று சேர்க்க முயன்றார். கட்டணம் அதிகம் கேட்டதால் சேர்க்காமல் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார்.

    அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள், வெளியில் ரத்த வங்கியில் போய் வாங்கி வாருங்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் டாக்டர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர். அந்த அளவுக்கு பணம் இல்லை.



    இதனால் தவித்த அவர் மனைவி உயிரை காப்பாற்ற தனது 4 வயது சிறுமி ரோஷ்னியை விற்க முடிவு செய்தார். அங்குள்ள ஒருவரிடம் விற்று அந்தப் பணத்தின் மூலம் ரத்தம் வாங்கி ஆஸ்பத்திரிக்கு ஓடினார். அதன் பிறகு ரத்தம் செலுத்தப்பட்டு சுக்தேவி உயிர் பிழைத்தார்.

    இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார். தாய் சுக்தேவி கூறும் போது, குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்றார். #pregnantwife #Kannauj
    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தயாளு அம்மாள் மிகவும் துயரத்தில் இருந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து உடனடியாக காரில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும், மு.க.ஸ்டாலினும், அவருடைய குடும்பத்தினரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.

    தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை 4.30 மணிக்கு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.  #DhayaluAmmal #tamilnews 
    புதுவையில் நடுக்கடலில் மீன் பிடித்த போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த 7 மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சோலை நகரை சேர்ந்த 7 மீனவர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி படகில் மீன்பிடிக்க சென்றனர். கடப்பாக்கம் அருகே அவர்கள் நடுக்கடலில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது.

    இதில் படகின் முன்புறம் இடி தாக்கியதில் படகை ஓட்டிய சுதாகர் காது கேட்கும் திறனை இழந்தார். அதோடு இடி தாக்கியதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    மேலும் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த ஜெலந்திரன், அருள், கந்தவேலு, குகன், விஜி, கலியபெருமாள் ஆகியோருக்கு கண் எரிச்சல் மற்றும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடும் போராட்டத்துடன் இவர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு நேற்று இரவு திரும்பினார்கள்.

    அங்கிருந்த மீனவர்கள் பாதிக்கப்பட்ட 7 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    படகில் இருந்த அனைத்து மின்சாதன பொருட்களும் இடி மின்னலால் பழுதாகின. இதன் சேத மதிப்பு ரூ 5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    ×