search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரி"

    தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 முதல் 5 படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், காமெடியன்கள் ஹீரோவாக படையெடுக்கும் நிலையில், வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியும், காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரலாம். #YogiBabu #RJBalaji
    தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குடும்ப ரசிகர்களை இழந்தது தான். குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை இருப்பது அவசியம். மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழத் தான் விரும்புவார்கள். ஆனால் தமிழ் சினிமா காமெடிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறது.

    கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இப்போது ஆள் இல்லை. காரணம் காமெடியன்களுக்கு ஹீரோ ஆசையை உண்டாக்கி ஹீரோவாக மாற்றிவிடுகிறார்கள். சந்தானமும் வடிவேலுவும் ஹீரோவாக மாறிவிட்டார்கள். இந்த வரிசையில் இன்னும் சில காமெடியன்கள் இணைய இருக்கிறார்கள்.



    காமெடி நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடியனாக சில படங்களில் நடித்த ஜெகன் ’இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார். நயன் தாராவுடன் யோகி பாபு நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுக்கு நயனை காதலிக்கும் வேடம். இந்த படத்தில் ஹீரோ இல்லை. இப்போது ஆர்ஜே பாலாஜியும் எல்கேஜி என்னும் படத்தில் ஹீரோவாகி விட்டார். அடுத்து சூரி, சதீஷும் ஹீரோவாக களம் இறங்க யோசித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் காமெடியும் இல்லை. காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரப்போகிறது. #YogiBabu #RJBalaji

    சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் விமர்சனம். #BhaskarOruRascal #ArvindSwami
    வசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார். 

    இந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர். 



    தனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான். 

    இந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர். 

    மெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா? அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.



    அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.

    அமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. 

    நாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    அப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். 

    அம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul

    சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami
    அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைப்போனது. கடந்த வாரம் ரிலீசாகவிருந்த இந்த படம் மீண்டும் தள்ளிப்பேனதால் படக்குழு மீது நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி தெரிவித்தார்.

    இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடித்திருக்கிறார். 

    அம்ரேஷ் கணேஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஹர்ஷினி மூவிஸ் தயாரித்துள்ளது. #BhaskarOruRascal #ArvindSwami

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நாளை துவங்க இருக்கிறது. #Sivakarthikeyan #Seemaraja
    சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வருகிற மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்தநிலையில், படத்தின் டப்பிங் பணிகள் மே 15-ந் தேதி (நாளை) துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர்.

     

    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Sivakarthikeyan #Seemaraja

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டி.வி. ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது. 



    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்த படத்திற்காக இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். #Sivakarthikeyan #Seemaraja
    சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தமிழ் சினிமாவின் 48 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக இடையில் நின்றது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது ‘சீமராஜா’ படக்குழு. மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள்.

    இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு சிவகார்த்திகேயன் பங்குபெறும் சண்டைக்காட்சியை படம் பிடிக்கவுள்ளார்.



    இதற்கிடையே இன்று படத்தின் இயக்குநர் பொன்ராமின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

    அதன் பிறகு 10 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் போடப்பட்டு வருகிறது. மே 15-ந் தேதி டப்பிங் வேலையைத் தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். #Sivakarthikeyan #Seemaraja

    ×