என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அயர்லாந்து"
டுப்ளின்:
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் வங்காள தேச அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டுப்ளினில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ஹோப் 87 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 62 ரன்னும் எடுத்தனர்.
வங்காள தேசம் சார்பில் முஷடாபிசுர் ரகுமான் 4 விக்கெட்டும், மொர்டசா 3 விக்கெட்டும், சகிப் அல்-ஹசன், மிராஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய வங்காளதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. முஷ்பிகுர் ரகீம் 63 ரன்னும், சவுமியா சர்கார் 54 ரன்னும், முகமது மிதுன் 43 ரன்னும் எடுத்தனர்.
இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்திடம் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. கடந்த 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்காளதேசம்- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி 17-ம் தேதி நடக்கிறது. இதில் வங்காள தேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இன்று 5-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அணி கேப்டன் அஷ்கர் ஆப்கன் பொறுப்புடன் ஆடி 82 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக, மொகமது நபி 40 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரரான பால் ஸ்டிரிங் 70 ரன்னும், 3-வதாக இறங்கிய ஆன்டி பால்பிரைனி 68 ரன்கள் அடித்தனர். ஆட்டத்தின் கடைசியில் கெவின் ஓ பிரையன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
அயர்லாந்து 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. #AFGvIRE
10 அணிகள் இடையிலான பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜவேரியா கான் 52 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அலிசா ஹீலி 53 ரன்னும், ராச்சல் ஹெய்ன்ஸ் 29 ரன்னும் விளாசினர். அடுத்து களம் புகுந்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. எனவே ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கட் 3 விக்கெட்டும், சோபி மொயின்ஸ், டெலிசா கிம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்று, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அதே சமயம் 2-வது தோல்வியை சந்தித்த நியூசிலாந்துக்கு அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசிய புகாரில் சிக்கியதால் நியூசிலாந்து அணி வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதமும், கேப்டனுக்கு 20 சதவீதமும் அபராதமாக ஐ.சி.சி. நடுவர் ரிச்சர்ட்சன் விதித்துள்ளார்.
புரோவிடென்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் ஆயத்தமாக உள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #WomenWorldT20
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
3-வது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை நாளை (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.
பலவீனமான அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்க அந்த அணி கடுமையாக போராடும். நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ‘ஏ’ பிரிவு ஆட்டங்களில் இலங்கை- வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. #WomenWorldT20
அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் 55.8 சதவீத ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக தேர்வு பெற்று இருக்கிறார். 1966-ம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அதிபர் ஒருவர் தொடர்ந்து 2-வது முறை போட்டியிட்டது இதுவே முதல் முறை.
அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தொழில் அதிபரான பீட்டர் கேசி 23.25 சதவீத ஓட்டுகளையும், சியான் கலாகெர் 6.41 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர்.
அயர்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ்தான் முன்னிலை பெற்றிருந்தார். அதன்படியே தேர்தலிலும் கூடுதல் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரை அயர்லாந்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்தில் அதிபர் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டின் சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #Ireland #President #MichaelDHiggins
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்