search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105991"

    தெலுங்கானா சட்ட சபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. #TelanganaAssemblyElection
    ஐதராபாத் :

    மத்திய பிரதேசம், சத்தீ‌ஷ்கார், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டசபை ஆயுட்காலம் முடிவடைந்ததால் அங்கு தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    அதேநேரம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட் காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் முன்வந்தார். இதனால் இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதில் மத்திய பிரதேசம், சத்தீ‌ஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

    இங்கு ஆளும் தெலுங்கானா ரா‌ஷ்டிர சமிதி ஒரு அணியாகவும், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை மக்கள் கூட்டணி என்ற பெயரில் மற்றொரு அணியாகவும் மோதுகின்றன. மேலும் பா.ஜனதா தனியாக களம் காண்கிறது. இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

    119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    பா.ஜனதாவுக்காக பிரதமர் மோடி, அமித்‌ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சு‌ஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி ஆகியோரும், காங்கிரசுக்காக அதன் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் ஏற்கனவே தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டனர்.

    காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் பிரசாரம் செய்து வருகிறார். நாளை மறுநாளுடன் (புதன்கிழமை) தெலுங்கானாவில் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தெலுங்கானா அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

    5 மாநிலங்களிலும் வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. #TelanganaAssemblyElection
    தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி பா.ஜனதா வேட்பாளர் வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajasthanElection #BJP
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.



    பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சித்தோ கட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திருப்பலானி பேசும் போது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன். என்று பேசினார்.

    அவரது இந்த பிரசார யுக்தி வாக்காளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல தெலுங்கானாவில் வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக வாக்கு சேகரித்தார். சுகுலா ஹனுமந்த் என்பவர் கொருட்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும்போது ஒரு ஜோடி செருப்பையும் கொடுக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார். #RajasthanElection #BJP
    தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்கிறார்கள். #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.



    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்வார்கள்.

    மேட்கல் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். மாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதற்காக இருவரும் 23-ந்தேதி மாலை 4 மணிக்கு பெகும்பேட் விமான நிலையத்தை சென்றடைவார்கள்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியாகாந்தி முதல் முறையாக அங்கு செல்கிறார்.

    இதை மாநில காங்கிரஸ் தலைவர் ரெட்டி தெரிவித்துள்ளார். #SoniaGandhi #RahulGandhi

    சோனியா காந்தி தெலுங்கானாவில் வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #SoniaGandhi #Congress #Telangana
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ்.கட்சி போராடியது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பா.ஜனதாவும் களத்தில் இருக்கிறது.

    தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற சோனியாகாந்தி பிரசாரம் செய்வது அவசியம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை அகில இந்திய தலைமை ஏற்றுக் கொண்டது.

    இதன்படி தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார்.



    அவர் வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    வாரங்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் சோனியா காந்தி பேசுகிறார். அவர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பிரசாரம் செய்கிறார். #SoniaGandhi #Congress #Telangana

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில், விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார். #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.

    நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மன்ட் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தின் மீது தலிபான்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #Eightkilled #suicideattack #Afghanelectionrally
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட  லஷ்கர் கா நகரின் அருகே சாலே முஹம்மது அச்சக்ஸாய்  என்ற வேட்பாளர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு  தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

    வேட்பாளர் சாலே முஹம்மது அச்சக்ஸாய்  உள்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Eightkilled #suicideattack #Afghanelectionrally
    பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாரத்தின் போது வேட்பாளரை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JairBolsonaro #Brazil
    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ (63) போட்டியிடுகிறார். இவர் சோசியல் லிபரல் கட்சியை சேர்ந்தவர்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் முன்னணியில் இருக்கிறார். தற்போது தேர்தல் பிரசாரம் உச்சகட்ட நிலையில் உள்ளது.

    மினாஸ் ஜெரேய்ஸ் மாகாணத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏராளமானோர் கூடி அவரது பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர். உண்ர்ச்சிமிகு உரையாற்றிக் கொண்டிருந்த அவர் கைகளை உயர்த்திய நிலையில் இருந்தார்.

    அப்போது யாரோ ஒரு மர்ம நபர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினான்.

    இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி சரிந்தார். அதை தொடர்ந்து அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.



    அதை தொடர்ந்து வயிற்றில் அவருக்கு 2 மணி நேரம் ஆபரேசன் நடத்தப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ளதாக அவரது மகன் பிளாவியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே போல் சோனரோவை கத்தியால் குத்திய நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கத்திக்குத்து சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #JairBolsonaro #Brazil

    மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.

    இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.

    இந்த முறை சிவராஜ்சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான வியூகம் அமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.



    மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் தொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

    மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில தேர்தல் பிரசார கமிட்டி தலைவர் ஜோதிரத்ய சிந்தியா, எதிர்க்கட்சி தலைவர் அஜய்சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ்பச்சோரி, மேல்சபை எம்.பி. விவேக் தன்கா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பாலாபச்சார், மூத்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான ராம்நிவாஸ், மாநில செயல் தலைவர் ஜீட்டு பட்வாரி, மாநில மேலிட பொறுப்பாளர் தீபக் பபாரியா உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.

    ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. #Congress #RahulGandhi
    தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். #Zimbabwepresidenrally
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.

    பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்களை அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Zimbabwepresidenrally  #EmmersonMnangagwa  #Mnangagwanothurt
    கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர். #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது.

    கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா,  எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.



    கடந்த 2 மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று மிகப்பெரிய பிரசார படையை அரசியல் கட்சிகள் களமிறக்கி உள்ளன.

    பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ஆனந்த் குமார், சதானந்த கவுடா, அனுராக் தாகூர், கிருஷ்ணபால் குஜ்ஜார், மீனாட்சி லேகி, பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகள், சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் கவுகார் உள்பட 23 தலைவர்கள் திறந்த வாகனங்களில் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். சித்தராமையாவின் பதாமி தொகுதியில் அமித் ஷா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதேபோல் மற்ற கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்களுடன் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கின்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெறும். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #KarnatakaElection2018
    ×