search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வதி"

    தமிழில் பூ படம் மூலம் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.
    நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர். பூ பார்வதியும் தற்போது டைரக்டராக மாறுகிறார். தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டி இருந்ததால் தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார்.

    இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌‌ஷன் செய்ய இருக்கிறேன். இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். 



    எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்று கூறியுள்ளார்.
    வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் அமெரிக்காவின் இரு சர்வதேச திரைப்பட விழாவுக்காக தேர்வாகியுள்ளது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
    இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படம் அடுத்ததாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையை உருவாக்கி வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    மும்பை திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்றது. மேலும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth 

    அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும். அன்னை அவதரித்த திருக்கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருக்கயிலாயத்தில் சிவபெருமானுடன், பார்வதி தேவி இருந்தாள். அப்போது பார்வதி ஈசனிடம், “சுவாமி! உங்களுடைய உண்மை நிலையை எனக்கு உரைக்க வேண்டும்” என்றாள்.

    அதற்கு இறைவன், “உயிர்கள் நலம் பெற ஐந்தொழில் செய்வேன். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன். எனக்கென ஒரு உருவமும் இல்லை. அருளே எனது உருவமாகும்” என்றார்.

    அதற்கு பார்வதி, “அருள் தான் உங்களுடைய உருவம் என்றால், அந்த அருள் நான்தானே” என்று சற்று கர்வத்தோடு கேட்டாள்.

    அப்போது இறைவனின் கண்ணசைவில் உலகத்தின் அசைவுகள் அனைத்தும் நின்றுபோனது. இதனால் பதறிப்போன பார்வதி, “இறைவா! உண்மையை உணர்ந்து கொண்டேன். உங்களுக்கு சில நொடி என்பது, உயிர்கள் பல யுகங்கள் ஆகும். எனவே இந்த அசைவற்ற நிலையை மாற்றுங்கள்” என்று வேண்டினாள். இதையடுத்து இறைவன் உலகை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

    தான் செய்த பாவத்திற்காக பூமியில் பிறந்து சிவபூஜை செய்ய பார்வதி எண்ணினாள். அந்த நேரத்தில் தக்கனும் தனது மகளாக பார்வதி பிறக்க வேண்டும் என்று சிவனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தான். அம்பிகை காளிந்தி நதியில், ஒரு தாமரைப் பூவில் வலம்புரி சங்கு வடிவமாக தோன்றினாள். மாசி மகத்தில் தக்கன், தன் மனைவி வேதவல்லியோடு அந்த நதியில் நீராட வந்தான். அப்போது அங்கிருந்த வலம்புரி சங்கை கையில் எடுத்தான். அது அழகிய பெண் குழந்தையாக வடிவம் கொண்டது. அன்னை அவதரித்த அந்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.
    வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
    இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    கடந்தவாரம் புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. முன்னதாக மும்பை திரைப்பட விழா, 23-வது கேரள சர்வதேச திரைப்பட விழா, ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவிலும் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. 



    இந்த திரைப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். குறிப்பாக, பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை வைத்து திரைக்கதையாக்கி, இயக்குனர் வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth #PIFF

    மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மோகன்லாலை எதிர்த்ததால் தனக்கு பட வாய்ப்பு இல்லை என்று நடிகை பார்வதி கூறியுள்ளார். #Parvathy
    தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். பாலியல் புகாரில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்த மோகன்லாலை கண்டித்ததால் அவரது கோபத்துக்கு ஆளானார். மம்முட்டி குறித்தும் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

    அதன்பிறகு மோகன்லாலுக்கு பயந்து பார்வதியை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள். இதனால் பார்வதி வருத்ததில் இருக்கிறார். மலையாள பட உலகினர் தன்னை ஓரம் கட்டுவதாக ஏற்கனவே புகார் கூறிய அவர் இப்போது மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து பார்வதி கூறியதாவது:-

    “நான் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். சமீபத்தில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடிக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து நியாயம் கேட்டு போராடியதால் என்னை ஓரம் கட்டுகிறார்கள். புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் புறக்கணிக்கிறார்கள். கொலை மிரட்டல் பாலியல் அச்சுறுத்தல்களும் வருகின்றன.



    சில நடிகைகள் சினிமாவில் உச்சத்தில் இருந்து பிறகு காணாமல் போய் இருக்கிறார்கள். அதன் காரணம் அந்த நடிகைகளுக்கு மட்டுமே தெரியும். என்னையும் காணாமல் போக வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். பட வாய்ப்பு இல்லா விட்டால் கடை அல்லது ஓட்டல் திறந்தாவது என்னால் பிழைக்க முடியும். இதற்காக அமைதியாக இருக்க மாட்டேன். பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.”

    இவ்வாறு பார்வதி கூறினார்.
    திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி, மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். #MeToo #Parvathi
    பூ, மரியான் படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்த பார்வதி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

    மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி மீடூ பற்றி பேசினார். ’மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க வி‌ஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது.

    அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்‘. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தியில் மீடூவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். இதைத்தான் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

    சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் மிரட்டல்கள் வருவதாகவும், தினமும் அச்சத்திலேயே இருப்பதாகவும் பார்வதி கூறியுள்ளார். #Parvathy
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்.

    மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அந்த நடிகைக்கு ஆதரவாகவும், நடிகர் திலீப்புக்கு எதிராகவும் பார்வதி பேசி வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார்.

    பார்வதி அளித்துள்ள பேட்டியில், “நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.

    அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்குகூட படவாய்ப்புகள் அளிக்கின்றனர்.



    தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஆனால், கேரளாவில் அப்படி இல்லை. இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.

    அவர்கள் சமூக வலைதளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். தினமும் அச்சத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். #Parvathy

    மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருந்த தன்னை சிலர் தடுத்துவிட்டதாக பார்வதி கூறிய நிலையில், பார்வதி விரும்பினால் அவருக்கு பொறுப்பு அளிக்க தயாராக இருப்பதாக மோகன்லால் கூறியுள்ளார். #Mohanlal #Parvathy
    நடிகை பார்வதி மலையாள நடிகர் சங்கம் குறித்து கூறிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    முன்னணி நடிகரும், நடிகர் சங்க தலைவருமான மோகன்லால் பார்வதி மீதான தன் கோபத்தை பதிவு செய்துள்ளார்.

    மலையாள நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் முன்னணி நடிகர் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்றார். நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது கடும் சர்ச்சை ஆனது. மலையாள நடிகைகள் நடிகர் சங்கத்தின் மீது தங்கள் வெறுப்பை காட்டி வருகின்றனர்.

    முன்னணி நடிகையான பார்வதி ஒரு பேட்டியில் நடிகர் சங்க தேர்தலில் முக்கிய பொறுப்புக்கு போட்டியிட விரும்பியதாகவும், சிலர் தன்னை தடுத்து விட்டதாகவும் கூறி இருந்தார். மோகன்லால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே இது சர்ச்சை ஆனது.



    இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த மோகன்லால், ‘பார்வதியை போட்டியிட வேண்டாம் என்று யார் தடுத்தது? இதை நான் நம்பவில்லை. இது உண்மை என்றால் சமீபத்தில் கூடிய பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டு இதை தெரிவித்து இருக்கலாம்.

    எங்களில் யாராவது விட்டுக்கொடுத்து விலகி இருப்போம். இப்போது கூட அவர் விரும்பினால் பொறுப்புகள் தர தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Mohanlal #Parvathy

    தனுஷ் ஜோடியாக மரியான படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருந்த பார்வதி, பின்னர் உதட்டு முத்தக்காட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். #Parvathy #MyStory
    பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

    மலையாளத்தில் ‘என்னு நின்டே மொய்தீன்’ பட வெற்றிக்கு பிறகு பார்வதி - பிரித்விராஜ் ஜோடி ‘மை ஸ்டோரி’  என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். 

    ரோஷிணி தினகர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் `மிஸி மிஸி' என தொடங்கும் பாடல் காட்சியில், பார்வதியும், பிருத்விராஜூம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்கள். 



    தமிழில் ‘மரியான்’ படத்திற்குப் பிறகு, உதட்டு முத்தத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறிவந்த பார்வதி, மீண்டும் முத்தக்காட்சியில் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். #Parvathy #MyStory #PrithviRaj

    மிஸி மிஸி பாடலை பார்க்க: 

    ×