search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேர்ஸ்டோவ்"

    பாகிஸ்தானுக்கு எதிராக 93 பந்தில் 128 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்க ஐபிஎல் மிகப்பெரிய உதவியாக இருந்தது என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ். இவர் முதன்முறையாக இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரி 55.62 ஆகும். ஆர்சிபி-க்கு எதிராக சதம் விளாசினார்.

    தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    பேர்ஸ்டோவ் 93 பந்தில் 128 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பேர்ஸ்டோவ் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் மாறுபட்ட பயிற்சியாளர்கள், மாறுபட்ட வீரர்களிடம் இருந்து பல்வேறு மாறுபட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதில் சிறிய அளவில் போட்டியின் திட்டங்களும் இருக்கும்.

    டேவிட் வார்னர் முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் பந்தை விரட்டக்கூடியவர். இது வேறெங்கும் இல்லாத முறை. இதில் இருந்து வார்னர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, நெருக்கடியான நிலையில் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என்பதை கற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.
    உலகக்கோப்பை முகாமுக்கு வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் செல்வது ஐதராபாத் அணிக்கு பேரிழப்பு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். #IPL2019 #SRH
    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இங்கிலாந்தின் முன்னணி வீரரான பேர்ஸ்டோவ், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி முடிந்த பின்னர் பேர்ஸ்டோவ் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் முகாமில் இணைய இருக்கிறார்.

    இதனால் தொடர்ந்து அவரால் விளையாட முடியாது. அதேபோல் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு செல்ல இருக்கிறார். ஆகவே இரண்டு நட்சத்திர வீரர்களை ஐதராபாத் இழக்கிறது. இது மிகப்பெரிய பேரிழப்பாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.



    ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் ஐதராபாத் 9 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் 6-வது வெற்றியாகும். அதன்பின் நான்கில் இரண்டில் வெற்றி பெற்றாலே ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேற முடியும்.

    டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி இந்த சீசனில் 9 இன்னிங்சில் 733 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 517 ரன்களும், பேர்ஸ்டோவ் 445 ரன்களும் குவித்துள்ளனர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்துள்ளது. #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

    பேர்ஸ்டோவ், வார்னர் ஆகியோர் சதம் அடித்தனர். பேர்ஸ்டோவ் 56 பந்தில் 114 ரன்களும், டேவிட் வார்னர் 55 பந்தில் 100 ரன்களும் சேர்த்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 16.2 ஓவரில் 185 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

    2017 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் காம்பிர் - கிறிஸ் லின் ஜோடி ஆட்டமிழக்காமல் 184 ரன்கள் அடித்திருந்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆக இருந்தது. தற்போது இந்த ஜோடி அந்த சாதனையை உடைத்தெறிந்துள்ளது.

    ஆர்சிபி அணியின் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒரே ஆட்டத்தில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது வார்னர், பேர்ஸ்டோவ் சதம் அடித்துள்ளனர்.



    இந்த சதம் மூலம் வார்னர் ஐபிஎல் தொடரில் நான்கு சதங்கள் அடித்து கோலி, வாட்சன் சாதனையுடன் 2-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 6 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    பேர்ஸ்டோவ் 3-வது இன்னிங்சிலேயே சதம் அடித்து சைமண்ட்ஸ் உடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். பிராண்டன் மெக்கல்லம், மைக் ஹசி ஆகியோர் தங்களது முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து சாதனைப் படைத்திருந்தனர்.

    இந்த ஜோடி மூன்று போட்டிகளிலும் 100-க்கு மேல் ரன் குவித்துள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்னைக் கடந்த முதல் ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
    பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் சதம் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 232 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2019 #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பேர்ஸ்டோவ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக பறக்க விட்டார்.



    4.5 ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 50 ரன்னைத்தொட்டது. 9-வது ஓவரை அறிமுக வீரர் பர்மன் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் அரைசதத்தை தொட்டர். 9.4 ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 100 ரன்னைக் கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் 52 பந்தில் தனது முதல் சத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய வார்னர் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

    அணியின் ஸ்கோர் 185 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 56 பந்தில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்தபின்னர் வார்னர் மின்னல் வேகத்தில் ரன்குவிக்க தொடங்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17.2 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.


    டேவிட் வார்னர்

    கடைசி ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டேவிட் வார்னர் சதம் அடித்தார். பேர்ஸ்டோவ், வார்னர் ஆகியோரின் சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 55 பந்தில் தலா ஐந்து பவுண்டரி, சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
    இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலே, பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் நாளைமறுநாள் (23-ந்தேதி) கொழும்பில் தொடங்குகிறது.

    முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.

    கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்தனர். #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தம்புல்லாவில் தொடங்கியது. பகல்-இரவு போட்டியினான முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜேசன் ராய் 27 பந்தில் 24 ரன்களும், பேர்ஸ்டோவ் 24 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் அதிரடியை தொடங்கினார்கள். ஜோ ரூட் 28 பந்தில் 25 ரன்களும், மோர்கன் 11 பந்தில் 14 ரன்களும் அடித்திருந்த போது இங்கிலாந்து 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

    அப்போது கனமழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார். இதனால் முடிவின்றி முதல் ஆட்டம் முடிவுக்கு வந்ததது. மழையால் ஆட்டம் தடைபட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 2-வது போட்டி தம்புல்லாவில் நாளைமறுநாள் (13-ந்தேதி) நடக்கிறது.
    இடது கைவிரல் முறிந்து சிகிச்சை மேற்கொண்டு வரும் பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பராக பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

    டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது (ஆண்டர்சன் வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது இடது கை நடுவிரலை பந்து பலமாக தாக்கியது). பின்னர் மருத்துவ பரிசோதனையில் விரலில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    3-வது டெஸ்டிற்கும் 4-வது டெஸ்டிற்கும் இடையில் சுமார் 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் அவரது காயம் குணமடைந்து அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால், காயம் முழுமையாக குணமடைந்தால்தான் அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இல்லையெனில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் நான் விக்கெட் கீப்பர் பணியை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘‘விக்கெட் கீப்பர் பணியை நான் நேசிக்கிறேன். கடந்த 40 டெஸ்ட் போட்டிகளில் நான் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளேன்’’ குறிப்பிட்டுள்ளார். பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் பணியை செய்யவில்லை என்றால் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.
    ×