search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசில்வுட்"

    இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ், ஹசில்வுட் இடம்பெறவில்லை. #PAKvAUS
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிறது தற்போது வரை டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கிறது.

    அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. ஸ்மித், வார்னர் இல்லாததால் மாற்று வீரர்களை கொண்ட வலுவான அணியை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் முதுகு வலியில் இருந்து இன்னும் 100 சதவீதம் நிவாரணம் பெறவில்லை என்பதால் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் மிட்செல் ஸ்டார்க் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
    நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடுமையானதாக இருக்கும் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. வார்னர், ஸமித், பான்கிராப்ட் இல்லாத அந்த அணியை இந்தியா இந்த முறை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக வருகிற தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. எப்போதுமே கடுமையானதாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மண்ணில் அவர்களை துவம்சம் செய்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள்.



    எங்களது அணியில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் இல்லாததால் வீக்கான அணி என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறந்த அணியாக உருவெடுக்க முயற்சி செய்வோம். எங்களுடைய மண்ணில் விளையாடும்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தொடரிலேயே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

    தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதியில் 1-2 என தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மண்ணில் அவர்களை ஒருவழி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ×