search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. #BSNL
    சென்னை:

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

    ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக் கான பில்களை கடைசி தேதிக்குள் செத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும்.

    வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

    பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

    அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீதம் தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.


    இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்து வரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

    இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் வி.ராஜீ மற்றும் சென்னை டெலிகாம் துணை பொது மேலாளர் ஜி.விஜயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். #BSNL
    குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #GutkhaScam
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டன. இதற்காக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    இதனடிப்படையில், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர்  சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


    இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மாதவராவ், சினிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 பேரையும் ஜாமீனில் விட்டால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam
    ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #Jayalalithaa #Amrutha #DNAtest
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.



    1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

    ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

    இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

    ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த  நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். #Jayalalithaa #Amrutha #DNAtest 
    பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகிறது. #FlipkartBigBillionDaySale



    பிளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 11) நள்ளிரவு முதல் மொபைல் போன்களுக்கான சலுகை வழங்கப்படுகிறது. 

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் XS 64 ஜி.பி. மாடலின் விலை ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.94,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    இத்துடன் எக்சேஞ்ச் முறையில் ரூ.18,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.2500 தள்ளுபடி பெற முடியும். ஐபோன் XS மேக்ஸ் வாங்குவோருக்கும் இந்த சலுகை பொருந்தும்.

    ஆப்பிள் ஐபோன் X 64 ஜி.பி. வேரியன்ட் ரூ.22,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.69,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 வரை தள்ளுபடி பெற முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ.5000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். 

    சியோமியின் பிரபல ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.2000 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்து கூடுதலாக ரூ.11,700 வரை தள்ளுபடி பெற முடியும். Mi மிக்ஸ் 2 (128 ஜி.பி.) வேரியன்ட் ரூ.15,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.18,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.



    இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகமான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.2700 குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.13,199 விலையில் விற்பனையாகி வந்த நோக்கியா 5.1 பிளஸ் தற்சமயம் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.2601 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.11,700 வரை தள்ளுபடி பெற முடியும்.

    ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 (64 ஜி.பி.) வேரியன்ட் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.15,700 வரை தள்ளுபடி பெற முடியும். அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. வேரியன்ட் ரூ.9,999 விலையிலும், 4 ஜி.பி. ரேம் வேரியன்ட் ரூ.10,999-க்கும் 6 ஜி.பி. ரேம் வேரியன்ட் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுமட்டுமின்றி பிளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி கள்ளுபடியும் ரூ.40,000-க்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ.2,500 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் தேர்வு செய்யப்பட்ட கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூன்டாய் நிறுவன வாகனங்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. #Hyundai #offer



    புதிய பொருள் வாங்கும் பலரும் பண்டிகை காலத்தில் தான் அவற்றை நிறைவேற்றிக் கொள்வர். பொதுவாக பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 

    இந்தியாவில் பண்டிகை காலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பலர் இந்த காலக்கட்டத்தில் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவர். இந்த பண்டிகை காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குகின்றன.

    அந்த வகையில் ஹூன்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. பண்டிகை கால சலுகைகள் அக்டோபர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.



    ஹூன்டாய் இயான் மாடலுக்கு ரூ.60,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.45,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூன்டாய் இயான் போன்று ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, , கிரான்ட் i10, எக்ஸ்-சென்ட், எலான்ட்ரா மற்றும் டக்சன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    இவற்றில் ஹூன்டாய் எலான்ட்ரா மற்றும் டக்சன் வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
    சாம்சங் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கேலக்ஸி வாட்ச் சாதனம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. #GalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்திய சந்தையில் ரூ.67,900 விலையில் கிடைக்கும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவு துவங்கிய சில வாரங்களில், கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வெறும் ரூ.4,999 விலையில் வழங்குவதாக அறிவித்தது. சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் உண்மை விலை ரூ.22,990 ஆகும்.

    இந்நிலையில், சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி வாட்ச் (42 எம்.எம்.) மாடலுக்கு குறுகிய கால சலுகையாக ரூ.9,999 விலையில் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது. கேலக்ஸி வாட்ச் உண்மை விலை ரூ.24,990 ஆகும். சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை செப்டம்பர் 26-ம் தேதி துவங்கி அக்டோபர் 20-ம் தேதி வரை செல்லுபடியாகும்.



    சாம்சங் அறிவித்து இருக்கும் குறுகிய கால சலுகை சாம்சங் ஆஃப்லைன் விற்பனை மையத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்ட நிலையில், ஆன்லைனில் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே சாம்சங் ரூ.6,000 கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியை தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு வழங்குகிறது. 

    இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதியின் கீழ் மாதம் ரூ.7543.80 என்றும், பேடிஎம் மால் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.6000 கேஷ்பேக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.6,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. #Pakistan #SupremeCourt #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார்.

    அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.



    அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு காலாவதியாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கடந்த பாராளுமன்ற காலகட்டத்தில் போடப்பட்டது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். #Pakistan #SupremeCourt #ImranKhan
    பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #PetrolDiesel #PetrolPriceHike
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அங்குள்ள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அரசின் பொருளாதார கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறிவிட்டது.



    இதைத்தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை எந்த அடிப்படையில் தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை வெளியிடுமாறும், அவற்றை அத்தியாவசிய பொருட்களாக கருதி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பூஜா மகாஜன் மற்றொரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகளில் கோர்ட்டு தலையிடாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையில் ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel #offer

     

    ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையில் வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக, ஏர்டெல் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் ரூ.100 விலையில் ஏர்டெல் காம்போ சலுகையை அறிவித்தது. காம்போ சலுகை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குள் ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. 

    இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா, மொத்தம் 200 எஸ்.எம்.எஸ்., 28 நாட்களுக்கு 350 நிமிடங்கள் அல்லது 21,000 நொடிகள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. குறிப்பாக வாய்ஸ் கால் சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேறுபடுகிறது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 300 நிமிடங்கள் அல்லது 18,000 நொடிகள் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ.99 சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.99 சலுகையில் வாய்ஸ் கால் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை, இதனால் பயனர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #MansoorAlikhan
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் பல நடக்கின்றன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

    எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை தொடர்ச்சியாக 7 நாட்கள் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த துறையில் நிபுணர்களாக உள்ளவர்களை கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சோதனை செய்து, ஓட்டு எந்திரம் மூலம் தேர்தல் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிப்பேன் என்று இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கடந்த ஜூலை 10-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதை நான் நிரூபிக்கும் விதமாக 7 நாட்கள், அந்த எந்திரத்தை என்னிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வக்கீல் இல்லாமல், மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி வாதிட்டார். இவரது கோரிக்கை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.  #MansoorAlikhan
    சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. #galaxys8



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் ரூ.64,900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் அதன்பின் ரூ.58,900 மற்றும் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.53,990 என விலை மாற்றியமைக்கப்பட்டது.

    இருமுறை விலை குறைக்கப்பட்ட நிலையில், கேலக்ஸி எஸ்8 பிளஸ் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ரூ.12,000 வரை விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கேலக்ஸி எஸ்8 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை ரூ.39,990 விலையில் வாங்கிட முடியும்.

    முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, சமீபத்தில் கேலக்ஸி நோட் 9 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நி்லையில், புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் 128ஜிபி வேரியன்ட் விற்பனை குறைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் இவற்றின் விலை குறைக்கப்படவில்லை.

    கேலக்ஸி எஸ்8 பிளஸ் புதிய விலையில் ஆஃப்லைன் விற்பனை மையங்கள், சாம்சங் ஷாப் ஆன்லைன் தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் புதிய விலை மாற்றப்படும் என தெரிகிறது. விலை குறைப்பு மட்டுமின்றி கேலக்ஸி எஸ்8 பிளஸ் வாங்குவோருக்கு பேடிஎம் சார்பில் ரூ.8,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QHD+1440x2960 ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    இத்துடன் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 நானேமீட்டர் என்ற அளவில் உலகின் மிகவும் மெல்லிய பிராசஸர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மெமரியை பொருத்த வரை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் ஆப்ஷன்களுடன் பல்வேறு இதர சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சாம்சங் பே வசதியும், 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரும் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Villupuram #AIIMS #SupremeCourt
    புதுடெல்லி:

    விழுப்புரத்தை சேர்ந்த வக்கீல் வி.ஜெயகுமார் என்பவர், தமிழ்நாட்டில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை விழுப்புரத்தில் அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து வி.ஜெயகுமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் 1,490 வருவாய் கிராமங்கள், 13 தாலுகாக்கள், 22 ஒன்றியங்கள், 5 நகர பஞ்சாயத்துகள், 3 நகராட்சிகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் இந்த மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே கிராமப்புறத்தில் வசிக்கும் மக்களின் விகிதாச்சாரம் அதிகமாக கொண்ட மிகப்பெரிய மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் விபத்துகளும் மிகவும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

    இந்த நிலையில் இந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது மிகவும் சரியாக இருக்கும் என்று கோரும் மனுவை சென்னை ஐகோர்ட்டு சரியாக விசாரிக்க தவறி உள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  #Villupuram #AIIMS #SupremeCourt
    ×