search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    ஓட்டலுக்கு உணவு பொருட்களை வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hotels
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பைகள், கப் போன்றவற்றின் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்கவும், வியாபாரிகள் விற்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஓட்டலில் உணவு வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல்களில் உணவு பார்சலுக்காக 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை செலவு செய்கிறோம். வாடிக்கையாளர்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாத்திரங்களை கொண்டு வந்தால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்க தயாராக இருக்கிறோம். இதுபற்றி அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு சென்னை ஓட்டல்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக உணவுகளை பார்சல் செய்ய மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அலுமினிய படலம் கொண்ட காகிதங்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாழை இலை மற்றும் தையல் இலைகளை சில ஓட்டல்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக காட்போர்டு அட்டைகளை பயன்படுத்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Hotels #PlasticBan
    இந்தியாவில் நோக்கியா புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 21-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நோக்கியா மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #NokiaMobile #smartphone


    இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு முன் ஹெச்.எம்.டி. குளோபோல் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. முன்னதாக மே மாதத்தில் நோக்கியா 6.1 பிளஸ் சர்வதேச மாடல் நோக்கியா X6 பெயரில் சீனாவில் வெளியிடப்பட்டது

    சர்வதேச சந்தையில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 2018 மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது, முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பின் இதே ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    தற்சமயம் விலை குறைப்புக்கு பின் 3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.15,499 மற்றும் 6 ஜிபி ரேம் மாடல் ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு நோக்கியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.



    நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2280 பிக்சல் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3060 எம்ஏஹெச் பேட்டரி
    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் ஸ்மார்ட்போன் விவரங்களை பார்ப்போம். #Samsung #smartphone


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஜெ7 டுயோ விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், கேலக்ஸி ஜெ7 டுயோ விலை மீண்டும் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் மாற்றப்பட்டு விட்டது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.13,990 என்றே காட்சியளிக்கிறது.

    புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி ஜெ7 டுயோ 4ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஒப்போ ரியல்மி 1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்ட நிலையில், பயனர்கள் அமேசான் ஃப்ரீம் சேல் விற்பனையை பயன்படுத்தி, ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் சலுகை அல்லது தள்ளுபடி பெற முடியும்.



    சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7 சீரிஸ் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமராஸ எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
    இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. #reliance #offers


    ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் சுதந்திர தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு அதிரடி சலுகைகள், தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் டிஜிட்டல் சார்பில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்டு 11-ம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை ஆகஸ்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. ரிலையன்ஸ் அறிவித்திருக்கும் சிறப்பு விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் பல்வேறு பொருட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் விற்பனையாகும் முன்னணி ஸ்மார்ட்போன்கள், மொபைல் போன் லேப்டாப் மற்றும் பல்வேறு மின்சாதனங்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு 10% தள்ளுபடி அல்லது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியா விற்பனையில் ஹெச்.டி. டிவி மாடல்கள் ரூ.10,990 ஆரம்ப விலை கொண்டுள்ளது. வாஷிங் மெஷின்களின் துவக்க விலை ரூ.10,490, குளிர்சாதன பெட்டிகள் ரூ.11,490 முதல் கிடைக்கின்றன. 

    இத்துடன் சவுன்ட் பார், ஆல்-இன்-ஒன் ப்ரின்டர் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட சாதனங்களை வாங்குவோருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. #reliance #offers
    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் ஃப்ரீடம் சேல் சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. #flipkartoffers


    ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் ஃப்ரீடம் சேல் விற்பனை துவங்கியது. இன்று (ஆகஸ்டு 10) துவங்கியிருக்கும் சிறப்பு விற்பனை ஆகஸ்டு 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதனங்களுக்கு எக்சேன்ஜ் சலுகைகள், வட்டியில்லா மாத தவனை முறை வசதி மற்றும் பைபேக் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

    ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் 32ஜிபி மாடல் விலை ரூ.10,999-இல் இருந்து ரூ.3,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் ரூ.49,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ.61,000 என்ற வகையில், பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து அதிகபட்சம் ரூ.15,950 வரை விலையை குறைக்க முடியும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.8,000 வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.



    ஹானர் 10 (6 ஜிபி) வெர்ஷன் விலையில் ரூ.6,000 குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் இதனை ரூ.29,999 விலையில் வாங்கிட முடியும். மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக உடனடி தள்ளுபடியாக அதிகபட்சம் ரூ.17,950 வரை பெற முடியும்.

    எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் முதல்முறையாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், தள்ளுபடி எதுவும் வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகமானதால், புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு ரூ.15,950 வரை உடனடி தள்ளுபடி, ஸ்மார்ட்போனின் விலையில் கூடுதலாக ரூ.199 செலுத்தும் போது ரூ.30,000 வரை பைபேக் உத்தரவாதம் பெற முடியும். இவ்வாறு எட்டு மாதங்களில் எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போனை வழங்கும் போது ரூ.30,000 வரை வழங்கப்படும்.

    ஆப்பிள் ஐபேட் (6-ம் தலைமுறை) 32 ஜிபி மற்றும் வைபை மாடல் விலை ரூ.4,100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.23,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 (42 எம்.எம்.) விலை ரூ.6,510 குறைக்கப்பட்டு ரூ.27,900 விலையில் விற்பனையாகிறது. #Flipkart #flipkartoffers
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் பாணசுர சாகர் என்ற திட்டத்தின் கீழ் வரக்கூடிய குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று சீராய்வு மனுவை கேரளா அரசு மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தங்கள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நேற்று விசாரித்தனர். ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா விற்பனை இன்று துவங்கி நடைபெறுகிறது. சிறப்பு விற்பனையில் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா விற்பனை இன்று துவங்குகிறது. Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு விற்பனை ஜூலை 12-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனை மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் நிலையில், ஜூலை 8-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

    கவர்ச்சிகர சலுகைகள் மட்டுமின்றி ரூ.4 விலையில் ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதில் Mi எல்இடி டிவி 4 (55-இன்ச்), ரெட்மி வை2, ரெட்மி நோட் 5 ப்ரோ, Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை பயனர்கள் ரூ.4 விலையில் வாங்கிட முடியும். இதேபோன்று Mi மிக்ஸ் 2 மற்றும் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஆண்டு விழா சிறப்பு விற்பனைக்கென சியோமி நிறுவனம் ஸ்டேட் பேங்க், மொபிக்விக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேகே உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. அந்த வகையில் ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.



    ரூ.4 ஃபிளாஷ் விற்பனை:

    இன்று (ஜுலை 10) மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இதே போன்று ஜூலை 11 மற்றும் ஜுலை 12 ஆகிய தேதிதகளிலும் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் வாங்க முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.
     
    Mi ஆண்டு விழா சிறப்பு தள்ளுபடிகள்:

    சியோமியின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ரூ.27,999 (ரூ.29,999), Mi மேக்ஸ் 2 ரூ.14,999 (ரூ.15,999), பேக்பேக் விலை ரூ.1,899 (ரூ.1,999), Mi இயர்போன்கள் ரூ.649 (ரூ.699), Mi பேன்ட் 2 ரூ.1,599 (ரூ.1,799) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் சியோமி டிராவல் காம்போ சலுகையின் கீழ் Mi டிராவல் பேக்பேக் மற்றும் Mi ஸ்டிக் ட்ரைபாட் இணைந்து வாங்கும் போது ரூ.2,948-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று Mi பேன்ட் HRX எடிஷன் மற்றும் Mi பேன்ட் ஸ்டிராப் புளு விலை ரூ.1,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    Mi பிளாக்பஸ்டர் விற்பனை:

    சியோமி சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வரயிருக்கிறது. இதேபோன்று Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ (32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச்) மாடல்களும் ஜுலை 10-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோன்று ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் Mi அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 11-ம் தேதி மதியம் 2.00 மணிக்கும், ரெட்மி 5 ஸ்மார்ட்போன் ஜூலை 12-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு நடைபெறுகிறது.

    குறைந்த கால சலுகை:

    சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஜூலை 10 முதல் 12-ம் தேதி வரை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. ரெட்மி நோட் 5 மற்றும் Mi வி.ஆர். பிளே 2 காம்போ ரூ.9,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி வை1 மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட் காம்போ ரூ.8,999 விலையில் விற்பனை  செய்யப்படுகிறது. இதேபோன்று Mi இயர்போன் பேசிக் காம்போ ரூ.1,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டுவிழா விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனை தேதி மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி நிறுவனத்தின் 4-ம் வருட Mi ஆண்டு விழா சிறப்பு விற்பனை அறிவிக்கப்ப்டடு இருக்கிறது. இந்த ஆண்டு ஜுலை 10-ம் தேதி துவங்கி 12-ம் தேதி வரை சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது. 

    சியோமி ஆண்டு விழா சிறப்பு விற்பனையில் ரூ.4 ஃபிளாஷ் விற்பனை, குறைந்த விலையில் இரண்டு சாதனங்கள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் சிறப்பு போட்டி உள்ளிட்டவை நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்வோர் Mi மிக்ஸ் 2, ரெட்மி வை2 மற்றும் பல்வேறு சலுகைகளை பெற முடியும். 

    ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணிக்கு ஃபிளாஷ் விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனையில் ரெட்மி வை1, Mi எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55 இன்ச், Mi பாடி கம்போசிஷன் ஸ்கேல், ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வை2 மற்றும் Mi பேன்ட் 2 உள்ளிட்டவற்றை ரூ.4 விலையில் பெற முடியும். இதேபோன்று Mi ப்ரோடெக்ட் ரூ.300 வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    ஜூலை 9-ம் தேதி இரவு 11.59 மணி வரை ரெட்மி Mi பயனர்கள் தங்களது எஃப்-கோடுகளை பிரத்யேகமாக பெற முடியும். கூப்பன்களுக்கான வேலிடிட்டி மற்றும் எஃப் கோடுகள் ஜூலை 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி ஜுலை 12-ம் தேதி இரவு 11.59 வரை செல்லுபடியாகும்.

    சிறப்பு விற்பனையின் போது ரூ.7500 வரை பொருட்களை வாங்கும் ஸ்டேட் பேங் பயனர்கள் ரூ.500 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். இதேபோன்று ரூ.8,999 வரை பொருட்களை வாங்குவோர் பேடிஎம் வாலெட் மூலம் பணத்தை செலுத்தும் போது ரூ.500 கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் மொபிக்விக் மூலம் பணத்தை செலுத்தும் போது 25% தள்ளுபடி (அதிகபட்சம் ரூ.3000) வரை சூப்பர்கேஷ் பெற முடியும்.
    சோனி மொபைல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் மாடல் உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    சோனி மொபைல் நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZs, எக்ஸ்பீரியா L2 மற்றும் எக்ஸ்பீரியா R1 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZs ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் ரூ.49,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சோனி எக்ஸ்பீரியா L2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரூ.19,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா R1 தற்சமயம் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.3,000 வரை குறைவு ஆகும்.

    ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பை தொடர்ந்து சோனி விற்பனை மையங்கள், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைத்தளங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ பிரீமியம், XA1 அல்ட்ரா மற்றும் XA1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் புதிய விலை குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மாப்ரட்போன் மே மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் விலை தற்சமயம் ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி ஏ6 வேரியன்ட்களின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
    - 24 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - சாம்சங் பே மினி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை விரைவில் ரூ.23,990-க்கு அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    புதிதாக நியமிக்கப்பட்ட ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 7 நீதிபதிகளை நியமித்து சமீபத்தில் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து நிர்மல்குமார், ஆஷா, சுப்பிரமணியம் பிரசாத் உள்பட 7 பேரும் கடந்த 4-ந் தேதி நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இவர்களில் சுப்பிரமணியம் பிரசாத்தை நீதிபதியாக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வக்கீல் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சென்னை ஐகோர்ட்டிலும், அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட கோர்ட்டிலும் வக்கீலாக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், சுப்பிரமணியம் பிரசாத் அதுபோன்று பணியாற்றவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சுப்பிரமணியம் பிரசாத் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீலாக கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என்று வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் நியமனம் நடைபெறவில்லை. ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட அவருக்கு தகுதி உள்ளது. இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் தான் என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் மூத்த நீதிபதிகள் குழு(கொலிஜியம்) முடிவு செய்துள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். #tamilnews
    ×