search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுபடி"

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். #MPFarmersloanwaival #Rahul
    இந்தூர்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது மன்ட்சவுர் மாவட்டத்தில் வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவத்தை முதலாண்டு துக்க தினமாக இன்று அம்மாநில விவசாயிகள் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, மன்ட்சவுர் மாவட்டம், பிப்லியா மன்டி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.



    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மேடையில் ஜோதிராதித்யா சிந்தியா, மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் போன்றவர்கள் அமர்ந்துள்ளனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். #MPFarmersloanwaival #Rahul

    பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 4-வது முறையாக தள்ளுபடி செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Nirmaladevi
    விருதுநகர்:

    மாணவிகளை பாலியலுக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. நிர்மலாதேவி சார்பில் சாத்தூர் கோர்ட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 முறையும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.


    இந்த நிலையில் 4-வது முறையாக ஜாமீன் கேட்டு நிர்மலாதேவி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    நேற்று இதே நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமியின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #Nirmaladevi
    அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
    விருதுநகர்:

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.



    இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    நீதிபதி முத்து சாரதா விசாரணை நடத்தி 2 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.#NirmalaDevi #Karuppasamy #Murugan

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், அது முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். #Kumaraswamy #KarnatakaFarmLoan
    புதுடெல்லி:

    கர்நாடக முதல்வர்  குமாரசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வேன் என நான் தெளிவாக கூறியிருக்கிறேன். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்திற்குள் அதனைச் செய்வேன் என தேர்தலின்போது வாக்குறுதியும் அளித்திருந்தேன். அது உண்மை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எனக்கு சற்று அவகாசம் வேண்டும். இன்று எனக்கு சில வரையறைகள் உள்ளன.

    நான் கூறியபடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாவிட்டால், நான் அரசியலில் இருந்தே ஓய்வு பெறுவேன் என்று கூறியிருக்கிறேன். அதேபோல் முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வேன். ஏன் இன்னும் சில காலம் காத்திருக்க முடியாதா? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்வான வழிகாட்டி விதிமுறைகள் தயாராக உள்ளன. அதனை பெங்களூரில் புதன்கிழமை மக்களிடையே தெரியப்படுத்த உள்ளேன்.



    விவசாயக் கடன் தொடர்பாக எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளை கேள்விப்பட்டேன். நான் அமைதியாக இருக்கவில்லை. அமைதியாக இருக்க நான் ஒன்றும் எடியூரப்பா இல்லை. நான் முதல்வராக இருக்கும் வரை மக்களுக்காக சேவை செய்வேன். விவசாயக் கடன் விவகாரம் மட்டுமல்லாமல் மக்கள் தொடர்பான பிற விஷயங்களிலும் சிறந்த முறையில் பணியாற்றுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #KarnatakaFarmLoan
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை 3-வது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் கோர்ட்டில் நிர்மலா தேவி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி 3-வது முறையாக ஜாமின் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நிர்மலா தேவிக்கு ஜாமீன் கொடுப்பதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது ஜாமின் மனுவும் இதே கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அவர்களது ஜாமின் மனுக்கள் குறித்தான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #Nirmaladevi
    அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பான உரையாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கல்லூரி செயலாளர் ராமசாமி, அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிங்கராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் கருப்பசாமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, முருகனின் மனுவை விசாரணைக்காக 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


    மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுக்களை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Nawazsharif #treasoncase #dismissed
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    நவாஸ் ஷெரீப்பின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதே நிலையில், நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தெஹ்ரீக் இ இன்சாப், பாகிஸ்தானி அவாமி தெஹ்ரீக் மற்றும் வழக்கறிஞர் அப்துல்லா மாலிக் ஆகியோர் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை நிராகரித்த நீதிபதி மிர்ஷா, மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி தெரிவித்தார். #Nawazsharif #treasoncase #dismissed
    ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை திருவிழா இன்று துவங்கியது. இதில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி:

    ப்ளிப்கார்ட் தளத்தின் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை திருவிழா துவங்கியது. 

    சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களுக்கு சிறப்பு விற்பனை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கூகுள் பிக்சல் 2, சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 பிளஸ், ஆப்பிள் ஐபோன் X உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை ப்ளிப்கார்ட் மொபைல் செயலியை பயன்படுத்துவோருக்கும் வழங்கப்படுகிறது.



    ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள்

    ஐபோன் X ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் ரூ.13,391 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.81,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
    இதேபோன்று கூகுள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் ரூ.18,001 வரை குறைக்கப்பட்டு ரூ.54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ரூ.15,000 வரை எக்சேஞ்ச் மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.43,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ரூ.42,999 விலையில் விற்பனை செய்யப்படுவதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    ஹூவாய் ஹானர் 9 லைட் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஹானர் 9 லைட் 4 ஜிபி ரேம் ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஹானர் 9i ஸ்மார்ட்போன் ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    ரெட்மி நோட் 5 (4ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.1200 தள்ளுபடி செய்யப்பட்டு ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.10,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ எஃப் 7 64 ஜிபி மாடல் ஃபிளாஷ் முறையில் விற்பனைக்கு வரயிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கும் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச், லேப்டாப், கேமரா மற்றும் பல்வேறு சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.4999 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இத்துடன் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவனை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு பைபேக் கியாரன்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை திருவிழா மே 16-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

    குறிப்பு: இங்கு தொகுக்கப்பட்டு இருக்கும் சாதனங்களின் விலை எந்நேரத்திலும் ப்ளிப்கார்ட் சார்பில் மாற்றப்படலாம். சலுகைகள் மற்றும் தள்ளுபடி விவரங்கள் ஸ்டாக் இருப்புக்கு தகுந்தார்போல் மாற்றியமைக்கப்படும்.
    ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Sridevi #Sridev #Sridevideath
    பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர்.



    ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Sridevi #Sridev #Sridevideath
    மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi #NirmalaDeviCase

    ×