search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டாள்"

    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசியான இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

    ஓம் வாஜுஸூதேவம்
    ஹ்ருஷீகேஸம் வாமனம்
    ஜலஸாயினம் ஜனார்தனம்
    ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்
    கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம்
    ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம்
    விஷ்ணும் அனந்த
    மஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம்
    கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம்
    பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம்
    யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம்
    ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம்
    துஷ்டதமனம் பூகர்பம்
    பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
    த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
    நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
    ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
    ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
    மங்கலாயுதம்
    தாமோதரம்
    தமோபேதம் கேஸவம்
    கேஸிஸ¨தனம் வரேண்யம்
    வரதம் விஷ்ணுமானந்தம்
    வஸூதேவஜம்
    ஹிரண்யரேதஸம்
    தீப்தம் புராணம்
    புருஷோத்தமம் ஸகலம்
    நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
    குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம்
    ஸூர்யாயுத
    ஸமப்ரபம்மேகஸ்யாமம்
    சதுர்பாஹம் குஸலம்
    கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
    ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
    ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
    ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
    ஜ்ஞானதம் பரமம்
    ப்ரபும்யோகீஸம் யோக
    நிஷ்ணாதம் யோகினம்
    யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
    வந்தே பூதமயம் ப்ரபும்இதி
    நாமஸதம் திவ்யம்
    வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம்
    ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ
    பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸூத்தாத்மா:
    விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி
    கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி
    முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம்
    பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம
    ஸ்தோத்திரம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்து கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டனர். #VaikundaEkadasi #Srirangam #Sorgavasal
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.



    நேற்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை.

    இன்று (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.



    இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

    திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

    இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. #VaikundaEkadasi  #Srirangam #Sorgavasal

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.
    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

    திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர் களுக்கு அருளை அளிக்கிறார்.

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
    ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

    பரமபதம்

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

    விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
    கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும் என்று அருளினார்.
    மாதங்களில் நான் மார்கழி என்பது கிருஷ்ணரின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்தி லிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்து கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள். பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், ‘பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்‘ என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், ஹூம் என்று ஓர் ஒலி எழுப்பினாள். அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர்போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டினார். ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் என்று அருளினார். மார்கழி மாத தேய் பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும். மார்கழி மாதம் வளர் பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்

    கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடுவதைக் கண்ட பெருமாள் காவலர்களிடம்‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டதால், மக்கள் மனதில் தர்ம சிந்தனை குறைந்து அதர்மம் தலைதூக்கும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும் சூழலில் மானிடர்கள் யாரும் வைகுண்டத்திற்கு வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

    அதற்கு பெருமாள், “கலியுகத்தில் பக்தி மார்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயநலமின்றி தர்ம, புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் சிந்தனையில் பெருமானையும், மனதில் பக்தியையும் நிறுத்தி கடைப்பிடித்து பரமபத வாசலை கடக்கிறார்களோ அவர்களுக்கு வைகுண்ட வாசத்தில் கொடுத்தருளுவார் அரங்கன்.
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும்.
    ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

    மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

    இதற்கு என்ன பொருள் தெரியுமா?

    அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

    நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

    அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

    அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

    அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும். 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

    இன்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர் அவர்காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளுகிறார். காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவை நடைபெறும். காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவை நடைபெறும். பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படும்.

    மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜன சேவை நடைபெறும். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆர்யபடாள் வாசல் அடைந்து இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து கருடமண்டபம் சேருகிறார். இரவு 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி கருடமண்டபத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    இன்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி கிடையாது.

    மார்கழி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் முதல் நாளான நேற்று பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் ஆண்டாள், நந்தகோபன் குமரன் அலங்காரத்தில் காட்சியளித்ததை படத்தில் காணலாம்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

    இதனையொட்டி நாளை அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் 5.45 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசமாகி காலை 7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

    8 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவான் தலைமையில் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து உள்ளனர். 
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    நாளை காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் செல்லலாம். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று என்னென்ன நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

    ஸ்ரீநம்பெருமாள் ரத்னங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பாடு- அதிகாலை 4.15 மணி
    பரமபதவாசல் திறப்பு(லக்னப்படி)-காலை 5.30 மணி
    திருக்கொட்டகை பிரவேசம்-காலை 5.45 மணி
    சாதரா மரியாதை-காலை 7 மணி
    திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல்-காலை 8 மணி
    அலங்காரம் அமுது செய்ய திரை-காலை 8-8.45 மணி
    பொதுஜன சேவை-காலை 8.45 மாலை 6 மணி
    அரையர் சேவை (பொதுஜன சேவையுடன்)-மாலை 4.15-5 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)- மாலை 6-8 மணி
    திருப்பாவாடை கோஷ்டி-இரவு 8-9 மணி
    வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை-இரவு 9-10 மணி
    உபயக்காரர் மரியாதை (பொதுஜன சேவையுடன்)-இரவு 10.30-11 மணி
    புறப்பாட்டுக்கு திரை-இரவு 11.30-12 மணி
    திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு-இரவு 12 மணி
    வீணை வாத்யத்துடன் மூலஸ்தானம் சேருதல்- 19.12.2018 அதிகாலை 1.15 மணி
    அரையர் சேவை
    உயர்வற பாசுரம், அபிநயம், வியாக்யானம் திருவாய்மொழி முதல் பத்து 110 பாசுரங்கள்.
    மூலவர் முத்தங்கி சேவை
    சேவை நேரம்-காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
    இரவு 7 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
    பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்: அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை.

    ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பகல் பத்து நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். இதனால் அந்த 10 நாட்களும் இரவு 9 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 18-ந்தேதி வைகுண்ட ஏகாதசி. அன்று முதல் 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த 10 நாட்களும் பரமபரவாசல் திறந்திருக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தான் பரமபதவாசல் வழியாக சென்று வர முடியும்.
    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்.
    மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.

    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.

    கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

    மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.

    மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.

    மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.

    மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இங்கு அவதரித்த ஆண்டாள் ஸ்ரீ ரங்கத்து பெருமானை நினைத்து மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல்கள் பாடி அவரையே கைத்தலம் பற்றினார். அந்த வகையில் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இதில் பச்சைபரத்தல், பகல் பத்து, ராப்பத்து உற்சவங்கள், வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம் என இந்த மாதம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

    பிற்பகல் 2.25 மணிக்கு ஆண்டாளுக்கு 30 திருப்பாவை பாடல்கள் இடம் பெறும் வகையில் நெய்யப்பட்ட 19 கஜ அரக்கு நிற திருப்பாவை பட்டுப்புடவை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை முத்து பட்டர், கிரிபட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் ரமேஷ் ஆகியோர் நடத்தினர். மார்கழி மாத முதல் நாள் மட்டுமே ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பாவை பட்டில் ரெங்கமன்னாருடன் தரிசனம் தந்த ஆண்டாளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, தக்கார் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்த போர்வை சாற்றும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பல்வேறு சிறப்புகளை கொண்ட தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விளங்குகிறது. அங்கு கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு முன்அறிவிக்கும் வண்ணமும் ஆண்டாள் கோவிலில் தெய்வங்களுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இதே போல் இந்த ஆண்டுக்கான 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது நேற்று ஒரு நாள் மட்டுமே சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் கருடாழ்வார் எழுந்தருளினார்.

    அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள் என தெய்வங்களின் விக்ரகங்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பூமிப்பிராட்டியாம் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர நன்னாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 9-ம் நாளான நேற்று தமிழ்நாட்டின் 2-வது பெரிய தேரான ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அதிகாலை சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. தேரில் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேர் 4 ரத வீதிகளின் வழியே வந்து காலை 9.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 2 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு தேரினை தள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

    தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


    ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டு தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் ‘ஹெலி கேமரா‘ மூலம் ரத வீதிகள் கண்காணிக்கப்பட்டன.

    தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 
    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார். 
    ×