என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 106472
நீங்கள் தேடியது "ஸ்ரீதேவி"
சீனாவில் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய படங்களுக்கு சமீபகாலமாக உலக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹாலிவுட் படங்களைபோல் அனைத்து நாடுகளிலும் வசூல் குவிக்கின்றன. இந்திய படங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்ப காரணமாக அமைந்த முதல் படம் பாகுபலி-2. இந்த படத்தின் வசூல் சர்வதேச அளவில் ரூ.1,000 கோடியை தாண்டியது.
தற்போது சீனர்களும் இந்தி படங்களை விரும்பி பார்க்கிறார்கள். அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைப்பட சந்தையாக சீனா விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமீர்கானின் தங்கல் இந்தி படத்தை மொழி மாற்றம் செய்து சீனாவில் வெளியிட்டனர். இந்த படம் கார்டியன் ஆப் தி கேலக்சி என்ற ஹாலிவுட் படத்தை மிஞ்சி ரூ.800 கோடி வசூலித்ததது.
விஜய்யின் மெர்சல் படமும் சீனாவில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. இந்த படங்களின் வரிசையில் மறைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்த ‘மாம்’ படத்தையும் சீனாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிட்டனர். இந்த படம் முதல் நாளிலேயே ரூ.9.8 கோடி வசூலித்து முதல் நாள் வசூல் படங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.
தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.
இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-
“குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”
இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor
ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் சீன ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #MOM #Sridevi
இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. வருகிற மார்ச் 22-ஆம் தேதி `மாம்' படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் கூறும்போது, "மாம் படம் ரிலீஸான எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு செல்ல, மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்" என்கிறார்.
ரவி உதயவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ரஹ்மானுக்கு கிடைத்தது. #MOM #Sridevi
ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு, அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். #Sridevi #BoneyKapoor
தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று கலக்கியவர் ஸ்ரீதேவி. இந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ஸ்ரீதேவி துபாயில் உயிர் இழந்தார். இதையொட்டி கடந்த பிப்ரவரி 14-ந்தேதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி ஸ்ரீதேவியின் விருப்பமான புடவைகளில் ஒன்றான கோட்டா வகை புடவையை ஏலத்துக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும், அவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.
இந்த ஏலத்தை நடத்து வதற்கு பரிசேரா இணைய தளத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் தேர்வு செய்தனர். ஏலத்தில் புடவைக்கு ஆரம்ப விலையாக ரூ.40,000 நிர்ணயிக்கப்பட்டது. இந்த புடவைக்கு அதிகபட்சமாக ரூ.1.30 லட்சத்துக்கு விலை கேட்கப்பட்டது. இந்த விலையே இறுதி செய்யப்பட்டு விட்டதாக இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை ‘கன்சர்ன் இந்தியா பவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக இந்தப் பணம் பயன் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.
அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.
அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.
காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.
அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.
பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது. காரை புதர்கள் நிறைந்து இருந்ததால் புற்களும் நிறைந்து இருந்தது.
அப்போது எர்ற கொல்ல தொட்டியர்கள் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்த்துவிட்டு பால் கறப்பது வழக்கம். இப்பசுக்களில் பால் கொடுக்கும் காறாம் பசு ஒன்று மாலையில் வீடு திரும்பும்போது மடி வற்றி பால் இல்லாமல் இருப்பதை வெகு நாட்கள் கவனித்து வந்த தொட்டிய நாயக்கர் பசு மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் பசு மேய்கிற இடத்திற்கு சென்றார்.
அந்த பசு காரை புதரில் பாலை சுரந்து கொண்டிருந்தது. பசு புதருக்கு பால் கொடுக்கிறதே என்ன ஆச்சரியம் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கொடுவாளை கொண்டு அவர் புதரை வெட்டினார். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொட்டிய நாயக்கர் மயங்கி கிழே விழுந்து விட்டார். பசுக்கள் மட்டும் வீடு திரும்பி விட்டன.
காலையில் சென்ற தொட்டிய நாயக்கர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த உறவினர்கள் இருட்டில் போவதற்கு துணிகளை பந்தமாக கட்டி எண்ணை ஊற்றி தீப்பந்தங்களை பற்றவைத்து கொண்டு மிருகங்கள் இருட்டில் பக்கத்தில் வராமல் இருக்க பறையடித்து கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் காரை வனத்திற்குள் தேடினார்கள்.
அப்போது அங்கு இருந்த புதரில் ரத்தம் பீறிட்ட இடத்தில் சிவப்பாக மடைபோல் காட்சி அளித்தது. மயக்கம் தெளிந்த தொட்டிய நாயக்கர் நடந்தவற்றை எல்லாம் கூறினார். மற்றவர்கள் புதரை விலக்கி, தீப்பந்த வெளிச்சத்தில் பார்த்த போது சுயம்பு லிங்கம் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அப்போது அங்கு இருந்த தொட்டிய நாயக்கர்களில் ஒருவருக்கு அருள் வந்து ஆடி “நான் தான் அரங்கன், எனக்கு தான் பசு பாலை சுரந்து கொடுத்தது. என்னுடைய இடத்தை சுத்தம் செய்து கோவில் கட்டி வணங்குங்கள்” என்று கூற நின்றிருந்த தொட்டிய நாயக்கர்கள் தோல் பைகளில் தண்ணீர் கொண்டு வந்து இறைவன் மீது ஊற்றி பச்சை பந்தல் போட்டு வணங்கினர். வெட்டப்பட்ட அடையாளம் இப்போதும் மூலவரின் மேல் பக்கத்தில் உள்ளதை பார்க்கலாம்.
பின் பட்டர் வம்சத்தினர் தொட்டிய நாயக்கர்களுக்கு உதவியாய் இருந்து அரங்கனின் பெருமையை கூறினர். அதன் பின்னர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு பல கல்கார வேலைகளிலும், இத்திருக்கோவிலுக்கான மண்டபங்களிலும், தெப்பக்குள படிக்கட்டுகளிலும் மீன் சிற்பங்கள் இருப்பது மதுரை மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாகும்.
மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini
கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriDevi #AjithKumar #Shalini
கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #PriyaVarrier #Sridevi
கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்துகிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் இயக்குனருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குனர் கூறியுள்ளார்.
1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும் ஸ்ரீதேவி பங்களா டிரெய்லரில் பிரியா வாரியர் கிளாமராக தோன்றுகிறார். டீசர் முடிவில், ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார். #SrideviBiopic #BoneyKapoor
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கிய அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தமிழில் அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தன் மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடந்து வருகிறது. #SrideviBiopic #BoneyKapoor
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான ஸ்ரீதேவியின், வாழ்க்கை வரலாறு படத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் மெனக்கெட்டு வருகிறார். #SriDevi #RakulPreetSingh
மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை தேஜா இயக்குகிறார். இதில் என்.டி.ஆரின் வேடத்தில் அவரின் மகன் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார். சந்திரபாபு நாயுடுவாக ராணா, அவரின் மனைவியாக மஞ்சிமா மோகன், சாவித்திரியாக நித்யா மேனன் நடிக்கின்றனர்.
தற்போது மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை சவாலாக ஏற்ற ரகுல், ஸ்ரீதேவியின் உடல்மொழி, முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார்.
ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வருகிறார். முதலில் சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே படமாக எடுக்க திட்டமிட்ட படக்குழு இப்போது இரண்டு பாகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சினிமா வாழ்க்கை அடங்கிய பாகத்துக்கு `கதாநாயகுடு’ என்றும் அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் பகுதிக்கு ‘மகாநாயகுடு’ என்றும் பெயரிட்டுள்ளனர். இரண்டுமே 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.
நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் நடத்திய 2 நாள் விழாவில் போனி கபூர் உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். #SriDevi #BoneyKapoor
புதுடெல்லி:
தமிழகத்தில் சிவகாசி பகுதியில் பிறந்து உலக அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு உலக அளவில் இருக்கும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தினர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 55-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி, ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படத்துறை பிரிவினர் சார்பில் 2 நாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது.
ஸ்ரீதேவியின் இங்கிலீஸ் விங்கிலீஸ், மாம் போன்ற திரைப்படங்கள் இந்த கொண்டாட்டத்தின்போது திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நடனக்கலைஞரான சோனல் மன்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஸ்ரீதேவி விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது எனவும், அவர் விட்டுச் சென்ற நினைவுகள் மூலமே தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும், தனது மனைவுக்கு நடத்தப்படும் இந்த விழாவை ஏற்பாடு செய்த அரசுக்கும், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும், நண்பர் அமர் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தாம் ஸ்ரீதேவியை திரையில் பார்த்த முதல்நாளிலேயே காதல் வசப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவரை தொடர்ந்து சென்ற போது, அவரது அழகும், திறமையும் ஏற்படுத்தி இருந்த ஒளிவட்டம் தம்மை மிகவும் ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் இதயத்தை கவர 12 வருடங்கள் ஆனதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது ஸ்ரீதேவியின் பிரிவை தாமும் தம் பிள்ளைகளும் நன்கு உணர்வதாகவும், தற்போது பிள்ளைகள் மட்டுமே வாழ்வின் பலம் எனவும் போனி கபூர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். #SriDevi #BoneyKapoor
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, சினிமா உலகில் எனக்கு அவர்தான் முன்மாதிரி என்றும், அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். #Hansika
நடிகர், நடிகைகள் வாழ்க்கை படங்கள் சமீப காலமாக தயாராகி வருகின்றன. சில்க் சுமிதா வாழ்க்கை ‘த டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வந்தது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் தேசிய விருது பெற்றார். மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியானது.
இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டுகள் குவிந்தன. பிரபல இந்தி நடிகரும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்றவருமான சஞ்சய்தத் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் திரைக்கு வந்துள்ளது. மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல் மந்திரியுமான என்.டி.ராமராவ் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகிறது.
என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். மறைந்த தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கையும் படமாகிறது. சமீபத்தில் துபாய் நட்சத்திர ஓட்டலில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையும் படமாகிறது. இதில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.
இந்த நிலையில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா விருப்பம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“எனக்கு ஸ்ரீதேவியை மிகவும் பிடிக்கும். புலி படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எனக்கு நிறைய அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொன்னார். அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம். என் வாழ்க்கைக்கு அவரைத்தான் முன்மாதிரியாக கருதுகிறேன். ஸ்ரீதேவி வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவர் வாழ்க்கை கதையை யார் படமாக்கினாலும் அதில் நடிக்க தயார்.”
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி, இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் என்று கூறியுள்ளார். #Jhanvi #Dhanush
கடந்த பிப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஜான்வி கூறி இருப்பதாவது:- ‘இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது.
‘நான் வளர்ந்து விட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை தான் தேடுவேன். சில நேரம் எனக்கு உணவு ஊட்டிவிடுவார். தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார். அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வையுங்கள் என்றேன்.
அம்மா பொருட்களை எடுத்து வைப்பதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்’ என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X