search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎஸ்"

    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது தெரிய வந்தது. இதை வாட்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.


    அதில் வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:-

    வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
    ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. #BCB #MustafizurRahman
    டாக்கா:

    வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது காயம் அடைந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பெறவில்லை. அந்த தொடரை வங்காளதேச அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்ததால் நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது’ என்றார். #BCB #MustafizurRahman
    ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #CentralGovt
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 குடிமைப் பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது.

    தற்போது இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும்போதே பணி மற்றும் கேடர் ஒதுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

    புதிய முறைப்படி 100 நாள் அடிப்படை பயிற்சிக்கு பிறகு பணி, கேடர் ஒதுக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்படுகிறது. எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் எனப்படுகிறது.

    100 நாள் பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்கள், பணி, கேடர் ஒதுக்கீட்டு கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய முறையால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். #CentralGovt
    ×