search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள்"

    மேகாலய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #MeghalayaCoalmine
    லம்தாரி:

    மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில், அருகில் உள்ள லைடெயின் ஆற்றில் இருந்து தண்ணீர் புகுந்தது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சுமார் 70 அடிக்கு தண்ணீர் நிறைந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததும் 5 தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறினர். ஆனால் மேலும் 13 பேர் அங்கு சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் காலையில் தகவல் வெளியானது.



    இதைத்தொடர்ந்து போலீசாரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை உயிருடன் மீட்பதற்காக மீட்புக்குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். #MeghalayaCoalmine

    நெல்லை அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #WellDigging #Labourers
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது அத்தியூத்து கிராமம். இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு பகுதியில் இருந்து மண் சரிந்தது. 

    இதனால் கிணற்றுக்குள் இருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில் மதி, சோணாச்சலம், சுடலை ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களை சடலமாக மீட்டனர். 

    3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #WellDigging #Labourers
    ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர் மற்றும் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட 4-வது காலகட்ட நீண்டகால புதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    2002-ல் ஏற்படுத்தப்பட்ட நிலையான சட்டத்தை தொழிலாளர்களுக்கு எதிரான விதிகளை நீக்கி புதிய நிலையான சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ 18 ஆயிரம் என்று உயர்த்தி வழங்க வேண்டும்.

    3 ஆண்டுகள் பணி முடித்திருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகில் ஏரிப்பாக்கம் தனியார் தொழிற்சாலை தொழிலாளர், ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    தங்களது கோரிக்கைகளை புதுவை அரசும் தொழிலாளர் துறையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். #tamilnews
    தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலையில் சம்பள உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர் ஆலையை முற்றுகையிட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையில் தனியார் பாய்லர் தயாரிக்கும் ஆலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் 140 ஊழியர்கள் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலை நிறுத்தம், சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை வற்புறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய குடும்பத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். #tamilnews
    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூரில் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    சென்னை தேனாம்பேட்டை பல்லவன் போக்குவரத்துக் கழக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து கடலூர் அனைத்து கூட்டமைப்பு போக்குவரத்து கழக நிர்வாகிகள் சார்பில் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பின்னர் போக்குவரத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நிர்வாகிகள் சி.ஐ.டி.யூ. பாஸ்கர், பாட்டாளி தொழிற் சங்கம் ஜெய்சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி கருணாநிதி, ம.தி.மு.க. மணிமாறன், தே.மு.தி.க. கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாட்டுவண்டி மணல் குவாரிகளை இயக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டுவண்டிகளோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையின் இருபுறமும் மாட்டுவண்டி மற்றும் மாடுகளை நீண்ட வரிசையில் நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகரசெயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலை பகுதியில் குவாரியில் கல் உடைக்க அனுமதி கேட்டு கனிம வளத்துறை அலுவலர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் கல் குவாரி உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கல் உடைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கல்குவாரியில் கல் உடைப்பதனால் ஏற்படும் புகையினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மைதிலிக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    இதையடுத்து உதவி இயக்குனர் தலைமையிலான அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கல் உடைக்கு தொழிலாளிகளிடம், இனி இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று கூறினர்.

    மேலும் கல் உடைத்து கற்களை ஏற்றி கொண்டு வாகனங்கள் செல்லும் வழியை தடை செய்ய பள்ளம் தோண்ட பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாசில்தார் மனோகரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தொழிலாளர்கள், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். இதுதான் எங்கள் வாழ்வாதாரம். கல் குவாரியை ஏலம் விடுவதாக இருந்தாலும், அதனை நாங்களே ஏலம் எடுத்து கொள்கிறோம் என்றனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 15 நாட்களுக்கு இங்கு யாரும் கல் உடைக்கக் கூடாது என்று உத்தரவிட்டு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.#tamilnews
    ×