search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்சி"

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவிதமான இடஒதுக்கீடும் கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து சிபிஎஸ்சி விளம்பரம் செய்தது. அதில் ‘‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும்’’ குறிப்பிட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த விளம்பரத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜனவரி மாதம் 16-ந்தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கை இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகிய நீதிபதிகள் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.

    மேலும், அந்த பெஞ்ச் ‘‘தகுதிச் தேர்வுகளுக்கு எக்காரணம் கொண்டும் இடஒதுக்கீடு வழங்க இயலாம். அது முற்றிலும் தவறானதாகிவிடும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்ற நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எந்தவொரு இடஒதுக்கீடும் கொடுக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
    அரியானாவில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவியை 3 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Haryana
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, நேற்று முன் தினம் கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த மூன்று பேர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக இன்னும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாத நிலையில், குற்றவாளி தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ×