search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னிப்பு"

    சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக நாட்டு மக்களிடம் சாம் பிட்ரோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    சண்டிகர்:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    அந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

    தற்போது பாராளுமன்ற தேர்தலின்போது இந்த பிரச்சனையை மையப்படுத்தி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா ‘அது 1984-ம் ஆண்டில் நடந்து முடிந்துப்போன கதை. நீங்கள் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன சாதித்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    ‘ஆனது ஆகிப்போனது, முடிந்துப்போன கதை’ என சீக்கிய மக்களின் உயிரிழப்பை துச்சப்படுத்தும் வகையில் சாம் பிட்ரோடா தெரிவித்த இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில சீக்கிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தை மையப்படுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி வீட்டின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘நடந்தது, நடந்து விட்டது’ என்று கூறியதற்காக  சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம், பத்தேகர் சாஹிப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘1984-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. இதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இதை நான் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறேன். இப்படிப்பட்ட கருத்தை கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நான் தெரிவித்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.
    இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. பலியானவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை முன்னர் எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாததற்கு அந்நாட்டு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.



    ‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.

    இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
    ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #BritishGovernment
    லண்டன்:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

    இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார். 
    மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், கரப்பான் பூச்சி இருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.#AirIndiaFlight #cockroachinfood
    புதுடெல்லி:

    போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில், கடந்த சனிக்கிழமை ரோஹித் ராஜ் சிங் என்ற பயணி பயணம் செய்துக் கொண்டிருந்தார். பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு இட்லி-வடை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. இதில் கரப்பான்பூச்சி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை உடனடியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

    இச்சம்பவம் நடந்து இரு தினங்கள் ஆன நிலையில், இன்று ஏர் இந்தியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த பயணியிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், ‘நாங்கள் இச்சம்பவத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். இதையடுத்து உடனடியாக அந்த கேட்டரிங் நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எங்கள் மூத்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயணியுடன் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினர். மேலும் தகுந்த நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது. #AirIndiaFlight #cockroachinfood 
    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது, எதிரணி வீரர் பெலக்வாயோவை இனவெறியுடன் விமர்சனம் செய்தார். அவரை நோக்கி, சர்ப்ராஸ் அகமது “ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறி சீண்டினார்.

    இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தனது பேச்சுக்கு சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். ‘விரக்தியில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகளை யாரும் தவறாக எடுத்து இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. எனது வார்த்தைகளை எதிரணி வீரர்களோ, கிரிக்கெட் ரசிகர்களோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை’ என்று சர்ப்ராஸ் கூறியுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
    நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டதையடுத்து, ஐகோர்ட்டில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
    சென்னை:

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்தும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

    பின்னர், நீதிமன்ற அவமதிப்பு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க அதிகாரம் இல்லை என எச்.ராஜா தரப்பில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்  ரமானியிடம் முறையிடப்பட்டது. அவர் உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


    இந்நிலையில், எச்.ராஜா இன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். அவரது தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக எச்.ராஜா தெரிவித்திருந்தார்.

    ‘உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன். இப்படி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என எச்.ராஜா கூறியிருந்தார்.

    இதையடுத்து எச்.ராஜா மீதான அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #HRaja #ContemptOfCourt #MadrasHC
    நாடாளுமன்ற மக்களவையில் திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். #ManekaGandhi #OtherOnes #Transgender
    புதுடெல்லி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.

    ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். #ManekaGandhi #OtherOnes #Transgender #Tamilnews
    சாலை திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமல் இருந்த செயலுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மன்னிப்பு கேட்டார். #NitinGadkari #JyotiradityaScindia
    புதுடெல்லி:

    மத்தியபிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. சமீபத்தில் இவருடைய தொகுதியில் நெடுஞ்சாலை ஒன்று மாநில அரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை திறப்புவிழாவில் பங்கேற்க அந்த தொகுதி எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமலும், அவருடைய பெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பினார். அப்போது மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “நான் அந்த சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டதால், இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்கிறேன். அதோடு இந்த சம்பவத்துக்காக எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக நிகழாது” என கூறினார்.  #NitinGadkari #JyotiradityaScindia #tamilnews
    பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.
    `மற்றவர்களை மரியாதையாக நடத்துவதும், நம்மையறியாமல் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும்பட்சத்தில் மன்னிப்புக் கேட்பதும்தான் மனிதத்தன்மை. இதில் பெற்றோர், பிள்ளைகள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டாலே `பெத்தப் பிள்ளைங்ககிட்ட மன்னிப்புக் கேட்பதா' என்கிற ஈகோ காணாமல் போய்விடும். இப்படி ஈகோ இல்லாத பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் தாங்களும் அப்படியே வளர்வார்கள். அடுத்தது, ஒரு தடவை மன்னிப்புக் கேட்டபிறகு, அந்தத் தவற்றைத் திரும்பவும் செய்யக் கூடாது என்பதிலும் பெற்றோர்களாகிய நாம்தாம் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

    `அம்மாவும் அப்பாவும் தப்புப் பண்ணிட்டா தயங்காம மன்னிப்புக் கேட்கிறாங்க' என்கிற எண்ணம் உங்கள் குழந்தைகளின் மனதில் பதிய பதிய காலப்போக்கில் அந்த உணர்வானது அன்பாகி, மரியாதையாகி, பக்தியாக மாறும். பெற்றவர்கள்மீது பக்தி செய்கிற பிள்ளைகள், வளர்ந்தபிறகு பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப மாட்டார்கள் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்பதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. உங்கள் குழந்தை ஒரு தவறு செய்துவிட்டது என்று நினைத்து அவனை/அவளை அடித்து விடுகிறீர்கள். பிறகு, பிள்ளைமீது தவறு இல்லை என்பது தெரிந்து அவனிடம்/அவளிடம் மன்னிப்புக் கேட்பது ஒருவகை. இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. அதாவது, பிள்ளை நிஜமாகவே தப்பு செய்துவிட்டது. அதனால் பிள்ளையை அடித்து விட்டீர்கள். இதன் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நீங்கள் நிதானமானதும், பிள்ளையிடம் பேசுங்கள்.



    `நீ இப்படித் தப்பு செய்ததால் அம்மாவுக்குக் கோபம் வந்து அடித்து விட்டேன். ஆனால், நான் அடித்ததற்கு `ஸாரி' என்று கேட்டு விடுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், `யாராவது தவறு செய்தால் அவர்களை அடித்தும் திருத்தலாம் போல' என்கிற பாடம் உங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவே கூடாது என்பதற்காகத்தான் இந்த மன்னிப்பு. கூடவே, செய்த தவற்றை மறுபடியும் பிள்ளைகள் செய்யக் கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிய வைப்பதும் உங்கள் கடமை.

    கடைசியாக ஒரு விஷயம், பிள்ளைகள் பெற்றோராகிய உங்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள். நல்ல நல்ல விஷயங்களில் மட்டுமல்ல, மன்னிப்புக் கேட்கிற விஷயத்திலும் நீங்கள்தான் அவர்களின் முன்னுதாரணம்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
    இஸ்லாமாபாத்:

    வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

    புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



    ‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
    நகரத்தார் மக்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் தமிழ்நாட்டு கலாசாரத்தில் தனித்த முத்திரையும், தனிச் சிறப்பும் கொண்டு, அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டாற்றிய பகுதி செட்டிநாடும், அங்கு வாழும் நகரத்தார் மக்களும். எதற்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகப்பெரிய நகைச்சுவையாக பதில் சொல்வதாக கருதி, இறைப்பணியையும், தூய தமிழ் பணியையும் செவ்வனே செய்து அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றும் பாசமிக்க நகரத்தாரை தொடர்புபடுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து கண்டனத்திற்குரியது.

    அமைச்சர் பதவியில் உள்ளவர் பொறுப்பற்ற முறையில் இதைப்போன்ற கருத்துகளை கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த முற்படும் செயல்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தன் கருத்துக்கு வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×