search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவனந்தபுரம்"

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கம் பிடிபட்டது.
    திருவனந்தபுரம்:

    வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



    இதைதொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்திவந்த நபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவற்றை அதிகாரிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் பட்டியலை அதிகாரிகள் சரி பார்க்கும்போது அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். அவர்கள் இதுபோல 2 தொகுதிகளில் பெயர் உள்ளவர்களை சரிபார்த்து அவர்களது முகவரி அடிப்படையில் ஒரு தொகுதியில் இருந்து பெயரை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.



    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency

    திருவனந்தபுரம் அருகே மயக்க மருந்து கொடுத்து பல சிறுமிகளை கற்பழித்த நடன ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 19).

    இவர் அந்த பகுதியில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு நவீன நடனப்பயிற்சி அளித்து வந்தார். இவரது கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் ஏராளமான வாலிபர்களும், இளம் பெண்களும் இந்த நடனப் பள்ளியில் இணைந்து நடனம் கற்றனர். பல சிறுமிகளும் இவரிடம் நடனம் பயின்று வந்தனர்.

    ராகுலிடம் நடனம் கற்று வந்த கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் நடனப்பள்ளிக்கு சென்றபோது மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடி நடனப்பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் ராகுல் அந்த சிறுமி நடனம் கற்க வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். அந்த சிறுமிபற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். மேலும் போலீசார் நடனப்பள்ளிக்கு சென்று ராகுலிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

    அப்போது அந்த நடனப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் அந்த சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அதுபற்றி ராகுலிடம் விசாரித்த போது அந்த சிறுமிக்கு அவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. உடனடியாக அந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அந்த சிறுமியை போல மேலும் பல சிறுமிகளை அவர் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தது தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்-டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது. 

    இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
    பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
    வாடிகன்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.



    வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது.  #KeralaNun #FrancoMulakkal #Vatican
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப்பை கைது செய்யக் கோரி கிறிஸ்தவ கூட்டுக்குழு அமைப்பினை சேர்ந்தவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.



    இந்நிலையில், கிறிஸ்தவ கூட்டுக்குழு அமைப்பினை சேர்ந்தவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். 

    இந்த வழக்கு குறித்து டிஜிபி லோக்நாத் பெஹரா கூறுகையில், தற்போது இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை எர்ணாகுளம் ஐ.ஜி. விஜய் சகாரே முழு விசாரணை நடத்தி விரைவில் முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். #FrancoMulakkal
    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal #NunsProtest
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களின் சகோதரிக்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவருக்கு உரிய நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு நீதி கிடைக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். #FrancoMulakkal #NunsProtest
    திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். 
    கேரளாவில் கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள வாலிபருக்கு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    இந்த நோய்க்கு நர்சு உள்பட 18 பேர் பலியானார்கள். இன்னும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் வவ்வால் மூலம் பரவுவதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரக்குழு மற்றும் மாநில சுகாதாரத்துறையினர் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தனர். இதனால் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

    நிபா வைரஸ் பீதி மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் கொல்லம் மாவட்டம் மலைக்கிராம பகுதியில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானது. இப்பகுதியைச் சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர் வயிற்று வலி மற்றும் கல்லீரல் வீக்கம் காரணமாக அப்பகுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார்.

    அவரை பரிசோதித்த போது அவருக்கு கருப்பு காய்ச்சல் என்ற அரிய காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது. எனவே அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கருப்பு காய்ச்சல் மண் பூச்சிகள் மூலம் பரவும் என்று கூறப்படுகிறது. இது நிபா வைரஸ் போல வேகமாக பரவும் தன்மை கொண்டது இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதிப்பை உடனடியாக கண்டுபிடிக்க முடியாது.

    இக்காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு வயிற்று வலியும், உடல் சோர்வும் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் வீக்கமும் உருவாகும். ரத்த பரிசோதனை மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    கேரளாவில் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு 2005-ம் ஆண்டிலும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இது போன்ற நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடல் சோர்வு, வயிற்று வலி இருப்பவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுபற்றி கேரள சுகாதாரத்துறை மந்திரி கே.கே. ஷைலாஜா கூறியதாவது:-

    கேரளாவில் புதியதாக பரவும் நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விழுமுலா கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    வீடு வீடாகச் சென்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்ற ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பவுடரை கடத்தி வந்த சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கேரளா வழியாக மாலத்தீவுக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக டெல்லியில் உள்ள தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த தகவல் உடனடியாக கேரள போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கண் காணிப்பை பலப்படுத்தினர். பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

    அப்போது மாலத்தீவுக்கு செல்ல இருந்த 3 பயணிகளை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மாலத்தீவைச் சேர்ந்த ஜாமன் அகமது(வயது24), சாபிங்(29), சானித்மாகின்(27) என்பது தெரிய வந்தது. அவர்களின் உடமைகளை பரிசோதித்த போது 17 கிலோ போதை பவுடர் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.5 கோடியாகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    கைதானவர்களில் சானித் மாகின் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஆவார். இந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரத்தில் மிகப் பெரிய அளவில் போதை பொருள் சிக்கியதும், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைதாகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருவனந்தபுரம் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் என்ஜினீயர் கழுத்தை அறுத்து கொலை செய்து கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள சாலக்குடி கண்டன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் லைஜோ (வயது 28). இவரது மனைவி சவுமியா (வயது 37), இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    லைஜோ திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சவுமியா சாலக்குடி பகுதியில் ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இவர்கள் வீடு பகல் வரை பூட்டியே கிடந்தது. நீண்ட நேரமாக அவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் வீட்டு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர்களது மகன் மட்டும் அழுது கொண்டிருந்தார். உடனே அவர்களது உறவினர்கள் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    வீட்டின் உள்ளே ஒரு அறையில் சவுமியா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் லைஜோவை தேடினார்கள். அப்போது அவரது அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

    கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது, லைஜோ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லைஜோ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவி சவுமியாவை கணவர் லைஜோவே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் அவரும் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.

    இந்த கொலைக்கான முழு விபரமும் லைஜோவுக்கு சுய நினைவு திரும்பிய பிறகுதான் தெரிய வரும். #Tamilnews
    கேரளா மாநிலத்தில் தனிநபரின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியத்தை ரூ.600-ஆக உயர்த்தும் வகையிலான புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. #keralalabours #employeefriendly #labourpolicy
    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒருநாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
    மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடம் பெயர்ந்து கேரளாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #keralalabours #employeefriendly #labourpolicy
    ×