search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107100"

    • சிங்கம்புணரி முத்து வடுகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
    • பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வணிகர் நல சங்கத்தின் சார்பாக 82-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் சித்தர் முத்துவடுகநாதருக்கு அபிஷேகம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால்குடங்கள் எடுத்து பெரியகடை வீதி, நான்கு முனை சந்திப்பு சாலை, வேங்கைபட்டி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகர் நலச்சங்க தலைவர் வீரபாண்டியன், செயலாளர் வாசு, திருமாறன், பொருளாளர் பாப்பா கணேசன், சரவணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.

    விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    • நொண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
    • காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நொண்டி கோவில்பட்டியில் அமைந்துள்ள நொண்டி கோவில் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று நொண்டி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து கிராம அம்பலகர்கள் முன்னிலையில் ஊர்வமாய் சேனல் ரோடு, ஆற்றுக்கால் வழியாக கோவிலை சென்றடைந்தனர். அங்கு சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

    • கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
    • விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சந்திவீரன் கூடத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு அன்னை காளியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், இளநீர், பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.

    • சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது .

    இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்களின் பால்குட ஊர்வ லமானது கன்னித்தோப்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்ம னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலையான தம்பிரான்குடியிருப்பு இறையருள் கலைக்குழுவினரின் சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிவகங்பிகை அருகே பிரான்மலையில் பால்குட ஊர்வலம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி பி.மதகுபட்டி ராமர் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மலைக்கோவிலை வந்தடைந்தது. அங்கு வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    மேலும் மண்ணால் செய்யப்பட்ட நாய், பன்றி பதுமைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 2-வதுநாள் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.
    • வருகிற 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி பதுமை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாவிளக்கு திருவிழாவும், காவடி, பால்குடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் தேரடி தெருவிலிருந்து வடசேரி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரிய தெருவில் வந்து நின்றது.

    அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    தேருக்கு பின்னால் தீயணைப்பு வண்டியும், தீயணைப்பு வீரர்களும் வந்தனர்.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன.

    இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) 2-வதுநாள் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பெரிய தெருவிலிருந்து மணிக்கூண்டு, தலையாரித்தெரு வழியாக தேர் தேரடித்தெரு தேரடியை வந்தடையும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

    தேர் திருவிழா முடித்து தேரில் இருந்து அம்பாள் இறக்கி கோவிலுக்கு வந்து காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

    நாளை 15-ந்தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

    இத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.
    • தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாரதா நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி நவசக்தி ஹோமம், கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டு, சக்தி கரகம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    அம்மனுக்கு தாயமங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், அதன் பின்னர் மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், மகாலட்சுமி அம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், ஐஸ்வர்ய லெட்சுமி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன், கனகதுர்க்கை, மூகாம்பிகை உள்ளிட்ட அலங்காரம் செய்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்மன் கோவில் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    இன்று காலை சிலம்பணி விநாயகர் கோவிலில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், வேல் குத்தி திருப்பத்தூர் சாலை, மின்சாரம் வாரிய அலுவலகம் வழியாக கோவில் சென்றடைந்தனர்.  

    • தீக்குண்டத்தில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றனர்.
    • பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து நேற்று இரவுதிரளான பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் நகர வீதிகளில் வழியாக உலா வந்து தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு உள்ள இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வழிபாட்டை நிறைவு செய்தனர்.

    இதே போல பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி சிவனாதிஸ்வரர் ஆலயத்தில் உள்ள மலைமேல் முருகன் சாமிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால்அபிஷேகம் செய்து சாமி தரிசனம்செய்தனர்.அன்னதானம் நடைபெற்றது.

    • தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
    • சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருப்பூர் :

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தெலுங்கு வருட பிறப்பு வெகு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் துவங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும் என்பதால் ஏராளமானோர் புதிய தொழில்களை இந்த நாளில் தொடங்கினர்.

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு வாலிபாளையம் பகுதியில் பழமையான சடையப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். யுகாதி திருவிழாவை முன்னிட்டு வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    • உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    • பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் செட்டி மண்டபம் மெயின் ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ஸ்ரீ மகா பச்சைகாளியம்மன் ஸ்ரீ மகா பவள காளியம்மன் எட்டாம் ஆண்டு திருநடனம் வீதி உலா மற்றும் மாசி பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 26 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    அதனைத் தொடர்ந்து இரவு சக்தி கரகம் அக்னி கொப்பரை ஸ்ரீ மகா காளியம்மன் உற்சவமூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது முக்கிய நிகழ்ச்சியான நேற்று இரவு உலக நன்மைக்காகவும், வாழ்வை வளமாக்கும் வகையிலும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது குத்துவிளக்கு பூஜை கலந்து கொண்ட பெண்களுக்கு கோவில் சார்பில் எண்ணெய், தீப்பெட்டி, திரி, ஊதுபத்தி, சூடம், நைவேத்தியம் ஆகியவை வழங்கப்பட்டன. குத்துவிளக்கு பூஜை உலக நன்மை வேண்டி 100க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.

    பூஜை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

    வருகிற 3ம் தேதி காளியம்மனுக்கு சீழ்வரிசை எடுத்து வருதல் அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நாதஸ்வர கட்சியுடன் மகா பவளகாளியம்மன் ஆனந்த திருநடனம் வீதி உலா ஆரம்பம் வருகிற ஏழாம் தேதி ஸ்ரீ மகா பச்சைகாளியம்மன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் வருதல் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் இவ்வாண்டுக்கான மாசி பௌர்ணமி திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நாட்டாமை கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • 500-க்கும் மேற்பட்டோ பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தனர்.
    • இரவு முழுவதும் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆதிரங்கம்சேகல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், பெரியதம்பிரான்இருளன் , பெரியநாயகி ஆகிய காவல் தெய்வங்களுக்கு மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மருளாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பால்குட ங்கள் எடுத்தனர்.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மேளதாளத்துடன் பால்குடம் புறப்பட்டு கோவிலின் தீர்த்த குளத்தை வளம் வந்து கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி இரவு முழுவதும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனை பிரார்த்தித்து சென்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் மருளாளிகள் அறக்கட்ட ளை சார்பில் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×