search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கா"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    டாடா அல்ட்ரோஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மீண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இம்முறை சோதனையில் சிக்கியது அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் கார் இமய மலைப்பகுதிகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

    இம்முறை சோதனை செய்யப்பட்ட அல்ட்ரோஸ் காரில் மெல்லிய டையர்கள் மற்றும் ஸ்டீல் ரிம்கள் காணப்படுகிறது. இத்துடன் இந்த காரில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் காணப்படவில்லை. இவை அனைத்தும் சோதனை செய்யப்பட்ட கார் பேஸ் வேரியண்ட் என்பதை உணர்த்துகிறது.

    டாடா நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான டாடா அல்ட்ரோஸ் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இத்துடன் இந்த கார் இம்பேக்ட் 2.0 தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் டாடா நிறுவனத்தின் இரண்டாவது கார் மாடல் ஆகும். டாடா அல்ட்ரோஸ் கார் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.


    அந்த வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்களும் நெக்சன் மாடலில் இருந்தும் 1.2 லிட்டர் யூனிட் டியாகோ மாடலில் இருந்தும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ரோஸ் கார் இந்திய சந்தையில் ஹூனடாய் எலைட் ஐ20, மாருதி சுசுகி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோன்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய அல்ட்ரோஸ் காரின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: carwale
    நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் காட்டை மையப்படுத்தி உருவாகும் “கா“ படத்தின் முன்னோட்டம். #Kaa #AndreaJeremiah
    ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

    கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

    முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



    ஒளிப்பதிவு - அறிவழகன், இசை - அம்ரிஷ், எடிட்டிங் - கோபிகிருஷ்ணா, கலை - லால்குடி இளையராஜா, ஸ்டன்ட் - விக்கி, நிர்வாக தயாரிப்பு - சங்கர், தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், இணை தயாரிப்பு - ரவிகாந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நாஞ்சில்

    முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாகிறது. அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #Kaa #AndreaJeremiah

    தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, இனி நடிக்கும் படங்களில் கவர்ச்சி, நெருக்கமான மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #AndreaJeremiah
    ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவோ, நெருக்கமாக நடிக்கவோ தயங்க மாட்டார். சமீப காலமாக ஆண்ட்ரியாவின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்து வருகிறது.

    தரமணி படத்தில் சிங்கிள் மதராக சிறப்பாக நடித்தவர், விஸ்வரூபம் 2 படத்தில் ஆக்‌‌ஷன் காட்சிகளிலும் அசரடித்தார். அடுத்து அவர் நடித்து இருக்கும், வடசென்னை படத்திலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடம்.



    எனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கதை கேட்கும்போதே கூறிவிடுகிறாராம். #AndreaJeremiah

    ×