search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டனர். அதன்படி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 9-ந்தேதி அந்த நாட்டை சேர்ந்த நொம்சா லுடாலோ (வயது 31) என்ற பெண் வந்துள்ளார்.

    அவரை சோதனையிட்டபோது அவரிடம் 24.7 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணிடம் அந்த போதைப்பொருளை கொடுத்தது நைஜீரியாவை சேர்ந்த ஹென்றி இடியோபர் (35) என்ற வாலிபரும், சிமாண்டோ ஒகோரா (30) என்ற பெண்ணும் என தெரியவந்தது.

    அதன்படி நொய்டாவில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது ஏராளமான கேன்கள் மற்றும் பெட்டிகளில் 1,818 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி என தெரிகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    தமிழக பாஜகவினரிடையே வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களில் அதிக மக்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #BJP #PMModi #TNBJP
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாஜக தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி வருகிறார். 

    இந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங்கில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்களில் அதிகளவில் மக்களை இணைக்க வேண்டும்.



    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 70 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை அடைந்துள்ளது.

    மத்திய அரசின் திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் 4 லட்சம் இளைஞர்களும், வங்கிக்கடன்கள் மூலம் பல லட்சக்கணக்கானவர்களும் பலனடைந்து உள்ளனர். சாகர்மாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 3 துறைமுகங்கல் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார். #BJP #PMModi #TNBJP
    நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய ‘செல்போன் செயலி’ ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக வடு, மாணவ-மாணவிகளின் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய ‘செல்போன் செயலி’ ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

    அந்த மாணவியின் பெயர் இனியாள். கணினி மீது கொண்ட ஆர்வம் காரணமாக கணினி அறிவியல் படித்து வருகிறார். விருதுநகரை சேர்ந்த இவர் டெல்லியில் போலீஸ் பயிற்சி கல்லூரியில் இணை கமிஷனராக பணியாற்றி வரும் ஜெகதீசன் கண்ணன் என்பவரது மகள்.

    இதுபற்றி மாணவி இனியாள் கூறுகையில், அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ ‘ aNEETa ’ என ‘டைப்’ செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கேள்வி மற்றும் பதில்கள் உள்ளன என்றார்.

    மாணவி இனியாள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 
    டெல்லியில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. #BJP #ExecutiveMeet
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 18, 19-ந் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 16-ந் தேதி மரணம் அடைந்ததால் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8, 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது.

    இரு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், பா.ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர் என அக்கட்சியின் தேசிய செயலாளர் தருண் சக் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கு முன்பு பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  #BJP #ExecutiveMeet 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
    புதுடெல்லி:

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்தது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எய்ம்சில் சிகிச்சை பெற்று வரும அவரை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.



    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.

    இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணிக்கு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாஜ்பாய் உறவினர்களை சந்தித்து பேசினார். அப்போது வாஜ்பாய் உடல் நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
    ×