search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107458"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். #Afghanistantaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் தக்கார்  மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில்  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #Afghanistantaliban
     
    டெல்லி மற்றும் உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம் தீட்டியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் பல இடங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு படையினர் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் சதித்திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் நாடு பெரிய தாக்குதலில் இருந்து தப்பி உள்ளது.

    இந்த  பயங்கரவாதிகள் ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அதேபோன்று இந்தியாவிலும் செயல்பட திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்காக ஹர்கத்- உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற பெயரில் பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார்கள். இதற்கு முப்தி முகமது சுகாய்ல் என்பவன் மூளையாக செயல்பட்டான்.

    இவன் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா என்ற இடத்தை சேர்ந்தவன். அங்கு ஹக்கிம் மக்தாப் உதின் சாலையில் மதரசா (மத பாடசாலை) உள்ளது.

    இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தான். அவனுக்கு 29 வயது ஆகிறது. ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவன் இந்த புதிய இயக்கத்தை தொடங்கினான்.

    அதில், உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த பலரை உறுப்பினராக சேர்த்தான். இவனது பெற்றோர் டெல்லியில் உள்ள ஜப்ராபாத் என்ற இடத்தில் வசித்து வந்தனர்.

    இது, டெல்லியில் உள்ள குடிசை பகுதி ஆகும். அங்கும் தனது இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்காக சமீப காலமாக டெல்லியில் தங்கி இருந்தான்.

    அங்கு பல்வேறு இளைஞர்களை தன்பக்கம் இழுத்து இயக்கத்தை பெரிய அளவில் உருவாக்கினான். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள போலீஸ் தலைமையகம், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

    அதுமட்டும் அல்லாமல், பாரதிய ஜனதா தலைவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரையும் கொல்வதும் அவர்கள் திட்டமாக இருந்தது.

    இதற்காக ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தாக்குதல் திட்டங்களையும் அவர் தயாரித்து கொடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் தான் இந்த குழுவினர் செயல்பட்டனர். வெடி குண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை சேகரித்தனர்.

    மேலும் தலைவர்களை கொல்வதற்கு ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்துவதும் அவர்கள் திட்டமாக இருந்தது.

    இதற்காக அவர்களாகவே சொந்தமாக ராக்கெட் லாஞ்சரை தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பம் மூலமாக தயாரித்தனர்.

    இந்த அமைப்பில் முப்தி முகமது சுகாயிலுக்கு அடுத்த முக்கிய நபராக அனஸ் யூனுஸ் (24) என்பவன் இருந்து வந்தான்.

    டெல்லி ஜப்ராபாத்தை சேர்ந்த இவன் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தான். தனக்கு தெரிந்த என்ஜினீயரிங் தொழில்நுட்பம் மூலம் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க உதவினான்.

    இயக்கத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் எப்படி வெடி குண்டு தயாரிப்பது? அதை எவ்வாறு பொறுத்துவது? எந்த மாதிரி தாக்குவது போன்ற நுட்பங்களை முப்தி முகமது சுகாயிலும், அனஸ் யூனுசும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தனர்.

    முப்தி முகமது சுகாயிலிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மற்ற பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் பற்றி சொல்லி கொடுக்கும் வீடியோக்கள் இருந்தன.

    பயங்கரவாதிகளிடம் இருந்து 25 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில், பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட், கந்தகம் ஆகியவை இருந்தன.

    மேலும் 112 அலாரம் கடிகாரம், 12 துப்பாக்கிகள், புல்லட் புரூப் சட்டை, 90 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், ரூ.7½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இதற்கு தேவையான பணத்தை பலரிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவும் வகையில் பணத்தை தாராளமாக கொடுத்துள்ளனர்.

    மேலும் பயங்கரவாதிகளில் ஒருவனான சுபாயர் மாலிக் என்பவன் தனது வீட்டில் இருந்தே நகைகளை திருடி அதில் விற்ற பணத்தை பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுத்துள்ளான்.

    துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் தயாராக இருந்த நிலையில் அடுத்ததாக வெடி குண்டுகளை முழுமையாக தயாரிக்க ஆயத்தமாக இருந்தனர்.

    ‘டைம்பாம்’ வகை குண்டுகளை வைப்பதே அவர்களின் முக்கிய திட்டமாகும். இதற்காகத்தான் கடிகாரத்தை வாங்கி தயாராக வைத்து இருந்தனர்.

    அந்த வெடிகுண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதற்கும் சாதனங்களை உருவாக்கி இருந்தனர்.

    மேலும் சிலர் தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாறி தாக்குதல் நடத்துவதற்கும் தயாராக இருந்தனர். ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தை ஒட்டி முதல் கட்ட தாக்குதலை நடத்துவது அவர்களது திட்டமாகும்.

    தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை கண்டறிந்த அவர்கள் அந்த இடங்களுக்கு சென்று எந்த மாதிரி தாக்குதல் நடத்த வேண்டும் என்று முழுமையாக ஆய்வு செய்தனர்.

    அதே போல் தலைவர்கள் மீது நடத்த வேண்டிய தாக்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தயாராக இருந்தார்கள்.

    குடியரசு தினத்தின் போது, நடத்தும் தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் வகையிலும் அடுத்த கட்ட தாக்குதலை நடத்துவதற்கும் அவர்கள் திட்டங்களை உருவாக்கி இருந்தார்கள்.

    முதலாவது தாக்குதலை டெல்லியில் நடத்த திட்டமிட்ட அவர்கள் அதன் பிறகு நாடு முழுவதும் பல இடங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கும் முடிவு செய்து இருந்தனர்.

    ஆனால், போலீஸ் வலையில் வசமாக சிக்கியதால் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது முப்தி முகமது சுகாயில், அனஸ் யூனுஸ், ரஷீத் ஜாபர், சயீத், ரகீஸ் அகமது, சுபாயர் மாலிக், சயித் மாலிக், சாகிப் இப்தேகர், முகமது இர்சாத், முகமது ஆசம் ஆகிய 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதானவர்களில் ரசீத் சாபர், சயீத் இருவரும் அண்ணன்- தம்பி ஆவர். இவர்களில் சயீத் அம்ரோகா நகரில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். அவர்தான் ராக்கெட் லாஞ்சர் தயாரித்து கொடுத்தார்.

    முகமது ஆசம் என்பவர் டெல்லி சீலம்பூரில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். அவர்தான் வெடி பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

    போலீசார் டெல்லியில் சிலாம்பூரிலும், உத்தரபிரதேசத்தில் லக்னோ, அம்ரோகா, ஹபுர், மீரட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுவதால் மேலும் சோதனைகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடந்த என்கவுண்டரில், பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.



    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. #JKEncounter
    சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    நைரோபி:

    சோமாலியாவில் அல்- ‌ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது.

    இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    இதையடுத்து கடந்த 17-ந்தேதி நடந்த குண்டு வீச்சில் 34 பயங்கரவாதிகளும், 18-ந்தேதி நடந்த தாக்குதலில் 28 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

    2 நாட்கள் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பேர் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். #JKEncounter #NaveedJattGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள குத்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை இன்று காலையில் சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்காம் மாவட்டத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது.



    இந்த சண்டையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி நவீத் ஜாட் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் மூத்தப் பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நவீத் ஜாட் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி ஸ்ரீநகர் மருத்துவமனையில் இருந்து போலீஸ் காவலையும் மீறி தப்பிச் சென்றான். அவனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளான். #JKEncounter #NaveedJattGunnedDown
    காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். #JK #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ரெட்ஹனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசார் ஆகியோர் இணைந்து அந்த வீட்டை நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

    அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. வீடுகள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    5 மணி நேரம் நடந்த இந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்கள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார். அங்கிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதேபோல மற்றொரு என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது.

    புல்ஹமா மாவட்டம் டிரால் பகுதியை அடுத்த ஹபு என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்தில் 20 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JK #MilitantsKilled

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter
    பார்யாப் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் படைகள் நிகழ்த்திய தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். #Afghanistan
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பாடில்லை. மாஸ்கோவில் சமரச பேச்சு வார்த்தை முடிந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்கு பார்யாப் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியை இலக்காக வைத்து, ஆப்கானிஸ்தான் படைகள் நேற்று முன்தினம் குண்டு வீச்சு நடத்தின.

    பஸ்த்தாங்கோட் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் உள்ளூர் தளபதி ஒருவர் உள்பட 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலின்போது ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்த தகவல்களை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது ஹனிப் ரேசாய் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் தலீபான்கள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 2 பேரை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் 3-வது வாலிபரை பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். #militants

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.

    காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

    இதில் 2 பேரை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டனர். 2 பேரை விட்டுவிட்டனர். ஒருவரை காணவில்லை. போலீசுக்கு தகவல் கொடுத்ததால் 2 இளைஞர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர். 17 வயதான பள்ளி மாணவனை அவர்கள் துபாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    அதை தொடர்ந்து 19 வயதான நதிம் மன்சூர் தர் என்ற இளைஞரை கழுத்தை அறுத்துக்கொன்றனர். அவரது உடல் சோபியான் பகுதியில் கிடந்தது. இந்த இரண்டு சம்பவமும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் 3-வது வாலிபரை பயங்கரவாதிகள் இன்று கடத்தி சென்றனர். அந்த வாலிபரின் பெயர் சுகைல் அகமது.

    தெற்கு காஷ்மீரில் உள்ள கிராமத்தில் இருந்தபோது அவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 3-வது கடத்தல் சம்பவம் இதுவாகும்.

    இந்தநிலையில் காஷ்மீரில் இன்று 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

    சோபியான் மாவட்டம் ஜெய்ன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்கள் அல்-பாதர் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவார்கள். #militants

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:


    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனாப்போரா பகுதியை அடுத்துள்ள ரெப்பான் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 



    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட சோபியான் மாவட்டத்தை சேர்ந்த நவாஸ் வாகேய், மற்றவர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த யாவார் வானி இருவருமே அல்-பதர் என்னும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Twomilitantskilled #JKencounter
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JKEncounter
    பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    வாஷிங்டன்:

    2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக செயல்பட்டது.

    இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்திய அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மக்கள் நல நிறுவனமான வாட்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு போர் நடவடிக்கை மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் முதல் 5 லட்சத்து 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.



    கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படையினர், ராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் இந்த ஆய்வில் அடங்குவர் என்றும், மிக துல்லியமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது எனவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் மட்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 272 முதல் 2 லட்சத்து 04 ஆயிரத்து 575 பொதுமக்கள் இந்த போர் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அதேபோல், 38 ஆயிரத்து 480 பொதுமக்கள் ஆப்கானிஸ்தானிலும், 23 ஆயிரத்து 372 மக்கள் பாகிஸ்தானிலும் கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #US #WarOnTerror
    ×