search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107458"

    அரியானாவில் உள்ள 8 ரெயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம் என்று லஷ்கர் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். #bombthreat #Railwaystation

    அம்பாலா:

    பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தப் போவதாக அடிக்கடி மிரட்டியபடி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அவர்கள் எழுதியதாக கூறப்படும் மர்ம கடிதம் ஒன்று அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

    அதில், “கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் அக்டோபர் 20-ந்தேதி குண்டுகள் வைத்து தகர்ப்போம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதே தினத்தன்று சகரன்பூர், ஜாக்கல், கிஷார், கர்னல், ரோதக், பானிப்பட், ஜெகத்ரீ ஆகிய ரெயில் நிலையங்களையும் தகர்க்கப் போவதாக கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

    லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து இந்த கடிதத்தை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே அரியானாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #bombthreat #Railwaystation

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இன்று மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் 7 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 3 போலீஸ்காரர்கள் கடத்தி, கொல்லப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் பயங்கரவாதிகள் பாரமுல்லா மாவட்டத்தில் வீடு புகுந்து ஒருவரை கடத்திச் சென்றனர். #SoporeGunmen #manabducted
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் சிறப்பு படை பிரிவு போலீஸ் அதிகாரிகள், 3 பேர் மற்றும் ஒரு காவலர் இன்று திடீரென மாயமாகினர்.

    காவல்துறையை சேர்ந்த 4 பேரையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர்களில் 3 போலீசார் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், பாரமுல்லா மாவட்டம், சோபோர் நகரத்தின் அருகேயுள்ள ஹர்வான் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று பின்னிரவில் புகுந்த பயங்கரவாதிகள் முஷ்ட்டா அஹமத் மிர்(45) என்பவரை கடத்திச் சென்றனர்.

    அவரது நிலைமை என்னவானது? என்பது புரியாத நிலையில் அப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #SoporeGunmen #manabducted 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதல்களில் பல பயங்கரவாதிகளும் பலியாகின்றனர்.

    இந்நிலையில், ஜஜார் கோட்லி என்ற பகுதியில் நேற்று காரில் வந்த பயங்கரவாதிகள் வனத்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால், அப்பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    2 நாட்களாக நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் இன்று மதியம் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #JammuKashmir
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuAndKashmir #Kupwara #Encounter
    குப்வாரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    குப்வாரா மாவட்டத்தின் ஹந்வாராவுக்கு அருகே உள்ள குளூரா பகுதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படை சார்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 



    கடந்த ஆண்டு 220 பயங்கரவாதிகளும், இந்த ஆண்டு இதுவரை 142 பயங்கரவாதிகள் என கடந்த 2 ஆண்டுகளில் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuAndKashmir #Kupwara #Encounter

    ஜம்மு காஷ்மீரில் கட்ந்த 2 ஆண்டுகளில் மட்டும் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தெரிவித்துள்ளார். #RajivRaiBhatnagar #CRPF
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தவறாக வழி நடத்தப்படும் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைகிறார்கள். இதை தடுக்க பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இளம்வயது தீவிரவாதிகளை சரண் அடையும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்.

    அவர்கள் தீவிரவாத பாதையில் தொடரும் போதுதான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு 220 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 142 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் ராஜீவ்ராய் பட்னாகர்

    இதன்படி 2 ஆண்டுகளில் மட்டும் 360-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் உயிர் இழந்துள்ளனர்.

    காஷ்மீர் மாநிலம் முழுவதும் 60 பட்டாலியன்களை சேர்ந்த 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணுவம், மாநில போலீசார் ஆகியோருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.

    இங்கு கொரில்லா முறையில் தீவிரவாதிகள் சண்டையிடுகிறார்கள். திடீர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி விடுகிறார்கள்.

    எனவே பாதுகாப்பு வீரர்களுக்கு அதிநவீன கவச உடைகள், ஆயுதங்கள், வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் பலர் காயம் அடைகிறார்கள். என்றாலும் பொதுமக்களின் உயிர் இழப்பை தடுக்க பொறுமையுடன் செயல்படுகிறார்கள். ராணுவ ரீதியாகவும் பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajivRaiBhatnagar #CRPF
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #3militantskilledinBandipora #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, இன்று அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா இன்றிரவு தெரிவித்துள்ளார். #3militantskilledinBandipora  #Bandiporaencounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா எல்லப்பகுதியில் பயங்கராவாத இயக்கத்தில் இணைந்த 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையிடம் இன்று சரணடைந்தனர். #JammuKashmir #MilitantsSurrender
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.

    மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsSurrender 
    எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி மீது இன்று தாக்குதல் நடத்த முயன்ற நான்கு பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். #Egyptianpolice #checkpointattack
    கெய்ரோ:

    எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் உள்ள மசூதியின் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணகானவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அதிபர் அப்ட்டெல்-ஃபட்டா அல்-சிசி உத்தரவிட்டார்.

    எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள எல்-ஆரிஷ் நகரில் இன்று போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் முயன்றனர். அந்த தாக்குதலை முறியடித்த போலீசார் ஆயுதங்களுடன் வந்த நான்கு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். #Egyptianpolice #checkpointattack 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #JammuKashmir #MilitantsKilled #SecurityForce
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், அதனை பாதுகாப்பு படையினர் திறம்பட முறியடிப்படும் தொடர்கதைகளில் ஒன்றாகிவிட்டது. பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் சில சமயங்களில் வீர மரணம் அடைந்துள்ளனர்.  அதே சமயம் பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக போராடினர்.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #MilitantsKilled #SecurityForce
    பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. #Afghanistan #School
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப காலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    கடைசியாக நேற்று முன்தினம் காபூலில் உள்ள தனியார் டியூஷன் மையம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

    இப்படி கல்வி நிறுவனங்கள் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வருவது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு காரணங்களையொட்டி அவை மூடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுபற்றி ஆப்கானிஸ்தான் உள்துறை மந்திரி வாயிஸ் அகமது பர்மாக் கூறும்போது, “கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இப்போது நமது நாடு சந்தித்து வருகிற மிக பயங்கரமான தாக்குதல்கள் என்றுதான் கூற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.  #Afghanistan #School #tamilnews
    சுதந்திர தின விழாவில் தாக்குதல் நடத்த 4 பாக்.பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #IndependenceDay

    புதுடெல்லி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை (புதன் கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    டெல்லியில் பிரதமர் மோடியும், மாநில தலைநகரங்களில் முதல்-மந்திரிகளும் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளனர்.

    இந்தியா தனது சுதந்திர தினத்தை கம்பீரமாக, கோலாகலமாக கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க முயற்சி செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    இந்த ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரித்தது. இதனால் காஷ்மீரிலும், எல்லைப் பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று மிகப்பெரிய நாசவேலை செய்யும் திட்டத்துடன் 4 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவலை உளவுத்துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த 4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில், அந்த நாட்டு ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-இ- முகம்மது எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த 4 பயங்கரவாதிகளும் டெல்லியில் நாளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தவும், தற்கொலை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லியில் உள்ள சில ஆதரவாளர்கள் உதவியுடன் 4 பயங்கரவாதிகளும் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே காலிஸ் தான் பயங்கரவாதிகளாலும் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாளை சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் போது, காலிஸ் தான் பயங்கரவாதிகள் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

    இவை தவிர வேறு சிலபயங்கரவாத இயக்கங்களும் டெல்லியில் ஊடுருவ முயற்சி செய்வதையும் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இவை பற்றி மத்திய உள்துறையிடம் தகவல் அளித்து உளவுத்துறை எச்சரித்து உஷார்படுத்தியுள்ளது.

    இதையடுத்து டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

    டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடக்கும் பகுதியில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லிக்குள் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளும் காஷ்மீர் வழியாக வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்களை பிடிக்க டெல்லி முழுக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். #IndependenceDay

    ×