search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107458"

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #militantstkilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அதைத்தொடர்ந்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மீதமுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #militantstkilled
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ponradhakrishnan #thoothukudifiring

    கடலூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு கடலூர் வந்தேன்.

    விழுப்புரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் சமதர்ம எழுச்சி மாநாடு நடக்கிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கே:- ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக மத்திய அரசு ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

    ப:- மாநில அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளது. அதன் பிறகு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.

    கே:- தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதே?

    ப:- கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரை தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பலமுறை தெரிவித்து விட்டேன்.

    இந்த பிரச்சினையை முளையிலேயே கிள்ளி இருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எந்தஒரு முன்னேற்றமும் இருக்கக்கூடாது என பயங்கரவாதிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆரம்பத்திலேயே மாநில அரசு தடுத்து நடவடிக்கை எடுத் திருக்க வேண்டும்.

    ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நடந்து வருவது என கூறி வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் கம்பெனி தொடங்குவதற்கு தி.மு.க.தான் காரணம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிதான் தொடங்கி வைத்தார்.


    மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த மத்திய மந்திரி ஆ.ராசா இதற்கு அனுமதி கொடுத்தார். இதன் மூலம் தமிழகத்துக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக மாநில அரசு கொடுக்கும் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    உலக அளவில் உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய நாட்டின் மதிப்பு கூடி இருக்கிறது. இதில் விவசாயத்தில் இந்தியா சாதனை புரிந்துள்ளது. மேலும் எல்லா வகையிலும் இந்திய அரசு முன்னேற்ற பாதையில் செல்கிறது.

    கே:- தமிழகத்தில் 400 விவசாயிகள் இறந்துள்ளனரே?

    ப:- தமிழக அரசு இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு சொல்கிற எண்ணிக்கையும், மக்கள் சொல்கின்ற எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #thoothukudifiring

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #securityforce #militantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் எல்லையில் தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் அதனை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    மேலும், பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #securityforce #militantskilled 
    புத்த கயா வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen
    பாட்னா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் புத்த கயா நகரம் புகழ்பெற்ற ஆன்மீக பகுதிகளில் ஒன்று. மகா போதி வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள இங்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.



    இந்த தாக்குதல்களில் புத்த மத துறவிகள் உட்பட சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கினை விசாரணை செய்த தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை மே 31-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen
    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    தெற்கு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். #KashmirAttack #KashmirJawanKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  அவ்வகையில் புல்வாமா மாவட்டம் தாக்கியா வாங்கம் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கிடைத்து, மத்திய ரிசர்வ் படை போலீசார் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

    பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் முன்னேறியபோது, தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டே முன்னேறினர். இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் மன்ஜித் குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #KashmirAttack #KashmirJawanKilled
    ×