search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெனிசூலா"

    வெனிசூலா நாட்டில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ சிறையில் அடைக்கப்பட்டார்.
    கராக்கஸ்:

    வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எட்கர் ஜாம்ப்ரனோ, கராக்கஸ் நகரில் உள்ள கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி, கோர்ட்டு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “எட்கர் ஜாம்ப்ரனோ பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

    வெனிசூலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எட்கர் ஜாம்ப்ரனோ செயல்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாகத்தான் விசாரணை நடத்தப்படுகிறது.
    வெனிசூலா எல்லையில் நிகழ்ந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். #Venezuela #Violent
    கராக்கஸ்:

    வெனிசூலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.



    உதவி பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் வெனிசூலாவுக்குள் நுழையாத படி நாட்டின் எல்லைகளை அவர் மூடி வருகிறார். அந்த வகையில் பிரேசில் மற்றும் கொலம்பியா நாடுகளுடனான எல்லையை இரு தினங்களுக்கு முன்பு மூடினார்.

    ஆனால் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற்சியில் வெனிசூலா மக்கள் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.

    இதனால் அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

    இதனால் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 
    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். #VenezuelaCrisis #Maduro #VenezuelaMutiny
    காரகாஸ்:

    வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் தேர்தலில் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

    அதேசமயம் பாராளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.
     
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அத்துடன் மதுரோவுக்கு எதிரான தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அதில் பேசிய ஒரு வீரர், ‘தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த நாங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். எனவே, உங்கள் உதவி தேவை. தெருவில் இறங்கி போராட்டம் நடத்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.



    இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு காரகாசில் உள்ள கோட்டிசா பகுதியில் உள்ள முகாமில், கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை பாதுகாப்புத்துறை மந்திரி விளாடிமிர் பத்ரினோ தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

    கிளர்ச்சியாளர்கள் கோட்டிசா முகாமிற்கு செல்லும் முன்பு, பெட்டாரே பகுதியில் உள்ள முகாமில் இருந்து ஆயுதங்களை திருடிச் சென்றதாகவும், 4 வீரர்களை கடத்திச் சென்றதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #Maduro #VenezuelaMutiny
    வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். #Venezuela #NightClub #Violence
    கராக்கஸ்:

    வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.

    அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   #Venezuela #NightClub #Violence #tamilnews
    ×