search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107582"

    சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற எந்தவித உபகரணமும் இன்றி களத்தில் இறங்கி செயல்பட்ட தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
    சீனாவின் குவாய் டாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங். இவர் நேற்று காலை தன்னுடைய மகளை பள்ளியில் விடுவதற்காக மகனை வீட்டிலே தனியாக விட்டு சென்றுள்ளார். அந்த நேரம் தூக்கத்திலிருந்து விழித்த அவருடைய மகன், வெளியில் சத்தத்தை கேட்டு, திருடன் என நினைத்துக்கொண்டு, ஏசி வைக்கப்பட்டிருக்கும் பகுதி வழியாக வெளியில் இறங்க முயற்சி செய்துள்ளான்.

    அப்போது எதிர்பாராத விதமாக 7-வது தளத்தின் பின் பக்கத்தில் சிக்கிக்கொண்டு சத்தமிட்டுள்ளான். இதற்கிடையில் வீடு திரும்பிய ஹூவாங், வீட்டில் சிறுவன் இல்லாததை கண்டு வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு அந்தரத்தில் மகன் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்ததுடன், கணவருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

    இதனடிப்படையில் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்த கணவர், எந்தவித உபகரணமும் இன்றி உடனடியாக களத்தில் இறங்கி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டார். ஒருவழியாக சிறுவனை அடைந்த பொழுது, தீ அணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். பின்னர் கயிறுகளின் உதவியுடன் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

    இந்த சம்பவம் துணிந்து கதாநாயகன் போல செயல்பட சிறுவனின் தந்தைக்கு தற்போது நாலாபுரத்திலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

    Courtesy
    யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் உள்ள புராதன தளங்களை 12 மணி நேரத்தில் சுற்றி பார்த்ததற்காக துபாயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தந்தைக்கும், மகனுக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட துபாயில் வாழும் முகமது தாகிர் என்பவரும், அவரது மகன் முகமது ஆயான் உடன் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் நடத்திய சாகச போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த போட்டியில் 22 பேர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியின்போது இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நினைவிடங்களை 11 மணி நேரம் 33 நிமிடங்களில் சுற்றி பார்த்து சாதனை படைத்துள்ளனர் அந்த தந்தையும், மகனும்.

    இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த பயணத்துக்கு அவர்கள் பயன்படுத்தியது முழுக்க முழுக்க பொதுத்துறை வாகனங்கள் மட்டுமே. அதாவது இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெரிசலில், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி, அரசு பேருந்து, மற்றும் ரெயில்களில் பயணித்து சுமார் 300 கிலோ மீட்டர்களை அந்த குறைந்த நேரத்தில் கடந்துள்ளனர்.

    இந்த பயணத்தில் தாஜ் மகால் துவங்கி, ஆக்ரா கோட்டை,  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஃபதேபூர் சிக்ரி, ராஜஸ்தானில் உள்ள கியோலடியோ தேசிய பூங்கா,  டெல்லியில் உள்ள முகலாய அரசர் உமாயுனின் கல்லறை, செங்கோட்டை, குதூப்மினார் உள்ளிட்ட இடங்களை அவர்கள் சுற்றிவந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக கின்னஸ் சாதனையில் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்ட இந்த சாதனை தற்போது 12 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக துபாய் பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்த தந்தை முகமது தாகிர், இந்த முழு பயணத்திலும், பேருந்துக்காகவும், ரெயிலுக்காகவும் காத்திருந்த சமயங்களில் மட்டுமே ஓய்வெடுத்ததாகவும், அந்த நேரத்திலேயே தங்களது சாப்பாட்டை முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
    அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஜா பின் லேடன், அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரது மகளை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #OsamaBinLaden #HamzaBinLaden
    லண்டன்:

    உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா.. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். #OsamaBinLaden #HamzaBinLaden
    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மனைவி மற்றும் 3 மகன்களை கொலை செய்தது குறித்து டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு பூவரசன் (12), சஞ்சய் (8), நிர்மல் (6) என்ற 3 மகன்கள் இருந்தனர்.

    நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நதியா அவரது 3 மகன்கள் ஆகியோர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் வாயில் துணி கட்டியும், உடலில் கற்கள் கட்டியும் இருந்தது.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி இவர்கள் சாவுக்கு காரணமான லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    தனது அக்காள் மற்றும் அக்காள் மகன்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் நதியாவின் தம்பி மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் லோகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    முதற்கட்டமாக போலீசார் 4 பேர் இறந்த வழக்கை மர்ம மரணம் (174) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

    தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். அந்த அறிக்கை வந்தவுடன் மர்ம மரணம் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது.

    முதற்கட்டமாக 4 பேரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற பிரிவின் கீழ் லோகநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலை வழக்காக மாற்றப்பட்ட பிறகு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.



    மேலும் 4 பேர் மரணம் தொடர்பாக லோகநாதனின் தாயார் தேவகி, தந்தை சண்முகம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லோகநாதனின் அக்காள் ரேணுகா, அவரது கணவர் முருகேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் நதியாவும், அவரது குழந்தைகளும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. லோகநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை நதியா தட்டிக்கேட்டார் இதற்கு உதவியாக லோகநாதனின் குடும்பத்தினர் இருந்து உள்ளனர். லோகநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை நேரில் சென்று நதியா தட்டிக்கேட்ட விவரம் லோகநாதனுக்கு தெரிய வந்துள்ளது.

    இதனால் அவரும், அவரது உறவினர்களும் இணைந்து நதியாவையும், அவரது மகன்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. #tamilnews
    புதுக்கோட்டை அருகே மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரை சேர்ந்தவர் சேகர் (வயது 50), விவசாயி. இவருக்கு மணிகண்டன், அருண் (27) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு திரிந்துள்ளார். தந்தை சேகரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பல முறை கண்டித்த சேகர் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி வந்தார். ஆனால் அருண் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அருண் தந்தை சேகரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என கூறி திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் அருகில் கிடந்த அரிவாளால் தந்தை என்றும் பாராமல் சேகரை பலமாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிசிக்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேகரின் மூத்த மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீசார், தந்தையை வெட்டிக்கொன்ற அருணை கைது செய்தனர். தொடந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    கேரளா மாநிலத்தில் மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காவுமடம் பாலா பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி ஆனி அம்மா (வயது 65). இவர்களது மகன் பெபி மேத்யூ (48). திருமணமாகவில்லை.

    நேற்று மாலை பெபி மேத்யூக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி பெபி மேத்யூ பரிதாபமாக இறந்தார். மகன் இறந்தசெய்தியை அங்கு நின்ற தாய் ஆனி அம்மாளிடம் டாக்டர் கூறினார். இதைகேட்டு அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே ஆனி அம்மாளை அதே ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆனி அம்மாளும் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #tamilnews
    சாமி சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக தந்தை, மகனை கைது செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    மதுரை:

    மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்த வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்யகுமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரம் என்ற கிராமத்தில் அர்த்தநாதீஷ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சிலைகள் திருடப்பட்டு கடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக எங்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சிலைகளில் சிலவற்றை அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் பகுதியில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் என்பவருக்கு இந்த சிலை கடத்தலில் நாங்கள் உதவி செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.

    வல்லபபிரகாஷ் ஆகிய எனக்கு 87 வயது ஆகிறது. என் உடல்நிலையை கருத்தில் கொண்டு இவ்வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மனுதாரர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன. மேலும் எத்தனை வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிப்பது குறித்து கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு நீதிபதி உத்தர விட்டார்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரர்களை கைது செய்ய தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அரக்கோணத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனுடன் வி‌ஷம் குடித்த தாய் உயிரிழந்தார். அரசு ஆஸ்பத்திரியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் வள்ளி (வயது 48). கணவரை இழந்தவர். இவருடைய மகன் நாகராஜன் (வயது 28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது, கம்பெனியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் நாகராஜனுக்கு முதுகெலும்பு முறிந்ததுடன், உடல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவரை குணப்படுத்த அந்த நிறுவனம் ரூ.95 லட்சம் மருத்துவ செலவை ஏற்றது. தீவிர சிகிச்சை அளித்தும் நாகராஜனை குணப்படுத்த முடியவில்லை. இதனால் நாகஜராஜனும், அவர் தாயும் மனமுடைந்தனர். நேற்றிரவு வீட்டில் இருந்த நாகராஜனும், அவரது தாயும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    வி‌ஷம் குடித்ததில் வாயில் 2 பேருக்கும் வாயில் நுரை தள்ளியது. வள்ளி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். நாகராஜன் மயக்க நிலையில் கிடந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து வள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது, வி‌ஷம் குடித்த நிலையில் கிடந்த 2 பேரையும் பார்த்து அதிர்ந்து போயினர். உடனடியாக அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு பரி சோதித்த டாக்டர்கள், வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். நாகராஜன் கவலைக்கிடமாக இருந்தார்.

    இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


    பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியான பண்டாரு தத்தாத்ரேயா மகன் பண்டாரு வைஷ்ணவ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். #BJPMP #BandaruDattatreya
    புதுடெல்லி:

    மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முஷிராபாத் பகுதியில் இவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவரது மகன் வைஷ்ணவ் (21). மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று இரவு திடீரென வைஷ்ணவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அதே பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வைஷ்ணவ் மிகவும் இள வயதிலேயே மரணமடைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரு தத்தாத்ரேயா செகந்திராபாத் தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
    சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள காளிப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சின்ன சாமி (வயது 70). டி.வி. மெக்கானிக்.

    இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 33 சென்ட் நிலம் உள்ளது. அதனை பிரித்து கொடுக்குமாறு சின்னசாமியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது31) கடந்த சில ஆண்டுகளாக தந்தையிடம் வற்புறுத்தி வந்தார்.

    ஆனால் சின்னசாமி நிலத்தை பிரித்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் மூச்சு திணறி சின்னசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதை பார்த்த சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் இளைய மகன் ரமேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றிரவு அவர் வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது தந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான சந்திரசேகரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் தந்தையை, மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட சின்னசாமியின் மனைவி குழந்தையம்மாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதனால் சின்னசாமி தனியாக வசித்து வந்தார்.

    அவரது வீட்டின் அருகில் சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்திரசேகருக்கு சந்தியா (25) என்ற மனைவியும், சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
    சுரண்டையில் தாய் இறந்த துக்கத்தில் மகனும் பரிதாபமாக இறந்தார். அன்னையர் தினமான நேற்று ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
    சுரண்டை:

    நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் கமலா மிஷியர் (வயது 69). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கமலா மிஷியர் இவர் மீது அதிக பாசம் வைத்து இருந்தார். குட்வினும், தாயாரிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குட்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கமலா மிஷியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு குட்வின் தனது தாயாரை காரில் அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகு ஊருக்கு புறப்பட தயாரானார்கள்.

    அப்போது கமலா மிஷியர் திடீரென மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    பின்னர் கமலா மிஷியர் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. தாயார் உடலை பார்த்து அழுதபடியே குட்வின் இருந்தார். அவர் உடல் சோர்ந்து காணப்பட்டார்.

    இதற்கிடையே கமலா மிஷியர் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திடீரென குட்வின் மயங்கி விழுந்தார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் குட்வின் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

    தாய்-மகன் இருவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. அன்னையர் தினமான நேற்று தாய்- மகன் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.

    இறந்த குட்வினுக்கு மனைவியும், 3 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
    ×