search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    காந்தி கண்ட கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரை:

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5-வது ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் இதை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    மதுரை கோச்சடையில் நடைபெற்ற தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-வது ஆண்டு தொடக்கம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவை உலக அளவில் முதல்நிலை நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். தூய்மை நிறைந்த இந்தியாவை உருவாக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டுவந்தது மட்டுமின்றி, பிரதமர் மோடி தனது கையிலே துடப்பத்தை எடுத்து சுத்தம் செய்தார்.

    தூய்மை இந்தியா திட்டத்தினால் உலக அளவில் இந்தியாவிற்கு பல மடங்கு பெருமை அதிகரித்துள்ளது. இன்று நாடு முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், பாரதிய ஜனதா ஆளும் 21 மாநில முதல்-அமைச்சர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.


    சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டாரோ அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல மடங்கு பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இன்றைக்கு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள மதுரை கோச்சடை பகுதி ஒரு ஆண்டாக குப்பைகளை அகற்றாத பகுதியாகும். இதேபோன்று எல்லா இடங்களிலும் தூய்மை பணியை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan
    மதுரையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், மாதர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக அரசு பதவி விலக வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை கலைத்து விட்டு பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் இன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    பெரியார் பஸ் நிலையம், கட்டபொம்மன் சிலை அருகே இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்றவர்கள், முதல்-அமைச்சர் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அதனை பறித்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    சாலையில் அமர்ந்து கோ‌ஷமிட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்றனர்.

    இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் செல்வா, தலைவர் வேல் தேவர், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கோபிநாத், மாதர் சங்க மாவட்ட தலைவர் ராஜேசு வரி உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். #Tamilnews
    வேலை கிடைக்காத விரக்தியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், பேரையூர் ஜே.ஆர்.கே. நகரைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது 42). இவருக்கு பாண்டிசெல்வி என்பவருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. ஜெயபிரகாசுக்கு வேலை இல்லை. பல இடங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஜெயபிர காசுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டுக்குள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டி செல்வி பேரையூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஹரிதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்- ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையின் முக்கிய பகுதியான விளக்குத்தூண், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. டீக்கடைகள், ஓட்டல்கள் பெரும்பாலான பகுதிகளில் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. முக்கிய இடங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து வருகின்றனர்.

    மதுரை அருகே வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினர் போல் பேசி 6 பவுன் நகையை பறித்து சென்றவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள உறங்கான்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவரது பாட்டி அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினர் போல பேசியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் அவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டார்.

    இது குறித்து ராஜேஷ், ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை அருகே மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர், போஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ் (வயது 21). நேற்று மதுரை ரிங் ரோட்டில் தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். திருமணம் முடிந்ததும் சுரேஷ் அங்கிருந்து வீடு திரும்பினார்.

    விரகனூர் ரிங் ரோடு ரவுண்டானா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி சுரேஷ் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது 37). இவர் ஒத்தக்கடையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக இருந்து வருகிறார்.

    நேற்று இந்த பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரூ. 1,340-க்கு பெட்ரோல் போட்டனர். பெட்ரோல் போட்டதும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    உடனே பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து பணத்தை கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து பழனிக் குமார் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து பெட்ரோலுக்கு பணம் கொடுக்காத 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஓடைப்பட்டியைச் சேர்ந்த பொன் தனுஷ் (16), வைரமணி (17) என்பது தெரியவந்தது.

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா பதுக்கியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் பேரில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி, பாப்பாபட்டி பகுதியில் கஞ்சா பதுக்கிய ஜெயக்குமார் (வயது 32), சந்திரன் (34), ராகதேவன் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

    செக்கானூரணி மீனாட்சி பட்டியில் வேளாங்கண்ணி என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி பகுதியில் பரமன் (42), அவரது மனைவி லட்சுமி (36) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அச்சம்பத்து பகுதியில் ராமசுப்பிரமணியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கீரிப்பட்டி பகுதியில் போலித்தேவன் (45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆஸ்டின்பட்டி, உச்சப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கிய சரஸ்வதி (62), கார்த்திக் பாலு (36) ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து 7 1/2 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ. 17 ஆயிரத்து 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 104 கிலோ கஞ்சா பதுக்கியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கும்பலை பிடிக்கும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

    மதுரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் தலையாரி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கீதா (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம்,காளையார் கோவிலில் தலையாரியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று கீதா தனது மொபட்டில் மேலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் கீதா படுகாயம் அடைந்தார். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரையில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் சுந்தரம். இவரது முதல் மனைவி சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 12 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    முதல் மனைவியின் தங்கையை சுந்தரம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தரம் மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

    இரண்டு நாட்களாக மகள் என்றும் பாராமல் தவறான முறையில் நடந்து கொண்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அக்கம் பக்த்தினர் கேட்டபோது நடந்த விவரத்தை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை கைது செய்தனர்.

    மதுரை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்திரன் (வயது34) இவரது மனைவி அன்னப்பாண்டி, கணவன்-மனைவி இருவரும் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மூவேந்திரன் தினமும் மது குடித்து விட்டு சென்று மனைவி அன்னபாண்டியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    வாழ்க்கையில் வெறுப்படைந்த மூவேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் மினி பஸ் டிரைவரை அடித்து உதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டியைச் சேர்ந்தவர் அம்பேத் சந்திரன் (வயது 38). இவர் வாடிப்பட்டியில் இருந்து பூச்சம்பட்டிக்கு மினிபஸ் ஓட்டி வருகிறார்.

    நேற்றும் வழக்கம் போல பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அம்பேத் சந்திரன் கச்சைகட்டியில் உள்ள பெருமாள் கோவில் முன்பு மினிபஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் (28) என்பவருக்கும், அம்பேத் சந்திரனுக்கும் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அவரது நண்பர் பாலமுருகனும் சேர்ந்து அம்பேத் சந்திரனை தாக்கினர்.

    மேலும் அம்பேத் சந்திரன், அவரது நண்பர்கள் கோபிராஜ், செந்தில் ஆகியோர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

    இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலமுருகன், கோபிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான அம்பேத் சந்திரன், செந்தில் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

    ×