search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் கஞ்சா விற்றதாக 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்.

    அப்போது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கோபாலன் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது38), பைக்காரா மகாலிங்கம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.600 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஆனையூர் முருகன் (59) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.270 மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாயன் (வயது 55). இவர், சேடப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

    அதன் அடிப்படையில் ஏட்டு ஆனந்தனுடன் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ரோந்து பணிக்குச் சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் சின்னக்கட்டளை பகுதியில் சென்றனர்.

    அப்போது அங்கு 2 பேர் போர்வையால் உடலை மூடியபடி நிற்பதை பார்த்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் 2 பேரையும் தனித்தனியாக சப்-இன்ஸ்பெக்டர் மாயன் விசாரித்தார்.

    அந்த நேரத்தில் ஒருவன் திடீரென மாயனின் கழுத்தில் கத்தியால் குத்தினான். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாயன், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 13-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடக்கிறது. #StateSwimmingCompetition
    மதுரை:

    தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 13-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் மையப் பகுதியாக மதுரை இருப்பதால் மாநில அளவிலான நீச்சல் போட்டியை இங்கு நடத்த தீர்மானித்தோம். நீச்சல் வீரர்கள் அனைவரும் இங்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதற்கு முன்பு 3 முறை மாநில நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை மதுரை நீச்சல் சங்கத்திற்கு வழங்கியிருந்தோம்.

    இந்த போட்டி வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக 5 வயது முதல் 21 வயது வரையில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்’ என்றார். அப்போது மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின், செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். #StateSwimmingCompetition
    மதுரை அருகே காரில் கடத்தப்பட்ட எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திருமங்கலம் அருகே உள்ள திரளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    காரில் வந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காருக்குள் சோதனை நடத்திய போது எரிசாராயம் கடத்தப்படுவது தெரியவந் தது. காரில் இருந்த 480 எரிசாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த ராஜாமணி மகன் துளசி (வயது 37), மதுரை கே.புதூர் காளிதாஸ் மகன் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    எரிசாராயம் எங்கு தயாரிக்கப்பட்டது? அதனை எங்கு கடத்துகிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #Strike
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரசு நடவடிக்கையால் இன்று அரசு பள்ளிகளில் 80 சதவீத ஆசிரிய-ஆசிரியைகள் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்றும் 8-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் 68 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதேபோல் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தன. #JactoGeo #Strike

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மதுரை மாவட்டத்தில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. #JactoGeo #Strike
    மதுரை:

    கடந்த ஒரு வாரமாக அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு எச்சரித்தும் இன்றும் அவர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 2 ஆயிரத்து 279 உள்ளன. இதில் அரசு பள்ளிகளில் மட்டும் 11 ஆயிரத்து 756 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 855 அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது வேலைநிறுத்தம் காரணமாக இதில் 650 பள்ளிகள் செயல்படவில்லை. ஆசிரிய-ஆசிரியைகள் வராததால் மாணவ-மாணவிகளின் வருகையும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது சத்துணவு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மேலும் மூடப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிகிறது.   #JactoGeo #Strike
    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர். #JactoGeo #Temporaryteacher
    மதுரை:

    பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி இறுதி தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ-மாணவிகளின் கல்விக்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி மாநிலம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று பெண்கள் உள்பட ஏராளமான பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வமாக விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #JactoGeo #Temporaryteacher

    மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். #PMModi #AIIMS
    மதுரை:

    டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது.

    இங்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க பல்வேறு இடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இறுதியாக அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.



    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    இதே விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு விமானம் மதுரை வந்தடைகிறது.

    விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பிரதமர் மோடி, 3 கி.மீ. தொலைவில் உள்ள மண்டேலா நகர் செல்கிறார். பின்னர் விழாவில் பங்கேற்று ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பின்னர் அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பா.ஜனதா மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார்.

    அதன் பிறகு பகல் 12.55 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம் முதல் விழா திடல் வரை அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திடலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பா.ஜனதா மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியின் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

    தேசிய பாதுகாப்பு படை ஐ.ஜி. குப்தா தலைமையிலான குழுவினர் மதுரை வந்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா திடல்களை ஆய்வு செய்தனர்.

    அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #PMModi #AIIMS


    மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகள் மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) மதுரை வருகிறார். இதனையொட்டி மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடக்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதனை முன்னிட்டு மதுரை மாநகர், புறநகர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மதுரையின் 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.

    மத்திய அரசின் ரூ.2.10 லட்சத்தில் மானிய வீடு, இலவச எரிவாயு, 12 ரூபாய் செலவில் ரூ.2 லட்சம் காப்பீடு, 200 ரூபாய் முதலீட்டில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு மதுரை மாவட்டத்தில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு அழைப்பிதழை வழங்குகின்றனர்.

    இதுகுறித்து மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சசிராமனிடம் கேட்டபோது, பிரதமர் மோடியின் பொதுக்கூட் டத்தில் மாநகர், புறநகர் மாவட்டம் சார்பில் குறைந்தபட்சம் 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.

    தமிழகத்தில் மதுரை மட்டுமின்றி 9 மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (சக்தி கேந்திரா) மற்றும் மகாசக்தி கேந்திரா, மண்டல் தலைவர்கள், மோடியின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் வருவதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    எனவே பிரதமர் மோடியின் மதுரை பொதுக் கூட்டம் வரலாறு காணாத வகையில் பொதுமக்களின் ஆரவார வரவேற்புடன் அமையும் என்றார்.

    திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #TiruvarurBypoll #HighCourt
    மதுரை:

    திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணனும், அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, திருவாரூரில் இன்னும் புயல் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இதைத்தொடர்ந்து, திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

    இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதற்கான ஒப்புதல் பெறவேண்டும்.  இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்த விதம் சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.  #TiruvarurBypoll #HighCourt
    மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை அரசரடி, ஆரப்பாளையம், கோவில் துணை மின்நிலையங்களில் வருகிற 24-ந் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதன்படி சம்மட்டிபுரம் மெயின்ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்து ராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 4 முதல் 16 தெரு வரை, தேனி மெயின் ரோடு, விராட்டிப் பத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின் ரோடு, இ.பி. காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1 முதல் 3-வது தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், பழைய விளாங்குடி, புதிய விளாங்குடி, ஜெயில் ரோடு, மேலப் பொன்னகரம் 2,3,10 -வது தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்டு வரை, ஆர்.வி.நகர், ஞான ஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், பொன்னகரம் 1 முதல் 7-வது தெருவரை, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, புட்டுத்தோப்பு, எஸ்.எஸ். காலனி ஏரியா, வடக்கு வாசல், கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5-வது தெரு, சொக்கலிங்கநகர் 1 முதல் 8-வது தெருவரை, பொன்மேனி, சம்பட்டி புரம், பொன்மேனி மெயின்ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமா நகர், இன்கம்டாக்ஸ் காலனி, டெம்சி காலனி, இந்திரா நகர், குட்செட் ரோடு, மீனாட்சி பஜார், தெற்கு மண்டல அலுவலக பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடை தெரு, நேதாஜிரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம் பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல்தெரு, யானைக் கல் பகுதி, திருமலை ராயர் படித்துரை பகுதி, வடக்கு வெளி வீதி, தெற்கு பகுதி, புட்டுத் தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் பஸ் நிலையம், கிராஸ்ரோடு, பொன்னகரம்பகுதி, அழ கரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, ஒரு பகுதி பொன்னகரம், ஓர்க்ஸாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்து, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜாமில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ், எல்.ஐ.சி. ஆபீஸ் ரோடு, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் ரோடு, அய்யனார் கோவில் மெயின், அய்யனார் கோவில் 1, 2 மற்றும் 5-வது தெரு, அய்யனார் கோவில் விசாலம், தாகூர்நகர் பகுதி, மகான் காந்தி ரோடு, மேற்கு பகுதி, அகிம்சாபுரம் மேலத்தெரு, முதல்தெரு, அகிம்சாபுரம் 1 முதல் 8-வது தெரு வரை, விசாலம், முத்துராமலிங்கபுரம் 1 முதல் 2 தெருக்கள், இருதய ராஜபுரம் தெருக்கள் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்

    மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர்கள் ராஜாகாந்தி, சுஜா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை சத்யசாய் நகரில் உள்ள ரோஜா வீதியை சேர்ந்தவர் வீரபாண்டி.இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது30), இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தினமும் மதுரையில் இருந்து பஸ்சில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று காலை லட்சுமி பிரபா எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டார். புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று லட்சுமி பிரபாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.

    இதுகுறித்து புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

    ×