search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் 6 கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்வது நடந்து வருகிறது.

    குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, கீரைத் துறை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது.

    இந்த நிலையில் பீ.பி. சாவடி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போலீஸ்காரர்கள் ராமலிங்கம், சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது சிட்டா லாச்சி நகர் சந்திப்பில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பேரையூர், காளாம் பட்டியைச் சேர்ந்த அல்லிக் கொடி (46) என்பவரையும், திருப்பரங்குன்றதைச் சேர்ந்த அருண்பாண்டி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை- மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. #TejasTrain #Madurai #Chennai
    சென்னை:

    சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற் சாலையில் அதிவேகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

    தேஜஸ் ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி. டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளது.

    ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. 23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன் எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

    இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும் கழிவறைகள் நவீன வசதியுடனும் இருக்கிறது.

    ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.



    முதலாவதாக தேஜஸ் ரெயில் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. அந்த ரெயில் மும்பை- கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    2-வது தேஜஸ் ரெயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இது சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படுகிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரெயில் மதுரைக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும். பின்னர் மதுரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.

    சென்னை- மதுரை இடையே தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமையை தவிர மற்ற 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

    சராசரியாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தேஜஸ் ரெயில் சென்னை- மதுரை இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும்.

    தற்போது வைகை எக்ஸ்பிரஸ் 8 மணி நேரத்திலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரத்திலும் மதுரை செல்கின்றன.

    தேஜஸ் ரெயிலில் சேர் கார் கட்டணம் ரூ.1,140-ல் இருந்து ரூ.1,200 வரைக்குள் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்பு ரெயில் பெட்டி கட்டணம் ரூ.2,135-ல் இருந்து ரூ.2,200 வரை இருக்கும். தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

    விழுப்புரம், திருச்சி ஆகிய 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். #TejasTrain #Madurai #Chennai
    மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை டாக்டர் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். #MoneyRobbery
    மேலூர்:

    மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா சாலை பகுதியில் வசிப்பவர் டாக்டர் பாஸ்கரன். அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது அதே பகுதியில் தனியாக கிளீனிக் நடத்தி வருகிறார்.

    டாக்டர் பாஸ்கரன் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றார். வீட்டில் அவரது மனைவி, வேலைக்கார பெண் மற்றும் காவலாளி மட்டும் இருந்தனர்.

    பாஸ்கரன் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் புகுந்தது. அந்த கும்பல் முகத்தை துணியால் மறைத்தபடி துப்பாக்கியை காட்டி காவலாளியை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றது.

    பின்னர் டாக்டரின் மனைவி, பணிப்பெண் மற்றும் காவலாளியை ஒரு அறையில் தள்ளி அடைத்து கதவை பூட்டினர்.



    அதன் பிறகு அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

    அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஏசு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் செல்போன் கொள்ளை போயிருப்பதாக டாக்டர் பாஸ்கரன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    கொள்ளையர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாள்களை கையில் வைத்திருந்ததாகவும், முகத்தை சிறிய டர்க்கி டவலால் மறைத்திருந்ததாகவும் காவலாளி கூறினார்.

    இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் யாரும் ஈடுபட்டுள்ளார்களா? திட்டமிட்டு டாக்டர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #MoneyRobbery



    மதுரையில் 5700 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை, குட்கா விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தெற்குவாசல், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற ரவிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 2500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 62), அவரது மகன்கள் செந்தில்குமார் (37), பழனிராஜன் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவனியாபுரம் போலீசார் என்.எஸ்.கே. நகரில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 195 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை தெப்பக்குளம் புதுராம்நாட் ரோட்டைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி பானுமதி. இவர் நேற்று மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பானுமதியை பின்தொடர்ந்தனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பானுமதியை மறித்து கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    தத்தனேரி மெயின் ரோட்டில் உள்ள காமாட்சி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயப் பிரபா (வயது 33). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெயப்பிரபாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    2 சம்பவங்கள் குறித்தும் தெப்பக்குளம், செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே காய்கறி வாங்கச் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலமேடு:

    மதுரை பாலமேடு அருகிலுள்ள கீழச்சின்னாம் பட்டியை சேர்ந்த பால்ராஜ் மனைவி பிச்சையம்மாள் (வயது 65). இவர் பாலமேடு சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். கீழச்சின்னம்பட்டி ரோட்டில் வந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சையம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

    இது தொடர்பாக பிச்சையம்மாள் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்.

    மதுரையில் வயதான தம்பதியிடம் போலீஸ் போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 85). இவரது மனைவி செந்தூர்கனி (80) இவர்களது மகன் துரைராஜ் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள புதுராம்நாட் ரோடு மீனாட்சி நகரில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோசப், செந்தூர் கனி மதுரையில் உள்ள மகன் வீட்டுக்கு வந்த னர். நேற்று காலை இருவரும் தெப்பக்குளம் சித்திவிநாயகர் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வேட்டி அணிந்து நடுத்தர வயதுடைய 2 பேர் அங்கு வந்து தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    பின்னர் இந்த பகுதியில் கொள்ளை, வழிப்பறி அதிகமாக நடந்து வருகிறது. எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். மேலும் செந்தூர்கனி அணிந்திருந்த 6 பவுன் நகை, ஜோசப்பின் ஒரு பவுன் செயினை கொடுங்கள். பேப்பரில் மடித்து தருகிறேன். பத்திரமாக வைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

    இதை நம்பிய வயதான தம்பதி தங்களிடம் இருந்த 7 பவுன் நகையை கழற்றி கொடுத்தனர். அவர்கள் நகையை பேப்பரில் மடித்து கொடுப்பது போல் கூழாங்கற்களை வைத்து கொடுத்துவிட்டு சென்றனர்.

    இதனை அறியாத தம்பதியினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகைக்கு பதிலாக கூழாங்கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்களது மகன் துரைராஜ் தெப்பக் குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மதுரையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்தவர் மணியம்மாள். இவரது மகள் மலர்லட்சுமி (வயது 30). இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷை விட்டு மலர்லட்சுமி பிரிந்து விட்டார்.

    கவுரிசங்கர் என்பவரை 2-வது திருமணம் செய்த மலர் லட்சுமி ராசாக்கூரில் உள்ள குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மலர் லட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    மதுரை:

    கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, கஜா புயல் பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடித்த இரண்டு நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிக்ளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

    புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை டிசம்பர் 6-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

    மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள அப்பன்திருப்பதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 40). இவர் நேற்றிரவு நரிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் நாகேந்திரனை வழிமறித்து பணம்- செல்போனை தருமாறு மிரட்டியது. ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நாகேந்திரனை பட்டா கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது.

    கத்திக்குத்தில் காயமடைந்த நாகேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை நகரில் நாள் தோறும் சர்வ சாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் எந்தவித தயக்கமுமின்றி குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    மதுரை அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர் டவுன் தெருவைச் சேர்ந்தவர் மீனா (வயது 74). இவர் நேற்று அருகில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் உறவினரோடு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மீனாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கஞ்சா விற்ற கணவன் -மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை கீழமாசிவீதி தேரடி அருகே கஞ்சா விற்கப்படுவதாக விளக்குத் தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோமு தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்றதாக கீரைத் துறை மேலதோப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (43), மேலஅனுப்பானடி ஸ்ரீதரன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5500 மற்றும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது.

    கூடல்புதூர் போலீசார் கரிசல்குளம் ராமுனி நகர் பகுதியில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கண்மாய் தெருவைச் சேர்ந்த முத்தையா, அவரது மனைவி மீனா (55) ஆகி யோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.7700 பறிமுதல் செய்யப் பட்டது.

    ×