search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    மதுரையில் கார் விபத்தில் கணினி நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    சென்னை முகப்பேர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கணபதிகவுசிக் (36). கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் காரில் மதுரை வந்தார்.

    தல்லாகுளம் கோகலே ரோட்டில் கார் சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சுவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணபதி கவுசிக்கை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரடைப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தத்தில் உள்ள திரிசூல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந் தவர் சரவணன் என்ற தூள் சரவணன் (வயது 46). இவரை கொலை வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய புரம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறை யில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களாகவே சரவணனுக்கு உடல்நலக் குறைவு இருந்ததாக தெரி கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிறைத் துறை போலீசார் அவரை சிறையில் உள்ள ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    அங்கு நிலைமை மோச மானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று சரவணன் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.

    இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    மதுரையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை 3 பேர் பறித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜூ (வயது65). இவர் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ராஜூ மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டார்.

    அப்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் இருவரும் டீக்குடித்தனர். அங்கு வந்த 3 வாலிபர்கள் அவர்களிடம் முகவரி கேட்டு விட்டு சென்றனர்.

    டீக்குடித்த பின் கணவன்- மனைவி இருவரும் மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டனர். சிப்கோ அருகே சென்றபோது முகவரி கேட்ட 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து ராஜூவின் மனைவி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்-சிவகங்கை-மதுரையில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உள்பட 4 பேர் பலியானார்கள். #Swineflu #Dengue

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அண்ணாநகர் வீதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 62) வியாபாரி. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜோசப்புக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று ஜோசப் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் மகன் யோகேஸ்வரன் (வயது 18). விருதுநகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், காய்ச்சலால் அவதிப்பட்டார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் யோகேஸ்வரன் இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத் திரியில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு மட்டும் 16 பேர் பலியாகி உள்ளனர். இது தவிர, வைரஸ் காய்ச்சலுக்கு 121 பேரும், பன்றி காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உள்பட 21 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பால் ராஜ் மனைவி ஜீவா (48) என்பவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

    சிவகங்கை பாரதியார் நகரைச் சேர்ந்த ஜெகநாதன் (60) என்பவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலியானான். #Swineflu #Dengue

    மதுரை:

    விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆதி குரு. இவரது மகன் ஆதி சங்கர் (வயது12). மன வளர்ச்சி குன்றிய சிறுவன் ஆதிசங்கர் கடந்த 10 நாட் களாக காய்ச்சலால் அவதிப்பட்டான்.

    மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அதிசங்கருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஆதிசங்கர் பரிதாபமாக இறந்தான்.

    பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேருக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu #Dengue

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார். #Swineflu #Dengue

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் பழனி (வயது 54). தொழிலாளி. சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழனியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் பழனிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. தனி வார்டில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த பழனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உள்பட 21 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராமாயணம் புராணத்தில் வரும் நிகழ்வுகள் நடந்த இடங்களை பார்வையிட செல்லும் சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து வரும் 14-ந்தேதி புறப்படுகிறது. #RamayanaYatra #IRCTC
    சென்னை:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) தென்மண்டல கூடுதல் பொதுமேலாளர் எல்.ரவிக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும் வகையில் ‘ராமாயண யாத்திரை’ க்கான சிறப்பு ரெயில், வரும் 14-ந்தேதி (புதன்கிழமை) மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்டிரல், ஹம்பி, நாசிக், சித்திரைக்கூடம், அயோத்தியா நந்திகிராமம் வழியாக சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரிக்கு (நேபாளம்) செல்கிறது. பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் வழியாக மீண்டும் மதுரையை வந்தடைகிறது. 15 நாட்கள் கொண்ட இந்த யாத்திரை செல்ல ஒருவருக்கு கட்டணம் ரூ.15 ஆயிரத்து 830 ஆகும்.



    இதேபோல், மதுரையில் இருந்து டிசம்பர் 2-ந்தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரெயில் ஐதராபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை மற்றும் கோவாவுக்கு இயக்கப்படுகிறது. 10 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.10 ஆயிரத்து 100 கட்டணமாகும். மதுரையில் இருந்து டிசம்பர் 14-ந்தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரெயில் விழுப்புரம், எழும்பூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக கோவாவுக்கு செல்கிறது. 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 725 கட்டணமாகும்.

    இதேநாளில் புறப்படும் மற்றொரு சுற்றுலா ரெயில் எழும்பூர் வழியாக கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், தர்மசாலா மஞ்சுநாதர் மற்றும் குக்கே சுப்பிரமணியா உள்ளிட்ட கோவில்களை தரிசனம் செய்யலாம். 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.6 ஆயிரத்து 930 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா கட்டணத்தில் ரெயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் தென்மண்டல துணை மேலாளர் பிரபாகர் உடனிருந்தார். #RamayanaYatra #IRCTC
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் வைரஸ், டெங்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

    பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாக்டர்களின் கண்காணிப்பில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 49). கட்டிட தொழிலாளி. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாண்டியராஜன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அங்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாண்டியராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பேட்டைத்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி முத்துசெல்வி (32). பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முத்துசெல்வி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள 10 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதே போல் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 120 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள். #Swineflu #Dengue

    மதுரை அருகே பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி பொன்னி நகரைச் சேர்ந்த கருப்பையா மனைவி சாந்தி (வயது 48). இவர் நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மதுரை- சிவகங்கை ரோட்டில் கருப்பாயூரணி மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    இது தெடர்பாக காந்தி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    மதுரையில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல், வைகை தென்கரையைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). மொபைல் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை வைகை கரையோரம் இரவில் நிறுத்துவது வழக்கம். அந்தப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் இதே போல் மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஒரு வாலிபர் 3 மோட்டார் சைக்கிள்களின் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

    இதனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். திலகர் திடல் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தவர் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    கூடல்புதூரில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை கூடல்புதூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 61), மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் கடந்த 27-ந் தேதி மனைவி சரஸ்வதியுடன், உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாட்கள் தங்கிவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த 15 பவுன் நகைகள், 340 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×