search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஹாசினி"

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி - அனேகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கீ' படத்தின் விமர்சனம். #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
    கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.

    பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.



    இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது. 

    இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.

    இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.



    கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.

    ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.

    கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.



    சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `கீ' சாவி. #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி, அனைகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராய் சேவியர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’. 

    ஜீவா நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - அனிஷ் தருண் குமார், படத்தொகுப்பு - நாகூரான், தயாரிப்பு - எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை - அசோக், நடனம்- பாபா பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.



    செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி காலீஸ் கூறும்போது,

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக காலீஸ் கூறினார்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    கீ டிரைலர்:

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள கீ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்பதே கீ என்பதன் பொருள் என்று ஜீவா கூறினார். #KEE
    ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் 12-ந் தேதி வெளியாக இருக்கிறது. காலீஸ் இயக்கிய இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜீவா அளித்த பேட்டி:

    பெயரை பார்த்தால் ஆங்கில படம் போல் தெரிகிறதே?

    கீ என்பது தமிழ் வார்த்தை தான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இருக்கும். இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது. எனக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி எனக்கு நண்பராக வருகிறார்.

    கல்லூரி மாணவர் வேடமா?

    எனக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் நன்றாக வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவராக நடிப்பது எளிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு வி‌ஷயங்கள் தெரிகிறது. எனவே இனி கல்லூரி மாணவராக நடிப்பது சிரமம். இந்த படத்தில் ஜாலியான ஹேக்கராக வருகிறேன். கல்லூரி மாணவருக்கே உரிய அனைத்து வி‌ஷயங்களும் என் கதாபாத்திரத்தில் இருக்கும்.



    உங்கள் சமூகவலைதள கணக்குகள் ஹேக் ஆகி இருக்கிறதா?

    நிறைய முறை ஆகி இருக்கிறது. எந்த பாஸ்வேர்டு வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இன்று இணைய திருடர்கள் அதிகரித்து விட்டார்கள். இனி இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    இரும்புத்திரை படமும் இதே போன்றது தானே?

    இல்லை. நாங்கள் படப்பிடிப்பையே முடித்த பின்னர்தான் அவர்கள் பூஜை போட்டார்கள். அந்த கதை முழுக்க பணம், வங்கி, ஏடிஎம் கார்டு பற்றியது. ஆனால் இது முழுக்க சமூகவலை தளங்களில் நீங்கள் இடும் லைக்குகள், கமெண்டுகள் பற்றியது.

    ரிலீஸ் நேரத்தில் சிக்கல், பட வெளியீடு தாமதம் என்று ஹீரோக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறதே?

    ஆமாம். கீ படமே பெரிய தாமதத்துக்கு பின் தான் ரிலீஸ் ஆகிறது. இங்கே ஹீரோவாக இருப்பது சிரமமாக தான் இருக்கிறது. காமெடி, குணச்சித்திர நடிகராக இருப்பது எளிது. ஹீரோவாக இருப்பதால் மற்றவர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. சினிமா என்பது டீம் வொர்க். யாராவது ஒருவர் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது எல்லோரையும் பாதிக்கும்.

    ஒரு படத்தில் கமிட் ஆனால் அதை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கு முன் தயாரிப்பு பணிகளில் திட்டமிடல் மிகவும் அவசியம். #KEE #Jiiva #NikkiGalrani

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். #KEE #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘கீ’.

    இந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.



    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார். 

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாகவே நடிச்சிட்டுப் போகட்டும் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Rajini #Kamal
    சுகாசினி தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கிறார். மற்றபடி கணவர் மணிரத்னத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் `16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்களிலும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய வி‌ஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கு.

    கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோ‌ஷமாதான் இருக்கு. கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.



    மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்களை பார்த்து சந்தோ‌ஷமா இருக்கு.

    அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே...’ என்று பதில் அளித்திருக்கிறார்.
    'அபியும் அனுவும்' படத்தில் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் புதுமையான காதல் கதையில் நடித்தது பேரின்பம் என்று நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். #AbhiyumAnuvum #TovinoThomas
    'சரிகம இந்தியா லிமிடெட்' சார்பில் யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'அபியும் அனுவும்'. பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நாயகனாகவும், பியா பாஜ்பாய் நாயகியாகவும், நடித்துள்ளனர். சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    படம் குறித்து நாயகன் டோவினோ தாமஸ் கூறும்போது,

    தமிழ் ரசிகர்கள் அபியும் அனுவும் படம் என்னுடைய முதல் படம் என தெரிந்ததும், என்னை சிறப்பாக உணர வைத்துள்ளார்கள். அவர்களின் அன்பும், நல்ல மனதும், பெருந்தன்மையும் என்னை மேலும் பொறுப்புடையவனாக உணர வைப்பதோடு, அவர்கள் விரும்பும் விஷயங்களை கொடுக்க வேண்டும் என்று என்னை உந்துகிறது.



    இந்த படத்தில் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமியோடு வேலை செய்தது ஒரு உண்மையான பேரின்பம். அவர் கதை நடக்கும் பின்புலத்தை அமைத்த விதமும், ஒளிப்பதிவாளர் அகிலன் அவருடைய ஐடியாவை திரையில் மாற்றிய விதமும் எல்லோராலும் பாராட்டக்கூடியது.

    நடிகை பியா பாஜ்பாய் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாகவும், வேடிக்கையாகவும் இருப்பார், ஆனால் கேமராவுக்கு முன்னால் அவருடைய மாற்றம் நம்ப முடியாதது என்றார். #AbhiyumAnuvum #TovinoThomas

    ×