என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காம்பீர்"
புதுடெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கிழக்கு டெல்லி எம்.பி. தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதிஷியும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங் லல்வியும் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கூறி இருந்தார். காம்பீர் வினியோகித்த துண்டு பிரசுரத்தில் தன்னை பற்றி மோசமாக அவதூறு பரப்பப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
காம்பீர் சார்பில் வெளியிடப்பட்ட லட்சக் கணக்கான துண்டு பிரசுரத்தில் தனது ஒழுக்கம் குறித்து மோசமான வகையில் அவதூறு வார்த்தையுடன் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிஷி கண்ணீர் மல்க தெரிவித்தார். இத்தகைய எண்ணத்துடன் கூடிய காம்பீர் வெற்றி பெற்றால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார் என்று காம்பீர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினருக்கு நான் சவால் விடுகிறேன். துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறாரா?
இவ்வாறு காம்பீர் கூறினார்.
மேலும் தன் மீது அவதூறு கூறியது தொடர்பாக அவர் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
டெல்லி தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே அங்கு 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய பா.ஜனதா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பா.ஜனதா இன்னமும் வேட்பாளர்களை தேர்வு செய்யாமல் உள்ளது. காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி வேட்பாளர்களை பொறுத்து புதுமுகங்களை களம் இறக்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா தலைவர்கள் வாய்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி கொண்ட 31 வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மாநில பா.ஜனதா தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் கவுதம் காம்பீர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
புதுடெல்லி தொகுதியில் கவுதம் காம்பீரை போட்டியிட வைக்கலாம் என்று மாநில பா.ஜனதா தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மீனாட்சி லேகி வெற்றி பெற்றார். அவருக்கு பதில் இந்த தடவை காம்பீர் களம் இறங்க உள்ளார்.
காம்பீர் பெயருடன் மேலும் 2 பேர் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளனர்.
புதுடெல்லி தொகுதி தவிர வடக்கு மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக், தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட உள்ளது. #GautamGambhir
புதுடெல்லி:
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.
இதேபோல அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.
ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பா.ஜனதா அரசு மீது அதிருப்தி நிலவுகிறது.
இந்த அதிருப்தியை சமாளிக்க பா.ஜனதா புதிய வியூகத்தை அமைத்து வருகிறது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, காம்பீர் ஆகிய 2 பேரையும் நட்சத்திர பிரச்சாரகர்களாக நியமிக்க பா.ஜனதா தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதேநேரம் இந்த 2 பேரையும் பா.ஜனதா சார்பில் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் வேட்பாளர்களாக களம் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலில் போட்டியிட டோனி தயங்கி வருவதால் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருப்பதால் தமிழ் நாட்டில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே டோனியை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழ் நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சி மேலிடம் கருதுகிறது. #Dhoni #Gambhir #BJP
அதிரடியாக விளையாடியதால் அவரை சேவாக்குடனும், இளம் வயதிலேயே செஞ்சூரி அடித்ததால் சச்சின் தெண்டுல்கருடனும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சேவாக் உடன் பிரித்வி ஷாவை ஒப்பிடும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்ய வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘பிரித்வி ஷாவை சேவாக்குடன் யார் ஒப்பிடு செய்தாலும் அதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செயய வேண்டும். இறுதியாக ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. பிரித்வி ஷா தற்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கியுள்ளார். அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. நான் ஒருபோதும் ஒப்பிடை நம்புவதில்லை.
பிரித்வி ஷா தனிப்பட்ட திறமையை பெற்றுள்ளார். அதேபோல் சேவாக் அவரது திறமையை பெற்றுள்ளார். பிரித்வி ஷா தற்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளார். சேவாக்கை போன்றோர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
பிரித்வி ஷா தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சிறந்த முறையில் தொடங்கியுள்ளார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது’’ என்றார்.
இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதர்வா (177), பவன் ஷா ஆகியோரின் அபார சதத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. பவன் ஷா 177 ரன்னுடனும், வதேரா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பவன் ஷா இரட்டை சதம் அடித்ததன் உடன் 282 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்தது.
282 ரன்கள் குவித்த பவன் ஷா, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான விளையாட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் டேன்மே ஸ்ரீவாஸ்தவா பாகிஸ்தானுக்கு எதிராக 220 ரன்களும், கவுதம் காம்பீர் இங்கிலாந்திற்கு எதிராக 212 ரன்களும், புஜாரா இங்கிலாந்துக்கு எதிராக 211 ரன்களும், அபிநவ் முகுந்த் இலங்கைக்கு எதிராக 205 ரன்களும் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
தற்போது இவர்கள் அனைவரையும் பவன் ஷா முந்தியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்