search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைநீக்கம்"

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் நுவான் ஜோய்சா, அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோர் சூதாட்ட புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    துபாய்:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பேட்ஸ்மேன் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் லீக் போட்டியில் பங்கேற்ற அவர்கள் இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான புகார் என்ன? என்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

    தங்கள் மீதான புகாருக்கு 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி இருவரும் உத்தரவிடப்பட்டுள்ளது. நுவான் ஜோய்சா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சூதாட்ட புகார் காரணமாக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரம்பலூரில் பெண்ணை அடித்து உதைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.#DMK 
    சர்வதேச டென்னிஸ் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு சீனாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாயை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. #PengShuai
    லண்டன்:

    சீனாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய். 2013-ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் 2014-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெங் சூவாய் தற்போது உலக தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 20-வது இடத்திலும், ஒற்றையர் பிரிவில் 80-வது இடத்திலும் உள்ளார்.

    கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் விளையாடிய பெங் சூவாய், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் தன்னுடன் இணைந்து விளையாடும் வீராங்கனையின் பெயரை போட்டி அமைப்பாளர்களிடம் தெரிவித்து இருந்த பெங் சூவாய், கடைசி நேரத்தில் தன்னுடன் இணைந்து விளையாட சம்மதித்து இருந்த வீராங்கனையை கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சித்துள்ளார். ஜோடி வீராங்கனை மறுத்ததால் போட்டியில் இருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். ஆதாயம் பெறும் நோக்கில் பெங் சூவாய் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த செயல் விளையாட்டு ஊழல் தடுப்பு விதிமுறைக்கு எதிரானதாகும்.

    இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச டென்னிஸ் சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு பெங் சூவாயை 6 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை காலத்தில் அவர் முதல் 3 மாதங்களில் எந்தவித விதிமுறை மீறலிலும் ஈடுபடாமல் இருந்தால், அவரது தடை காலம் 3 மாதமாக குறைக்கப்படும். அதாவது அவர் வருகிற நவம்பர் 8-ந் தேதி முதல் மீண்டும் களம் திரும்பலாம். #PengShuai
    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.



    இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

    இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.

    இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவிஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து விஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.

    உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு விஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும். ராகுல் ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முறையாக பணி செய்யாத 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UttarPradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பால் மற்றும் பிரதாப்கர் பகுதியில் காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் பரத்வாஜ், சந்தோஷ் குமார் சிங் ஆகிய இருவரும் ஒழுங்காக பணி செய்வது இல்லை எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு  டி.ஜி.பி ஓ.பி.சிங் பரிந்துரை செய்தார்.

    இந்த பரிந்துரை தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அந்த இரண்டு காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு பதிலாக சம்பால் பகுதியில் யமுனா பிரசாத்தையும், மற்றும் பிரதாப்கர் பகுதிக்கு தேவ் ரஞ்சன் வெர்மாவையும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 அதிகாரிகளும், அவர்களது பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. #UttarPradesh #YogiAdityanath
    ‘நான் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து அப்பீல் செய்வேன்’ என்று இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு தெரிவித்தார். #weightlifting #SanjitaChanu
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதலில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரை சேர்ந்த சஞ்சிதா சானு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இந்த நிலையில் சஞ்சிதா சானுவிடம் போட்டி இல்லாத நேரத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததாகவும், இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தான் சஞ்சிதா சானு தோல்வி அடைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் அப்பாவி. எந்தவித தவறும் செய்யவில்லை. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எதுவும் நான் எடுத்து கொள்ளவில்லை. என்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் ஆதரவுடன் அப்பீல் செய்வேன்’ என்று தெரிவித்தார். #commonwealthgames2018 #weightlifting #SanjitaChanu
    ×