search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம்"

    அசாமில் சென்ற இன்டர்சிட்டி ரெயிலில் திடீரென குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. #AssamExplosion #IntercityExpressExplosion
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள காமக்யா ரெயில் நிலையத்தில் இருந்து டெகர்கோன் ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி பயணிகள் ரெயில் சென்று வருகிறது.

    இந்நிலையில், காமக்யா - டெகர்கோன் இன்டர்சிட்டி ரெயில் இன்று வழக்கம்போல் புறப்பட்டது. இந்த ரெயில் உதால்குரி என்ற பகுதியை இரவு 7.05 மணிக்கு வந்தடைந்தது.

    அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த 11 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #AssamExplosion #IntercityExpressExplosion
    மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, அசாமில் இன்று 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. #CitizenshipBill #AssamProtest #AASU
    கவுகாத்தி:

    மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 46 அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் 23-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.



    இந்நிலையில் அசாம் மாணவர் அமைப்பான ஏஏஎஸ்யு மற்றும் 28 அமைப்புகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. கவுகாத்தியின் கணேஷ்குரியில் இருந்து திஸ்பூர் வரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். #CitizenshipBill #AssamProtest #AASU
    அசாம் மாநிலத்தில் உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ULFAAttack
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெரோனி பகுதியில் தோலா - சாடியா பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகில் இன்று இரவு 8.15 மணிக்கு உல்பா பயங்கரவாதிகள் திடீரென திரண்டனர்.

    அங்கிருந்த ஒரு வீட்டில் உள்ளவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், அருகிலுள்ள வீட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 பேர் பலியாகினர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றினர்.

    உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதை அறிந்த முதல் மந்திரி சர்பானந்த சோனாவால் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #ULFAAttack
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
    கவுகாத்தி:

    உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. அதில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அந்த வகையில் 91-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்திய அளவில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், சிறந்த வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் அசாமிய திரைப்படம் `வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அசாம் மாநில அரசு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அசாம் அமைச்சரவையில் தீர்மானம் போடப்பட்டு, வில்லேஜ் ராக்ஸ்டார் படத்துக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், படத்தின் இயக்குனருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 

    ரீமா தாஸ் இயக்கிய இத்திரைப்படம் ஏற்கனவே இந்தாண்டுக்கான தேசிய விருதினை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Oscars91 #Oscars2019 #VillageRockstars
    அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூர்வாசிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் 11 ஆயிரம் வோல்ட் மின் அழுத்தம் பாயும் உயர் மின் அழுத்தக்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. மின்சாரம் பாய்வதால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து, மின்சாரம் தடை செய்யப்பட்டது என நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 78 பேர் குளத்தில் மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென அந்த மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து குளத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

    அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல் மந்திரி சர்பனந்தா சோனோவால், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். #Assam
    அசாம் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் 11 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    சிறுமியை பாலியல் வன்புணர்வு கொலை செய்தது தொடர்பாக நடத்தப்பட்ட நீதிவிசாரணையில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர 5 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Assam
    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AssamBoatAccident
    கவுகாத்தி:

    அசாமம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா ஆற்றில் கவுகாத்தியில் இருந்து மத்திய கந்தாவிற்கு 45 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் அசாம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்திற்குள்ளான படகில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்தாகவும், இந்த விபத்தில் 20 பேர் பலியானதாகவும்  கூறப்படுகிறது.

    இந்தியாவின் மிகப் பெரிய ஆறான பிரம்மபுத்திரா அசாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AssamBoatAccident
    அசாம் மாநிலத்தைப் போல், எல்லா மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #HomeMinistry #NRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த மாநிலத்தின் உண்மையான குடிமக்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் இறுதி வரைவு பதிவேடு, சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.



    அதில், அம்மாநிலத்தைச் சேர்ந்த 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு இருக்கிறது. உண்மையான நபர்களின் பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும், பெயர் நீக்கம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, இந்த கணக்கெடுப்பு தொடங்கிய 2015-ம் ஆண்டில் இருந்து, அசாம் மாநிலத்தில் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும், பூர்வகுடிக்கான ஆதாரம் இல்லாத ஏராளமானோர் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவர்கள் கட்டுமான பணிக்கு ஆட்கள் தேவைப்படும் ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் சென்று இருப்பதாக அத்தகவல்கள் கூறுகின்றன.

    இதை கருத்தில் கொண்டு, அசாமைப் போல், எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை நடத்துவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    இதுபற்றி அந்த அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறுகையில், “இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதில் சிரமம் இருக்காது. இருப்பினும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தன.  #HomeMinistry #NRC
    அசாம் மாநிலம் பிஸ்வந்த் மாவட்டத்தில் பசுவை கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #MobLynching #Assam
    திஸ்பூர்:

    இந்தியாவில் சமீபத்தில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற பல்வேறு  வதந்திகளால் ஏற்படும் விளைவுகள் உயிர்பலி வாங்குவதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    இந்நிலையில், அசாம் மாநிலம் பிஸ்வந்த் கிராமத்தில் பசு கடத்தியதாக 4 பேர் மீது அப்பகுதி மக்கள் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சங்கட் டண்டி என்பவருக்கு சொந்தமான 2 மாடுகளை 4 பேர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், அதனை பார்த்த சங்கட், கூச்சலிட்டபோது ஊர்மக்கள் அந்த கும்பலை வழிமறைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான திபென் ராஜ்போங்ஸ்கி என்பவர் உயிரிழந்தார். மேலும், புஜன் காடோவர், புல்சந்த் சாஹு, பிஜோய் நாயக், ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பசுக்களை கடத்தியதாக 4 பேர் மீதும், கும்பல் தாக்குதலுக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குற்றங்கள் எத்தகையதாக இருந்தாலும், அதற்கு மக்கள் தண்டனை கொடுப்பதும், சட்டத்தை கையில் எடுப்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தவிர்க்கப்படும்போதே இதுபோன்ற சம்பவங்களை முற்றிலுமாக தடுக்க முடியும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். #MobLynching #Assam
    அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக அசாம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. #NRCBill #TMC
    கொல்கத்தா:

    அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டும் வருகின்றனர்.



    இதையடுத்து, அசாம் மாநிலத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சென்ற போது, விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும், மாநிலத்துக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மக்களவையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நாளை (4.8.18) கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும், இந்த விவகாரத்தை கண்டித்து, ஞாயிறு அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் மேற்கு வங்காள மந்திரி பர்தா சட்டர்ஜீ தெரிவித்துள்ளார். #NRCBill #TMC
    அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர்.  சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போரை விளைவிக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து ராய் உள்பட 8 பேர் கச்சார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

    ஆனால், அங்கு தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,  மக்களை சந்திக்க செல்வது எங்களின் ஜனநாயக கடமை. விமான நிலையத்தில் எங்கள் குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்தால் இங்கு சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது போல் தெரிகிறது என ஆவேசமாக பேசினார். #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    அசாம் மாநிலத்துக்கான தேசிய குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் இந்தியர்களின் பெயர் விடுவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஊடுருவி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக குடியேறிய அவர்கள் மோசடி செய்து இவ்வாறு குடியுரிமை பெற்றதாக புகார் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உண்மையான அசாம் மக்கள் யார், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    அதில் 40 லட்சம் பேர் இந்தியர் அல்லாதவர் என்று காட்டப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் வெளிநாட்டினராக கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெறாதவர்கள் பலர் காலம் காலமாய் அசாமை சேர்ந்தவர்களாவார். ஆனாலும் அவர்கள் பெயரும் இடம்பெறவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் பெயரும் விடுபட்டுள்ளது.

    இந்த பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடிதான் இதற்கு காரணம் என்று புகார் கூறப்படுகிறது. 40 லட்சம் பெயர் பட்டியலில் இல்லை என்பதால் அங்கு வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    இதுசம்பந்தமாக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த பட்டியல் சம்பந்தமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய குடியுரிமை பட்டியல் வெளியீடு தொடர்பாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. உண்மையான இந்திய குடிமகன்கள் பலருடைய பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன்மூலம் அங்கு ஒரு அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பட்டியல் தயாரிப்பதற்காக ரூ.1200 கோடி செலவிட்டுள்ள நிலையில் அது சரியாக செய்யப்படவில்லை.

    மெத்தன போக்கில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மிக முக்கியமான விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அரசு முயற்சிக்க வேண்டும்.

    எங்கள் ஆட்சியில் மன்மோகன்சிங் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள அம்சங்கள் பலவும் நீக்கப்பட்டு தவறான நோக்கத்தோடு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #AssamNRC #RahulGandhi #Congress
    ×