என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாஜ்பாய்"
மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:
“குஜராத்தில் 2002-ல் மதக்கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.
கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.”
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று காலை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, பாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் பங்கேற்றனர்.
நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் வாஜ்பாய். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானது குறிப்பிடத்தக்கது. #AtalBihariVajpayee #VajpayeePortrait
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் பகுதியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர்கள் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள பாஜக அலுவலகங்களிலும் வாஜ்பாய் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. #VajpayeeBirthday #Modi #AtalBihariVajpayee
மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.
அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.
பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது. அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1992-ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்திருந்தது.
திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.
பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.
இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.
தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.
தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.
மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-8-2018 அன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய ஆறுகளில் கரைக்கப்பட்டது.
அவரது 94-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு அவரது புகழுக்கு இந்திய அரசின் சார்பில் மணிமகுடம் சூட்டினார்.
இந்நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அமரர் வாஜ்பாய் தொடர்பான நினைவுகளையும் அவரது தனிச்சிறப்புகளையும் குறிப்பிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர். #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
அவரது நினைவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று டெல்லியில் நடந்தது.
100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது:-
வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
வாஜ்பாய் உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. அவரது சேவையை என்றென்றும் நாம் நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண்ஜெட்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vajpayee #PMModi
புதுடெல்லி:
மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது.
வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட தற்போது மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டு இருக்கும். அவரது உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும்.
அதன் அருகில் வாஜ்பாய் வாழ்ந்த காலமான 1924-2018 என்றும் பொறிக்கப்பட உள்ளது. இந்த வடிவமைப்புக்கான வேலைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.
நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டு இருக்கும்.
அதற்கு கீழ் ரூ.100 என்று பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த புதிய நாணயத்தை விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. #Vajpayee
மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார், பீகார் எம்பிக்கள் போலா சிங், மவுலானா அஸ்ரருல் ஹக், கேரள எம்பி எம்.ஐ.ஷாநவாஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்த மாதம் 8-ந் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. #WinterSession #ParliamentSession
மத்தியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சிக்காலத்தில் நிலக்கரித்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர் திலிப் ரே.
இந்நிலையில், ரூர்கேலா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும், இந்த முடிவு தனக்கு வேதனை அளிப்பதாகவும் திலிப் ரே தெரிவித்துள்ளார். #DilipRay #DilipRayresigns #RourkelaMLA #quitsBJP
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்கத் தான் என்று ராஜபக்சே கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது. கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பா.ஜ.க.வினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி.மு.க.வினர் இன்றைக்கு வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை.
1980-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். பா.ஜ.க. ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலைப் புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றிக் கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி.மு.க.வினர் என்பதை உலகறியும்.
நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளை மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களின் தூண்டுதலாலும், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பா.ஜ.க. புகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Karunanidhi #MKStalin #DMK #Katchatheevu
மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி செலுத்தும் கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா மந்திரிகளான பிரிஜி மோகன் (வேளாண்மை துறை), அஜய் சந்திரசேகர் (சுகாதாரத்துறை) ஆகியேர் ஒருவருக்கொருவர் சிரித்து பேசி கொண்டு இருந்தனர். அருகே இருந்த மற்றொரு மந்திரியும், மாநில பா.ஜனதா தலைவருமான தர்மலால் கவுசிக் அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வாஜ்பாய் நினைவு கூட்டத்தில் 2 மந்திரிகள் சிரித்து பேசிய அந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த நிலையில் வாஜ்பாய் அஞ்சலி கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சத்தீஷ்கர் மாநில பா.ஜனதா மந்திரிகள் இருவரையும் நீக்க வேண்டும் என்று வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நினைவு கூட்டத்தில் சிரித்து பேசிக் கொண்டிருந்தன் மூலம் பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயை 2 மந்திரிகளும் அவமதித்து விட்டனர். அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் சிரிப்பது மிகவும் அவமான ஒன்றாகும். வாஜ்பாய்க்கு அவமரியாதை ஏற்படுத்திய அந்த 2 மந்திரிகளையும் உடனடியாக டிஸ்மிஸ் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மீது கருணா சுக்லா ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.
கருணா சுக்லா முதலில் பா.ஜனதாவில் இருந்தார். 2013-ல் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். #Vajpayee #KarunaShukla #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்