search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    டெல்லி பா.ஜ.க. அலுவலத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்குவெளிநாட்டு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    புதுடெல்லி:

    டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டடுள்ளது. அங்கு ஏராளமானோர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.



    பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சக், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய், நேபாள நாட்டு வெளியுறவு துறை மந்திரி கியாவல், இலங்கை வெளியுறவு துறை மந்திரி (பொறுப்பு) லக்‌ஷ்மண் கிரியெல்லா, வங்காளதேசம் நாட்டின் வெளியுறவு துறை மந்திரி அப்துல் ஹசன் மஹ்மூத் அலி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சட்டத்துறை மந்திரி அலி சபார் உள்பட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு டெல்லியில் உள்ள அவரது இல்லம் மற்றும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, இறுதி ஊர்வலம் தொடங்கியது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் நேற்று இரவே டெல்லி கிருஷ்ண மேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.

    கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர்மல்க வாஜ்பாய்க்கு பிரியாவிடை கொடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.



    இறுதி ஊர்வலம் தீன் தயாள் உபாத்யாய் மார்க், பகதூர் ஷா ஜபார் மார்க், டெல்லி கேட், நேதாஜி சுபாஷ் மார்க், சாந்தி வேன் வழியாக ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தை அடைந்ததும், வாஜ்பாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee

    திருப்பூர்:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூர் - தாராபுரம் ரோடு, திருப்பூர் - அவினாசி ரோடு, பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. டீக்கடை, பேக்கரி கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பின்னலாடை நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தொழிலாளர்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் பகுதிகள் வெறிச்சோடியது. தொழிலாளர்கள் விடுமுறை காரணமாக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    பல்லடத்தில் என்.ஜி.ஆர். சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருப்பூரில் பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் வாஜ்பாய் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

     


    இதையொட்டி இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், கவுண்டம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், ஆலாந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

    சூலூர் உள்ளிட்ட சில இடங்களில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், ஆவின் பூத்கள் வழக்கம்போல திறந்திருந்தன.

    மாநகரில் சிங்காநல்லூர், காந்திபுரம், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில இடங்களில் கடைகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கபட்டு இருந்தன. ஒரு சில பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயங்கின. ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik
    பெங்களூர்:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். அவரது உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.



    வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெங்களூர் மராத்தாஹள்ளியில் உள்ள வக்தேவி விலாஸ் கல்வி நிறுவன வளாகத்தில் வாஜ்பாயின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார்.  அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee  #SudarsanPattnaik #SudarsanSand
    தான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் வாஜ்பாய் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    புதுடெல்லி:

    மறைந்த வாஜ்பாய் கட்சி மாறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களிடமும் அன்பாக பழகியதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன. வேறு கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்த உதவிகளை வாஜ்பாய் ஒரு போதும் மறந்தது இல்லை.

    அவரது சுயசரிதை புத்தகமான “த அன்டோடு வாஜ்பாய்” என்ற புத்தகத்தில் அவர் தனக்கு உதவி செய்த மறக்க முடியாத தலைவர்களை பட்டியலிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்திக்கு முதலிடம் கொடுத்துள்ளார்.

    நான் உயிரோடு இருப்பதற்கு ராஜீவ்காந்திதான் காரணம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறி உள்ளார். ராஜீவ்காந்தியை புகழ்ந்து அந்த புத்தகத்தில் வாஜ்பாய் கூறி இருப்பதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. என்னை பரிசோதித்த டாக்டர்கள் சிறுநீரக பாதிப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.

    வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால்தான் அந்த சிறுநீரக பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். நான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    ஒருநாள் காலை பிரதமர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ராஜீவ்காந்தி பேசினார். அவர் என்னிடம் இந்தியா சார்பில் நியூயார்க் சென்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன். என்னுடன் அரசியல் கட்சிகள், அதிகாரிகள் குழுவும் வர உள்ளது. நான் அந்த குழுவில் உங்களது பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.

    நீங்கள் என்னுடன் நியூயார்க் வாருங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து உங்களது சிறுநீரக பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றார்.


    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழுவில் இடம் பெற்று நானும் சென்றேன். ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதும் ராஜீவ்காந்தி என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

    “நீங்கள் நன்றாக முழுமையாக குணம் அடைந்த பிறகுதான் இந்தியாவுக்கு திரும்பி வரவேண்டும். நல்ல முறையில் சிகிச்சை பெற்று வாருங்கள்” என்றார். அவர் உதவியால் நான் பெற்ற சிகிச்சைதான் இன்று என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

    இவ்வாறு வாஜ்பாய் மறக்காமல் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்து எழுதி உள்ளார். #AtalBihariVajpayee #RIPAtalBihariVajpayee
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அவரது வீட்டில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) நேற்று டெல்லியில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான அவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

    வாஜ்பாயின் உடல் டெல்லி கிருஷ்ணாமேனன் பார்க்கில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரிகள், பல்வேறு மாநில முதல்வர் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்த அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



    காலை 10 மணியளவில் வாஜ்பாய் உடல் அவரது வீட்டில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் டெல்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என சுமார் 60 ஆயிரம் பேர் கட்சி அலுவலகத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து மதியம் 1 மணிக்கு வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ராஷ்ட்ரீய ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின்னர் முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழக அரசு சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  #AtalBihariVajpayee #RIPVajpayee 
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ நிருபர்களிடம் பேசுகையில், மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய் என குறிப்பிட்டார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் வாஜ்பாய் குறித்த நினைவலைகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:-

    என் மீதும் தமிழ் மீதும் அதிக பாசம் வைத்திருந்தவர்  வாஜ்பாய். தந்தை போன்று என் மீது அன்பு வைத்திருந்தவர். நான் டெல்லி  செல்லும்போதெல்லாம் அவரது வீட்டிற்குச் செல்வேன்.



    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். மதச்சார்பின்மையை பாதுகாத்தவர் வாஜ்பாய்.  கூட்டணி ஆட்சி எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார்.

    இவ்வாறு வைகோ கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee #Vaiko
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தினார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று டெல்லியில்  காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான அவரது மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வாஜ்பாய் இல்லத்திற்கு வந்து, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லம்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi
    வாஜ்பாய் மறைவால் ஆறுதல் பெற முடியாமல் தவிப்பதாக டெல்லியில் அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வந்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லி சென்று வாஜ்பாய் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டங்களின் நாயகன் வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார்.

    ‘நாட்டை வல்லரசாக்குவதற்கு பிள்ளையர் சுழி போட்டவர் வாஜ்பாய். பன்முகத்தன்மை கொண்ட வாஜ்பாய் போன்ற தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா என தெரியவில்லை. அவருக்கு அஞ்சலி செலுத்தியபோதும், ஆறுதல் பெற முடியாமல் தவிக்கிறோம்’ என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #AtalBihariVajpayee #RIPVajpayee
    உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
    இஸ்லாமாபாத்:

    பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் ஞானம் பெற்ற தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    இவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளை முன்னாள் பிரதமருக்கு உரிய மரியாதைகளுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தெரிவித்த இரங்கல் செய்தியில், இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்கு மகத்துவமானது என்றும், சார்க் கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவருமான வாஜ்பாயின் மறைவு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேலும், பாகிஸ்தான் அரசும் மக்களும், வாஜ்பாயை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee #PakistanGovt
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, வாஜ்பாய் மறைவுக்கு 1 வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

    மேலும், டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களும் அவரது மறைவை ஒட்டி, அரசு விடுமுறையை அறிவித்தன. இந்நிலையில் இதேபோல், தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை எனவும், அவரது மறைவுக்காக 1 வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  #AtalBihariVajpayee #RIPVajpayee
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்தது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    முன்னாள் பிரதமரான பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  #AtalBihariVajpayee #RIPVajpayee
    ×