search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    சென்னை:

    பாஜகவின் பிதாமகன் என அழைக்கப்படும், வாஜ்பாய் வாழும்போதே பாரத ரத்னா வாங்கிய தனி பெரும் சிறப்புக்கு சொந்தக்காரர். இவர் தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனயில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

    வயது மூப்பின் காரணமாக சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காமல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.8.18) மாலை காலமானார். இவரது இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார். இவர் உட்பட, டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    முன்னாள் பிரதமரும், பாஜகவின் பிதாமகன் என்றழைக்கப்படும் வாஜ்பாயின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 93 வயதான இவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்ததாக வெளியிடப்பட்ட அறிக்கையை தொடர்ந்து மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.

    இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். வாஜ்பாயின் மறைவு தொடர்பான தனது இரங்கல் செய்தியில், இந்தியா தனது மிகச்சிறந்த மகனை இழந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



    அதேபோல், மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஈர்க்கத்தக்க கவிஞரும், தனித்துவமிக்க பொதுநல சேவகரும், முதன்மை பிரதமருமான வாஜ்பாயின் மறைவு ஆழ்ந்த துக்கம் அளிப்பதாக மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #RahulGandhi #ManmohanSingh
    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth
    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்,

    முன்னதாக நேற்று முதல் அவரது உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இன்று காலை முதல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாஜ்பாய் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. வாஜ்பாயின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தெரிவித்திருப்பதாவது,

    சிறந்த ஆட்சியாளரான திரு.வாஜ்பாயின் மறைவு கவலை அளிக்கிறது, அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். #Vajpayee #AtalBihariVajpayee #RIPVajpayee #Rajinikanth 

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளதால், அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்தனை நடத்துவோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமரும், அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவருமான வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.



    அவர் நலம் பெறுவதுதான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பதுதான் உண்மை. அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்நேரத்தில் நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth

    வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் பா.ஜ.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம்  தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்தனர்.

    இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரார்த்தனையை வெளியிட்டு வருகின்றனர்.



    இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலும், வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த செயற்குழு கூட்டமும்  ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் வாஜ்பாய் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHealth
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார். #AtalBihariVajpayee #AIIMS #VajpayeeHealth
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மார்பு வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர்.

    நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  #AtalBihariVajpayee  #AIIMS #VajpayeeHealth #PrayForVajpayee
    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று காலை மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். #VajpayeeHealth #AmitShah
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாய் நோய்த்தொற்று, சிறுநீர் பாதை நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் மூத்த மந்திரிகள் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை மருத்துவமனைக்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர். வாஜ்பாய் நலம் பெற வேண்டி பிரார்த்தனையும் செய்துள்ளனர்.



    இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாயின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். #VajpayeeHealth #AmitShah

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவர்களிடம் நேரில் விசாரித்து சென்றுள்ளார். #AtalBihariVajpayee #Vajpayee #AIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வருவார்கள்.

    நேற்று வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று, வாஜ்பாய்யின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 
    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். #AIIMS #AtalBihariVajpayee #ChandrababuNaidu
    புதுடெல்லி :

    1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

    வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, தொடர் சிகிச்சை காரணமாக வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயின் உடல் நிலை குறித்து அவரது உறவினர்களிடம் அவர் விசாரித்தார். #AIIMS #AtalBihariVajpayee #ChandrababuNaidu
    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நலம் குறித்து வைகோ நேரில் சென்று விசாரித்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று டெல்லி சென்றார். வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமீதாவிடம் வாஜ்பாய் உடல்நிலை பற்றி கவலையோடு விசாரித்தேன். அதற்கு அவர், ‘மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது; சிறுநீர் கழிக்கும் பாதையிலும் இடையூறு ஏற்பட்டது; எனவே, முன் எச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். கவலைப்பட தேவை இல்லை என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்’ என்றார்.

    வாஜ்பாய்க்கு 2008-ம் ஆண்டு பக்கவாத தாக்குதல் வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு ஆண்டுக்கு மூன்று நான்கு முறை டெல்லிக்கு வந்து, அவரது இல்லம் சென்று படுக்கைக்கு அருகில் நின்று, அவரது நலம் வேண்டி இயற்கை அன்னையை பிரார்த்தனை செய்து, அவரது கால்களை தொட்டு வணங்கி விட்டு, வளர்ப்பு மகள் நமீதா, மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரோடு அமர்ந்து பேசிவிட்டுத் திரும்புவது வழக்கம்.

    முதல் இரண்டு ஆண்டுகள் நான் வந்து பார்த்தபோதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருந்தார். அதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதே எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு தெரியாது. ஆனால், எனக்கு தகவல் கிடைத்ததால் அவரை பார்க்கத் தனியாக வந்து அவரோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினேன். மனம் நெகிழ்ந்து போனார். பின்னாளில் அதை பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

    வாஜ்பாயை, அவருடைய உயிர் நண்பரான ஷிவ்குமாருடன், 1979-ல் மோதி மகால் ஓட்டலில் சந்தித்தேன். வாஜ்பாய்க்கு மெய்க்காப்பாளராகவும் இருந்து வருகின்ற ஷிவ்குமாரையும் சந்தித்தேன். அவர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். ‘தலைவர் வாஜ்பாய் மீது உயிரான அன்பு கொண்டவர் நீங்கள்; அதைப்போல அவரும் உங்களை நேசிக்கின்றவர்’ என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார்.

    வாஜ்பாய் முழுமையான நலம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை, நமீதாவிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

    அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

    வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


    வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வாஜ்பாய் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாய்பாயின் குடும்பத்தினரிடம் சென்று நலம் விசாரித்தார். இதனை அடுத்து, மருத்துவமனைக்கு வந்த மோடி, வாய்பாயிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்
    ×