என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்மித்"
தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.
காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் சந்தீப் லாமிச்சன்னே நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரஹானே பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (0) ரபடாவால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார்.இதனை அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரன் சேர்த்தனர். ரஹானே அடிக்கடி பவுண்டரி விளாசியதுடன், அவ்வப்போது சிக்சரும் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. 31 பந்துகளில் அரை சதத்தை தொட்ட ஸ்டீவன் சுமித் (50 ரன்கள், 32 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 135 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது.
அடுத்து களம் கண்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னுடனும், ஆஷ்டன் டர்னர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். அதிரடியாக ஆடிய ரஹானே 17-வது ஓவரில் சதத்தை (58 பந்துகளில்) பூர்த்தி செய்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இதுவாகும். ஐ.பி.எல். போட்டியில் ரஹானே அடித்த 2-வது சதம் இது. 2012-ம் ஆண்டு போட்டியில் அவர் முதல் சதத்தை (பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள்) அடித்து இருந்தார்.
இதனை அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (19 ரன்கள், 13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ரியான் பராக் (4 ரன்) ஆகியோர் கடைசி ஓவரில் ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ரஹானே 63 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
உலகக்கோப்பைக்கான அந்த அணியில் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. ஸ்மித் ஆஷஸ் தொடரில்தான் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித், வார்னரை தேர்வு செய்யவில்லை எனில், அது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் “இருவரும் அணிக்கு திரும்பும் முன் சில போட்டிகளில் விளையாடுவது அவசியம். இது எல்லாம் நிர்வாகத்தின் ஒரு பகுதி. நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கடினமான நேரம் என்பது எங்களுக்குத் தெரியும். அணிக்கும் கடினமான நேரம்தான். கடந்த 9 அல்லது 10 மாதங்களாக ஒருங்கிணைந்து சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.
தற்போதும், வரும் காலத்திலும் அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களும் வாய்ப்பை தேடுவார்கள், நாங்களும் (ஆஸ்திரேலியா) வாய்ப்பை தேடுவோம்.
நாம் இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசி வருகிறோம். நாம் உண்மையிலேயே இரண்டு சிறந்த வீரர்களை பற்றி பேசவில்லை. அவர்களை நாங்கள் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கவில்லை என்றால், அது பைத்தியக்காரத்தனமாகும்” என்றார்.
கடந்த ஆஷஸ் தொடருக்குப்பின் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்த ஆஸ்திரேலியாவிற்கு இந்த வெற்றி சிறுது நம்பிக்கையளித்துள்ளது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் மீதான ஓராண்டு தடை அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர்கள் இருவரும் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரின்போது அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
அவர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவேற்க தயாராக உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன், வரவிருக்கும் ஆஷஸ் தொடரின் வெற்றியில் ஸ்மித், வார்னர் ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘நீங்கள் விரும்புவது போல் இருவரும் அணிக்கு திரும்பி அதிக ரன்கள் குவிப்பார்கள். நாங்கள் ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து செல்லும்போது, அந்த தொடரின் வெற்றியில் இருவருடைய ஆட்டமும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதாக நான் பார்க்கிறேன். இதனால் அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன்.
அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தடை முடிந்த பிறகு அணிக்கு வரவேற்கப்படுவார்கள். கடந்த காலத்தை போன்று மீண்டும் அணிக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள்’’ என்றார்.
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வங்காளதேச பிரிமீயர் லீக்கில் டேவிட் வார்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது கேட்ச் பிடிக்கும்போது அவரது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் சொந்த நாடு திரும்பினார்.
இந்நிலையில் நாளை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறார். லேசான காயம் என்பதால் 21 நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பெற வாய்ப்புள்ளது.
அதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். மற்றொரு வீரரான ஸ்மித்தும் முழங்கை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மோர்தசாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொமிலா அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.
தமிம் இக்பால் 4 ரன்னிலும், லெவிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்னிலும், ஸ்மித் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது கொமிலா அணி தத்தளித்தது.
அதன்பின் நஸ்முல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீச கொமிலா விக்டோரியன்ஸ் அணி 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 63 ரன்னில் சுருண்டது. மோர்தசா நான்கு ஒவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நஸ்முல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற கொமிலா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சியால்கெட் சிக்சர்ஸ் அணியின் லிட்டோன் தாஸ் - டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லிட்டோன் தாஸ் 1 ரன்னிலும், வார்னர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பூரண் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 41 ரன்கள் சேர்க்க சியால்ஹெட் சிக்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லெவிஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இம்ருல் கெய்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
கேப்டன் ஸ்மித் 16 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். தமிம் இக்பால் 35 ரன்னில் ஆட்டமிழக்க, ஷாகித் அப்ரிடி 25 பந்தில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க, கொமிலா அணி ஒரு பந்து மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணி சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. சிலர் இந்திய அணியை பாராட்டுவதைவிட, ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததுதான் அந்த அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘இருவரும் ஆஸ்திரேலிய அணியில் விளையாடாதது இந்தியாவின் தவறல்ல’’ என்று கவாஸ்கார் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் விளையாடியது இந்தியாவின் தவறல்ல. இருவரின் தடையை அவர்களால் குறைத்திருக்க முடியும். ஆனால் ஒரு வருடத்தடை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு நல்லது என்று நினைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டியை தவறான வழிக்கு இழுத்துச் செல்லும் வீரர்களுக்கு இது உதாரணமாக இருக்கும் என்பதால் இதை எடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனையைப் படைத்துள்ளது.’’ என்றார்.
இரண்டு பேரும் அணிக்கு திரும்புவதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் இருவரும் டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள்.
விரைவில் தொடங்க இருக்கும் வங்காள தேசம் பிரிமீயர் லீக்கில் இருவரும் களம் இறங்க இருக்கின்றனர். அதன்பின் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறார்கள். இதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் அவர்களுக்கு நிச்சயமாக இடம்கிடைக்கும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில் ‘‘வங்காள தேச பிரிமீயர் லீக் மற்றும் ஐபிஎல் தொடரில் இருவருடைய ஆட்டம் எப்படி இருக்கிறது என்பது உண்மையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு தொடர்களையும் கண்காணிப்பது முக்கியமானது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், நியாயம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடைய தேர்வு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இருவருடைய பார்ம் குறித்து நாங்கள் கேட்டறிந்த வகையில் எந்த கவலையும் இல்லை. அவர்கள் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் அவர்களுடன் போதுமான அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களை மதிப்பிடுவோம்’’ என்றார்.
மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.
பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.
இந்த விவகாரத்திற்குப் பிறகு முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்மித் பேட்டியளித்தார். அப்போது ‘‘நான் பால் டேம்பரிங் விவகாரத்தை தடுத்திருக்கலாம். கேப்டன் பொறுப்பில் தோல்வியடைந்து விட்டேன்’’ என்று கூறினார்.
இந்நிலையில் துணைக்கேப்டனாக இருந்த வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும்படி என்னைத் துண்டினார் என்று பான் கிராப்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பான் கிராப்ட் கூறுகையில் ‘‘நாங்கள் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர் என்னிடம் வந்து பந்தை சேதப்படுத்தும்படி கூறினார். அது நல்லதா? என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இளம் வீரர் என்பதால் அணியில் தன்னுடைய மதிப்பு என்ன என்பதை யோசிக்க வேண்டியிருந்தது.
சீனியர் வீரர்களிடம் இருந்து மரியாதை பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. மேலும் தவறுக்காக மிகப்பெரிய விலைக்கொடுக்க போகிறோம் என்பதையும் உணர்ந்திருந்தேன்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்