search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்சிலோனா"

    100 போட்டியில் விளையாடினால் லிவர்பூல் அணிக்கு 17 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்பதால், இந்த சீசனில் கவுட்டினோவை பார்சிலோனா டிரான்ஸ்பர் செய்யும் எனத் தெரிகிறது.
    பிரேசில் கால்பந்து அணியின் சிறந்த வீரர் பிலிப்பே கவுட்டினோ. இவர் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 106 மில்லின் பவுண்டுக்கு பார்சிலோனா வாங்கியது. அப்போது சில நிபந்தனைகள் கூடுதலாக சில 36 மில்லியன் பவுண்டு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    அதில் ஒன்று பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 100 போட்டிகளில் பங்கேற்றால் 17 மில்லியன் பவுண்டு லிவர்பூல் அணிக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.



    தற்போது வரை பார்சிலோனா அணிக்காக கவுட்டினோ 71 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசன் முடிந்தவுடன் வீரர்கள் டிரான்ஸ்பர் நடைபெறும். அப்போது கவுட்டினோவை வெளியேற்றாவிடில், அடுத்த சீசனில் அவர் தொடர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

    இதனால் கவுட்டினோவை 17 மில்லியன் பவுண்டுக்காக பார்சிலோனா வெளியேற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி 2-வது லெக்கில் பார்சிலோனாவை 4-0 என துவம்சம் செய்து வெளியேற்றி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது லிவர்பூல். #UCL
    ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லிவர்பூல் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் அஜாக்ஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

    முதல் லெக்கில் லிவர்பூல் அணிக்கெதிராக பார்சிலோனா, அதன் சொந்த மைதானத்தில் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் லிவர்பூல் அணி 2-வது லெக்கில் 4 கோல்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.



    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது லெக் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே சொந்த மைதான ரசிகர்கள் ஆரவாரத்தோடு லிவர்பூல் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா பின்கள வீரர்களை ஏமாற்றி டிவோக் ஒரிஜி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். தொடர்ந்து லிவர்பூல் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திக் கொண்டே இருந்தனர். பெரும்பாலான வாய்ப்புகளை லிவர்பூல் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.



    அதேபோல் லிவர்பூல் வீரர்களும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பார்சிலோனா கோல் எல்லைக்குள்ளும் பந்துகள் சென்ற வண்ணம் இருந்தனர். பார்சிலோனா கோல் கீப்பர் படாதபாடு பட்டு பந்துகளை தடுத்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. ஆகவே, 1-0 என லிவர்பூல் முன்னிலைப் பெற்றிருந்தது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் லிவர்பூல் வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். 54-வது நிமிடத்தில் விஜ்னால்டம் கோல் அடித்தானர். அடுத்த 2-வது நிமிடத்தில் சூப்பரான ஹெட்டர் கோல் அடித்தார். மூன்று நிமிடத்திற்குள் இரண்டு கோல்கள் அடித்து பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

    இதனால் லிவர்பூல் 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த ஸ்கோருடன் ஆட்டம் முடிந்தால் போட்டி வெற்றித் தோல்வியின்று முடியும் என்பதால் லிவர்பூல் வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    சுமார் 23 நிமிடங்கள் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 79-வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் பகுதியில் பந்தை வைத்த வீரர் அதை அடிக்காமல் நகர்ந்து வந்தார். இதனால் அவர் பந்தை அடிக்கமாட்டார் என்று பார்சிலோனா வீரர்கள் சற்று கவனத்தை சிதறவிட, மின்னல் வேகத்தில் திரும்பி வந்து பந்தை உதைத்தார்.



    அப்போது கோல் எல்லை அருகில் நின்றிருந்த ஒரிஜி அதை கோலாக்கினார். இதனால் லிவர்பூல் 4-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 11 நிமிடங்கள் போராடியும் பார்சிலோனாவால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டு லெக்கையும் கணக்கிட்டு லிவர்பூல் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான முதல் லெக்கில் அஜாக்ஸ் 1-0 என வெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் இன்று நள்ளிரவு நடக்கிறது.
    நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி லா லிகா கோப்பையை கைப்பற்றியது. #LaLigaTitle #LionelMessi
    பார்சிலோனா:

    லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனில் வழக்கம் போல் 20 கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் லெவன்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 62-வது நிமிடத்தில் அடித்தார்.



    இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பார்சிலோனா அணி பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா அணி இதுவரை 35 ஆட்டங்களில் விளையாடி 25 வெற்றி, 8 டிரா, 2 தோல்வி என்று 83 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.



    லா லிகா பட்டத்தை பார்சிலோனா அணி வெல்வது இது 26-வது முறையாகும். இவற்றில் பார்சிலோனா கோப்பையை வென்ற 10 தொடரில் மெஸ்சி அங்கம் வகித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனாவுக்காக அதிக முறை லா லிகா கோப்பையை வென்றுத் தந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
    பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை உயர்த்திய நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு மானிய விலையில் டிக்கெட் வழங்குகிறது. #UCL #ManUnited
    யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி ஒன்றில் பார்சிலோனா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. முதல் லெக் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டில் அடுத்த மாதம் 11-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.

    2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான நவு கேம்ப் மைதானத்தில் 17-ந்தேதி நடக்கிறது. இரண்டு அணி ரசிகர்களும் போட்டிகளை பார்க்க இங்கிலாந்துக்கும், ஸ்பெயின் நாட்டிற்கும் செல்வார்கள்.

    2-வது லெக் போட்டியை பார்ப்பதற்காக மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு பார்சிலோனா 4610 டிக்கெட்டுக்கள் ஒதுக்கியுள்ளது. ஆனால் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் 102 பவுண்டு (134 டாலர்) விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் தொகை மிகவும் அதிகம். அதனால் போட்டியை புறக்கணிப்போம் என்று மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

    இதனால் முதல் லெக் போட்டியை ஓல்டு டிராஃபோர்ட் வந்து பார்க்க வரும் பார்சிலோனா ரசிகர்களுக்கான டிக்கெட் விலையை மான்செஸ்டர் யுனைடெட் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் கிடைக்கும் வருமானத்தை நவு கேம்ப் செல்லும் ரசிகர்களுக்கான டிக்கெட்டிற்கு மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் லியோன் அணியை 5-1 என வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியது. #UCL #Barcelona
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா - லியோன் அணிகள் மோதின. லியோன் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். 31-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58-வது நிமிடத்தில் லியோன் அணியின் லூகாஸ் கோல் அடித்தார். 78-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். 81-வது நிமிடத்தில் ஜெரார்டு பிக்காய் ஒரு கோலும், 86-வது நிமிடத்தில் டெம்பேல் ஒரு கோலும் அடித்தனர். இதனால் பார்சிலோனா 5-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    கோபா டெல் ரே அரையிறுதியின் 2-வது லெக்கில் ரியல் மாட்ரிட் அணியை 3-0 என வீழ்த்தி பார்சிலோனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது #Barcelona #RealMadrid
    கோபா டெல் ரே கால்பந்து கோப்பைக்கான அரையிறுதி ஒன்றில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கு இடையிலான முதல் லெக் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

    2-வது லெக் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லூயிஸ் சுவாரஸ் 50-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார். 69-வது நிமிடத்தில் அதிர்ஷ்டம் மூலம் அந்த அணிக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது. ரபேல் வரானே ஓன் கோல் அடிக்க பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.



    73-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. சரியாகப் பயன்படுத்திய சுவாரஸ், அதை கோலாக மாற்றினார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா இரண்டு லெக்கிலும் சேர்த்து 4-1 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    லா லிகா கால்பந்து தொடரில் கிரோனாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் 1-2 எனத் தோல்வியடைந்தது #LaLiga
    லா லிகா கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட் தனது சொந்த மைதானத்தில் கிரோனா அணியை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேஸ்மிரோ கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அந்த 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் கிரோனா அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஸ்டுயானி பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.

    இதனால் ஸ்கோர் 1-1 சமநிலைப் பெற்றது. அடுத்த 10-வது நிமிடத்தில் ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் போர்ட்டு ஒரு கோல் அடித்தார். இதனால் கிரோனா 2-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆகவே கிரோனா 2-1 என ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது.



    இந்த தோல்வி ரியல் மாட்ரிட் அணிக்கு தரவரிசையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்சிலோனா 54 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. அட்லெடிகோ டி மாட்ரிட் 47 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரி்ட 45 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இன்னும் 10 போட்டிகள் உள்ளன. ரியல் மாட்ரிட் 9 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. பார்சிலோனாவை பின்னுக்குத்தள்ள ரியல் மாட்ரிட் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் முடியா என்பது சந்தேகமே?.
    லா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்து பார்சிலோனா முன்னணி வீரரான மெஸ்சி சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #Messi
    அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - எய்பர் அணி மோதின. இதில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோலும், சுவாரஸ் இரண்டு கோலும் அடித்தனர்.

    இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்சி லா லிகாவில் 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில் ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 507 போட்டிகளில் விளையாடி 409 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோ ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் உள்ள கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    லா லிகா கால்பந்து லீக்கில் கெடாபி அணியை 2-1 என வீழ்த்தி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது பார்சிலோனா #Barcelona #LaLiga
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து லீக்கான லா லிகாவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கெடாபி சிஎஃப் - எஃப்சி பார்சிலோனா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோலை பதில் செய்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான சுவாரஸ் ஒரு கோல் அடித்தார். 43-வது நிமிடத்தில் கெடாபி அணியின் மேட்டா கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேர ஆட்டத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.



    அதேவேளையில் அட்லெடிகோ டி மாட்ரிட் - செவியா எஃப்சி இடையிலான ஆட்டம் 1-1 டிராவில் முடிந்தது. இதனால் பார்சிலோனா 18 ஆட்டத்தில் 12 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி மூலம் 40 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அட்லெடிகோ டி மாட்ரிட் 18 ஆட்டங்களில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 35 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. செவியா எஃப்சி 33 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 30 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    லா லிகாவின் தலைசிறந்த கால்பந்து அணியான பார்சிலோனாவிடம் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஸ்பெஷல் கிப்ட் ஒன்றை பெற்றுள்ளார். #Barcelona #Ganguly
    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் ரசிகர்களால் ‘தாதா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். சவுரவ் கங்குலி கிரிக்கெட் விளையாட்டுடன் கால்பந்தையும் அதிக அளவில் நேசிப்பவர். சிறுவயதில் கால்பந்து மீதுதான் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பின்னர்தான் கிரிக்கெட் வீரராக மாறினார்.



    இவரை ஸ்பெயின் நாட்டின் லா லிகா தொடரில் விளையாடும் முன்னணி அணியான பார்சிலோனா அழைத்து, அந்த அணியின் ஜெர்சியில் ‘DADA’ எனக் குறிப்பிட்டு பரிசளித்துள்ளது. கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் சானாவுடன் அமர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு ‘‘பார்சிலோனாவில் அப்பா, சானா’’ என்று பதிவிட்டுள்ளார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் நாக்அவுட் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #UCLdraw
    யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் ஆட்டத்தின் முடிவில் 1. பார்சிலோனா, 2. ரியல் மாட்ரிட், 3. மான்செஸ்டர் யுனைடெட், 4. மான்செஸ்டர் சிட்டி, 5. அட்லெடிகோ மாட்ரிட், 6. யுவான்டஸ், 7. லிவர்பூல், 8. பிஎஸ்ஜி, 9. ஸ்கால்கே, 10. டோட்டன்ஹாம், 11. புருஸ்சியா டார்ட்மண்ட், 12. லியோன், 13. ரோமா, 14. போர்ட்டோ, 15. அஜாக்ஸ், 16. பேயர்ன் முனிச் ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியன.

    நாக்அவுட் சுற்று போட்டிக்கான அட்டவணை குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பிஎஸ்ஜி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இரண்டு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும். இதனால் நாக்அவுட் சுற்றிலேயே முன்னணி அணி ஒன்று வெளியேறிவிடும்.



    மற்றொரு ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த லிவர்பூல் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொள்கிறது. அட்லெடிகோ மாட்ரிட் யுவான்டஸை எதிர்கொள்கிறது. பார்சிலோனா லியோன் அணியையும், ரியல் மாட்ரிட் அஜாக்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

    டோட்டன்ஹாம் - புருஸ்சியா டார்ட்மண்ட், மான்செஸ்டர் சிட்டி - ஸ்கால்கே, ரோமா - போர்ட்டோ அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் #Barcelona
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ‘பி’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா - டோட்டன்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே பார்சிலோனா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. டோட்டன்ஹாம் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஓஸ்மானே டெம்பேல் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா முதல்பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்தான் லூகாஸ் மவுரா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    பார்சிலோனா நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டோட்டன்ஹாம், இன்டர் மிலன் அணிகள் 6 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி, டிரா, தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றது. கோல் அடித்தது, கோல் விட்டுக் கொடுத்ததிலும் சமமாக இருந்தது. அவர்களுக்கிடையிலான ஆட்டத்தை கணக்கிட்டு டோட்டன்ஹாம் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    ×