என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். அவர் ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
அவரது ஆதரவாளர்கள் குக்கர்களை கையில் ஏந்திய படி பிரசாரம் செய்தது பெரும் வரவேற்பைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.
மனுவில் அவர் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.த்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். அது ஏற்கப்படவில்லை. இந்த மனு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும். #SupremeCourt #TTVDhinakaran #Cooker
தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மே 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து பதற்றம் நீடித்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை மூட அரசாணை வெளியானது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் 17-ந்தேதி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களது கருத்தை அறியாமல் சுப்ரீம் கோர்ட் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SupremeCourt #Sterliteplant #TNGovt
விக்கிரவாண்டி:
விழுப்புரம் கூட்டேரிப்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து எச்சரிக்கை ஒளிரும் விளக்கை சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: மேகதாது அணை பிரச்சினைபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: காவிரி ஆறு மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதன்படி காவிரி ஆற்றில் அணை கட்டும் போது சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறாமல் எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது என்பது சட்டவிதி. மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கேள்வி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றசாட்டுகள் கூறப்படுவது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
பதில்: ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கீழ் பணியாற்றும் காவல்துறையினர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகின்றனர். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ministercvshanmugam #ponmanickavel
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. அத்துடன் அணை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
மேலும், தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது. #MekedatuDam #SupremeCourt
புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
பல்வேறு குக்கிராமங்களில் அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. கிராமங்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை உள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் பல சேதம் அடைந்துள்ளன.
இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தை நீட்டித்து தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தொலைபேசி மூலமும் பேசி உள்ளோம்.
அதற்கு மத்திய அரசு அதிகாரிகள் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக வாய்மொழி உத்தரவு தந்துள்ளனர். விரைவில் மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETExam #SC
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது.
தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. #SC #Delhi #AirPollution
இந்திய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்புவது குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சகிப் நிசார் முன்னிலையில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தியாவின் சேனல்களுக்கு தடை விதித்தால் என்ன? என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் உள்நாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரேடியோ மற்றும் சேனல்களில் இந்திய நிகழ்ச்சிகள், படங்களுக்கு தடை விதித்து இருந்ததும், அந்த தடை 2017-ம் ஆண்டு விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. #PakistanSC
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கேரள மாநிலம் கொட்டையம் பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெருந்திரளான பெண்கள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யுமாறு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து பேரணி நடத்தினர். #Sabarimala #SabrimalaVerdict #PinarayiVijayan #WomenProtest
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வு, சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை தகர்த்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது’ எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேனகா காந்தி, ஒரு குறிப்பிட்ட பாலினம் அல்லது சமூகத்துக்கு மட்டுமே இந்து மதம் என்ற தடை அகற்றப்பட்டு, இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
நீதித்துறைக்கும், உச்சநீதிமன்றத்துக்கும், சட்டவிதிகளை இயற்றிய அம்பேத்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜெயமாலா, தற்போதுதான் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாட்டின் பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் வரவேற்று வரும் நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமை அர்ச்சகர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். #Sabarimala #SabrimalaVerdict #SupremeCourt #ManekaGandhi
இந்த தீர்ப்பை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறுஆய்வு செய்ய வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை அக்டோபர் 29-ம் தேதி முதல் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரித்து தீர்ப்பளிக்கும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. மேலும், அயோத்தி விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெற்று உடனடியாக தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாகவும் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்