search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய்மர்"

    பயிற்சியின்போது வலி தாங்க முடியாமல் நொண்டியதால் அடுத்த போட்டியில் நெய்மர் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Neymar
    பிரேசில் கால்பந்து அணி கேப்டனான நெய்மர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மெர்சைலே அணிக்கெதிரான போட்டியின்போது நெய்மருக்கு வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.

    காயம் வீரியமடைந்தால் நெய்மர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கால்பந்து களத்திற்கு திரும்பினார். குரோசியா, ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மோதினார்.



    நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். சுவிட்சர்லாந்து வீரர்கள் நெய்மர் குறிபார்த்து தாக்கினார்கள். அடிக்கடி அவரை கீழே தள்ளி FOUL ஆனார்கள்.

    இந்நிலையில் இன்று நெய்மர் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார். அணிகளுடன் ஒன்றாக பயிற்சி செய்யும்போது நெய்மர் எந்தவித வலியும் இல்லாமல் சகஜமாக விளையாடினார்.



    அதன்பின் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். அப்போது வலது காலில் அவருக்கு அதிகமான வலி ஏற்பட்டது. இதனால் நெய்மர் நொண்டி அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    உடனடியாக அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார்கள். ஆகவே, உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.
    உலகக்கோப்பையில் நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார் என்று சக வீரரான பிலிப்பே கவுட்டினோ தெரிவித்துள்ளார். #WolrldCup2018 #Neymar
    ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. காயத்திற்குப்பின் நெய்மர் இந்த போட்டியில் கலந்து கொண்டார். அவருடன் பார்சிலோனா புகழ் பிலிப்பே கவுட்டினோ, ஜீசஸ், ரியல் மாட்ரிட் புகழ் மார்சிலோ போன்ற தலைசிறந்த வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்.

    பிரேசில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பிலிப்பே கவுட்டினோவின் கோலால் 1-1 என டிராதான் செய்தது.



    ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் தடுப்பாட்டத்துடன், நெய்மரை தாக்கி Foul செய்வதிலேயே குறியாக இருந்தனர். தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நெய்மர், இந்த தாக்குதலை அதிக அளவில் சந்திப்பார் என்று கவுட்டினோ தெரிவித்துள்ளார்.



    1998-ம் ஆண்டிற்குப் பிறகு நெய்மர்தான் 10 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து கவுட்டினோ கூறுகையில் ‘‘சுவிட்சர்லாந்து வீரர்கள் எங்களை அதிக அளவில் தாக்கினார்கள். ஆனால், எல்லா போட்டிகளிலும் இப்படிதான் நடக்கும் என நான் யூகிக்கிறேன்.



    நாம் உலகக்கோப்பையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லோரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்வோம். நெய்மர் நன்றாக இருக்கிறார். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தவறு செய்ய வேண்டியதில்லை என்ற போதிலும், தவறு செய்தார்கள். இப்படி நடந்தால் போட்டி முடங்கிவிடும்.

    அனைத்து போட்டிகளிலும் இதுபோன்று நடைபெறும். அதனை எதிர்த்து நாங்கள் முன்னேற வேண்டும்’’ என்றார்.
    உலகக்கோப்பையை வெல்லும் அணிகள் என்று கணிக்கப்பட்டுள்ள முக்கிய அணிகள் முதல் சுற்றில் வெற்றியை ருசிக்க முடியாமல் திணறியுள்ளது. #WorldCup2018
    ரஷியாவில் கடந்த வியாழக்கிழமை உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தொடக்க ஆட்டத்தில் முன்னணி அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் தோல்வியில் இருந்து தப்பினால் போதும் என்ற நிலைமைக்கு சில அணிகள் தள்ளப்பட்டது. ஜெர்மனி தோல்வியை எதிர்கொண்டது.



    கடந்த 15-ந்தேதி பலம்வாய்ந்த ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது. 16-ந்தேதி மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. மெஸ்சி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டார். இதனால் டிராவை சந்தித்தது அர்ஜென்டினா.



    கோஸ்டா ரிகாவை 1-0 என செர்பியா வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு மெக்சிகோ அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. மெக்சிகோ 1-0 என ஜெர்மனி வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டங்களில் ஒன்று பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய போட்டியாகும். இந்த போட்டியை சுவிட்சர்லாந்து அசத்தாலா 1-1 என டிரா செய்தது.
    கால்பந்து ஜாம்பவானான மரடோனா, தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார். #WorldCup2018 #neymar
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் முன்னணி அணியான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. அதற்கு அந்த அணியில் கேப்டன் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ, மார்சிலோ போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருப்பதே காரணம்.

    இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவானான மரடோனோ, தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மரடோனா கூறுகையில் ‘‘புதிய பயிற்சியாளர் டைட் வந்த பிறது அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 21 போட்டிகளில் 17-ல் வெற்றி பெற்றுள்ளது. 47 கோல்கள் அடித்துள்ள நிலையில், 5 கோல்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

    அந்த அணியில் நெய்மர் மட்டுமல்ல, தரம்வாயந்த மற்ற சில வீரர்களும் உள்ளனர். சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகளுக்கு எதிராக அவர்கள் சிறந்த சோதனை காத்திருக்கிறது’’ என்றார்.
    பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கவலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் உள்ளார். #Brazil #football #neymar
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். #Brazil #football #neymar
    பிரேசில் கேப்டன் நெய்மரை ரியல் மாட்ரிட் அணியில் பார்க்க பயங்கரமானதாக இருக்கும் என பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார். #Messi #neymar
    பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் நெய்மர். இவர் கடந்த 2013-ல் இருந்து 2017 வரை ஸ்பெயினின் புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். மெஸ்சி, சுவாரஸ் உடன் இணைந்து நெய்மர் பார்சிலோனா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த மூன்றுபேரையும் மும்மூர்த்திகள் என்று அழைத்தனர்.

    2016-17 சீசன் முடிந்ததுடன் கால்பந்து வரலாற்றில் மிகவும் அதிகத் தொகைக்கு பிஎஸ்ஜி அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார். 26 வயதாகும் நெய்மர் தற்போது ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் நெய்மரை ரியல் மாட்ரிட் அணியில் பார்ப்பது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘தனது நண்பரும், தன்னுடனும் சேர்ந்து விளையாடியவரும் ஆன நெய்மர் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தால், அந்த அணியில் அவரை பார்ப்பது பயங்கரமானதாக இருக்கும். நெய்மர் என்பது பார்சிலோனாவை குறிக்கும்.

    அவர் பார்சிலோனாவிற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சாம்பியன்ஸ் லீக், லா லிகா டைட்டிலை வென்றுள்ளார். ஆனால், ரியல் மாட்ரிட்டிற்கு சென்றால், அது எங்களுக்க மிகப்பபெரிய இழப்பாகும். பார்சிலோனா ரசிகர்களுக்கும்’’ என்றார்.
    ரியல் மாட்ரிட் அணிக்கு டிரான்ஸ்பர் ஆகலாம் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்த வருடம் பிஎஸ்ஜிதான் என நெய்மர் சூசகமாக தெரிவித்துள்ளார். #neymar
    பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் நெய்மர். இவர் கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு பார்சிலோனாவில் இருந்து பிரான்ஸ் கிளப் ஆன பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றார்.

    அந்த அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு செல்லலாம் என்று யூகம் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ரியல் மாட்ரிட் நெய்மரை மிகப்பெரிய தொகைக்கு வாங்க இருக்கிறது என்றும் கூறப்பட்டது. இதற்கான நான்கு வீரர்களை வெளியேற்றவும் அந்த அணி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.



    தற்போது நெய்மர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளதால் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று தெரிகிறது.

    இந்நிலையில் பிஎஸ்ஜி அணி அடுத்த சீசனுக்கான புது ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. இதை அணிந்து கொண்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், புதிய ஜெர்ஸியை அணிவதற்கு பெருமையாக இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார். இதனால் 2018-19 சீசனிலும் பிஎஸ்ஜி அணிக்காகத்தான் விளையாடுவார் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
    நெய்மருக்காக நான்கு முன்னணி வீரர்களை வெளியேற்ற ரியல் மாட்ரிட் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Neymar #RealMadrid
    ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து லீக்கில் விளையாடும் முன்னணி அணி ரியல் மாட்ரிட். அதேபோல் பார்சிலோனா அணியும் முக்கியத்துவம் வாய்ந்த அணி. ரியல் மாட்ரிட்டிற்கு முக்கிய எதிரி பார்சிலோனாதான்.



    பார்சிலோனா அணியில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர் விளையாடி கொண்டிருந்தார். அவரை வாங்குவதற்கு ரியல் மாட்ரிட் விரும்பியது. ஆனால், அதில் பல சிக்கல்கள் இருந்ததால் நெய்மர் பிஎஸ்ஜி-க்கு சென்றார். கால்பந்து கிளப் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 200 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆனார்.



    பிஎஸ்ஜி-க்கு சென்ற நெய்மர் 30 போட்டியில் 20 கோல்கள் அடித்தார். தற்போது நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். ரியல் மாட்ரிட் அணியும் அவரை வாங்க விரும்புகிறது. நெய்மர் வேண்டுமென்றால் ரியல் மாட்ரிட் ஏராளமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.



    இதை சரிகட்டும் வகையில் காரேத் பெலே, கரின் பென்சிமா, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், இஸ்கோ ஆகியோரை 1745 மில்லியன் பவுண்டு அளவிற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெய்மர் ரியல் மாட்ரிட் அணிக்கு வந்தால் நீண்ட காலமாக அந்த அணிக்காக விளையாடுவார்.
    ×