search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    பனிப்பொழிவு தொடங்கி விட்டதால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக் காலமாகும். ஆனால் நடப்பாண்டு முன்கூட்டியே நவம்பர் மாதம் இறுதியிலேயே பனிக்காலம் தொடங்கி விட்டது. மேலும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. அப்படி இருந்தும் இரவு 9 மணிக்கு பிறகு பனிப்பொழிவு தொடங்கி விட்டதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருமே கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர்.

    பனியின் காரணமாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரத்தில் தற்காலிக கடைகளில் ஸ்வட்டர், போர்வை, தலைக்குல்லா, ஸ்கார்ப் உள்ளிட்ட கம்பளி ஆடைகளை விற்பனைக்காக குவித்துள்ளனர். அதன் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர், ஈரோட்டில் இருந்து மொத்தமாக போர்வை, ஸ்வட்டர், தலைக்குல்லா போன்றவைகளை கொள்முதல் செய்து வந்து சில்லரை விற்பனைக்கு வைத்துள்ளோம். நடப்பாண்டு முன்கூட்டியே குளிர் தொடங்கிவிட்டதால் ஸ்வட்டர், போர்வை, ஸ்கார்ப், குல்லா ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடந்த ஆண்டை விட ஸ்வட்டர், போர்வையின் விலைகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

    இதில் தரத்தை பொறுத்து சிறுவர்களுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.300 வரையிலும், பெரியவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.450 வரையிலும் ஸ்வட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. ஸ்கார்ப் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், தலைக்குல்லா சிறுவர்களுக்கு ரூ.20-ல் இருந்தும், பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்தும் உள்ளன. சால்வை ரூ.250 முதல் ரூ.400 வரையிலும், போர்வை ரூ.100 முதல் 300 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் பனியாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு, பண்ணந்தூர், பாரூர், பாப்பானூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

    எப்போதும் லேசன பனிப் பொழிவு ஏற்படும் இப்பகுதிகளில், தற்போது அதிகஅளவு பனிப் பொழிவு  நாலுக்கு நாள் உள்ளது. கடந்த 4 தினங்களாக தொடர் பனிப் பொழிவு வழக்கத்திரற்கு மாறாக ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமே தொடர் பனிப் பொழிவு ஏற்படும் நிலையில், இப்பகுதிகளில் அதிகாலை முதலே பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் ரோடு தெரியாமல் வாகனத்தை ஆமைபோல் இயக்குகின்றனர். காலை 8 மணிவரை முகப்பு விளக்கு எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர். 

    மேலும், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ரோஜா போன்ற பூக்கள் கருக தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    கடும் பனிப்பொழிவு காரணமாக பத்ரிநாத் கோவில் 42 பக்தர்கள் உணவு இன்றி முகாமில் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Badrinath #Snowfall #Pilgrims
    புவனேஸ்வரம்:

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சாமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பத்ரிநாத் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளது.

    சாலைகளில் பனித்துகள்கள் படர்ந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற ஒடிசாவை சேர்ந்த 42 பேர் முகாமில் சிக்கி உள்ளனர்.

    அவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு முகாம் திரும்பிய நிலையில், பனிப்பொழிவு காரணமாக முகாமில் இருந்து வெளியேற முடியாதபடிக்கு சிக்கிக்கொண்டனர். கடந்த சனிக்கிழமை இரவு முதல் அவர்கள் அனைவரும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முகாம் இருளில் மூழ்கியதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்து உள்ளது.  #Badrinath #Snowfall #Pilgrims 
    ×