search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமரா"

    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது. 

    பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.



    புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.

    சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.

    புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch



    ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.



    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.

    புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.

    அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது. 


    ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.

    எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

    அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


    பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
    அமெரிக்காவில் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. #USPoliceDogs
    நியூயார்க்:

    துப்பறிவதில் போலீஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை கண்கள், மூக்கு மூலம் மோப்பம் பிடித்து குற்றவாளிகளை கண்டறிந்து வெளிப்படுத்துகின்றன.

    தற்போது போலீஸ் மோப்ப நாய்களுக்கு கேமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    நாய்களின் இடுப்பில் கேமராக்கள் பொருத்தப்படும். அந்த கேமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே பார்க்க முடியும். மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.

    அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் தற்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. #USPoliceDogs
    3-வது கண்ணாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களால் குற்றவாளிகளை பிடிக்க முடிகிறது என்று போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார்.

    போரூர்:

    போரூர் மங்களாநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் மங்களா நகரில் மொத்தம் உள்ள 16 தெருக்களிலும் புதிதாக 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான தொடக்க விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டிக்காராம், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கேமராக்களின் செயல் பாட்டினை கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்.

    வடசென்னை கூடுதல் ஆனையர் தினகரன், மேற்கு மண்டல இனை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், போரூர் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர்,மாநகராட்சி மண்டல உதவி கமி‌ஷனர் சசிகலா, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், சீத்தாராமன், மங்களா நகர் நலவாழ்வு சங்க தலைவர் நடராஜன் மற்றும் குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விழாவில் பேசியதாவது :-

    சென்னையில் நடைபெறும் பல்வேறு வகையான குற்றசம்பவங்களில் துப்பு துலக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமரா பெரும் உதவியாக உள்ளது. அதன் மூலம் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடிகிறது. சமீபத்தில் கூட வளசரவாக்கம் பகுதியில் முதியவரிடம் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க கண்காணிப்பு கேமரா பெருமளவு உதவியாக இருந்தது.

    நாம் தூங்கினாலும் தூங்காமல் கண் விழித்து கண்காணிக்கும் மூன்றாவது கண்களாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.

    அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றவாளிகள் தப்பிச் சென்றால் அவர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு வசதியாக துல்லியமான பதிவுகளை கொண்ட கேமராக்களை பொறுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    கொடுங்கையூரில் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் ஆர்.வி. நகர் குடியிருப்பு அப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த குடியிருப்பாகும்.

    அப்பகுதி முழுவதையும் 3-வது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அப்பகுதி மக்கள் திட்ட மிட்டனர். இதன்படி முதல் கட்டமாக 15 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

    கொடுங்கையூர் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆர்.வி.நகர் சொசைட்டி தலைவர் கண்ணன் மற்றும் குடியிருப்போர் நல மேம்பாட்டு சங்கத்தினர் ஒருங்கிணைந்து இந்த கேமராக்களை நிறுவி உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ஆர்.வி.நகரில் கேமராக்கள் பொறுத்தப்பட்டதன் மூலம் அது பாதுகாப்பான பகுதியாக மாறியுள்ளது. இங்கு வந்து தப்பு செய்து விட்டு இனி குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றார்.

    ஆர்.வி.நகர் நுழைவு வாயிலில் தொடங்கி குருமூர்த்தி பள்ளி வரையில் பொறுத்தப்பட்டுள்ள இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம்பிடிக்கும் தன்மை கொண்டவையாகும். கட்டபொம்மன் தெருவும் கேமரா பார்வைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் 2 கட்டங்களாக ஆர்.வி.நகரில் 30 கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொறுத்தப்பட உள்ளன.

    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார். இதன்படி அனைத்து இடங்களிலும் கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    செம்பியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 222 இடங்களில், 359 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கான கட்டுப்பாட்டு அறை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வட சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் இன்று தொடங்கிவைத்தார். இதில் துணை கமி‌ஷனர் சாய்சரண் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 3-வது கண் என்று அழைக்கப்படும் கேமராக்கள் எந்தெந்த வகையில் பாதுகாப்பாக உள்ளன என்பது பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

    ×